சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்

 

01.

கமலா: என் கணவர், நடு ராத்திரி வந்த திருடனைப் பிடிச்சிட்டாரு

விமலா:நடு இரவிலா ? அப்ப எப்பிடி முழிச்சிக்கிட்டு இருந்தார்?

கமலா:பகலில்தான் அவர் ஆபீசிலிலை தூங்கியிடுவாரே!

 

02.

தறுமு: மாப்பிளைக்கு கொஞ்சம் வயசாகி இருக்கலாம். அதுக்கு பொண்ணுவீட்டுக்காறாங்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது!

சோமு: ஏன்? என்ன பேசினாங்கள்?

தருமு:மாப்பிளைக்கு என்ன போடுவீங்க என்று கேட்டால் 'ஒரு பல் செட் போடுறம்' எண்டு சொல்லுறாங்கள்.

 

03.

மகன்:அப்பா நான் மேல படிக்க ஆசைப்படுறேன்.

தந்தை:அப்படியா! நல்லது. மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில ஒரு ரூம் கட்டித் தரச் சொல்லுறேன்.

 

04.

சிறுவன்:தாத்தா, இனிமே கொம்பியூட்டர் படிச்சால்தான் வேலை கிடைக்கும்!

பெரியவர்:அப்ப .. நீ படிச்சா கிடைக்காதா ?

 

05.

நோயாளி: மசாலைதோசை, மைசூர் போண்டா, எல்லாம் தின்னக்கூடாது என்று என்னைச் சொன்னது என்ரை உடல்நலத்துக்குத் தானே டொக்டர்?

டொக்டர்: ஆமாம்,இதில என்ன சந்தேகம்?

நோயாளி:இல்ல, பொறாமையில் சொல்லுறிங்களோ எண்டு நினைச்சன்...!

 

06.

கவுண்டன்: என் பெண்டாட்டிய என்ன செய்யிற எண்டு தெரியேல்லை.?

செந்தில்:ஏன் என்ன பண்ணுறாங்க?

கவுண்டன்: நான் எத செஞ்சாலும் குறுக்க நிண்டு சண்டைக்கு வாறா.

செந்தில்: இதுக்கு ஒரே தீர்வாய் ,ஒருமுறை கார் ஒட்டிப் பாருங்கண்ணே!

 

07

விருந்தினர்:உங்க குடும்ப போட்டொவில உங்களுக்குத் பக்கத்தில பரதேசிகள் மாதிரி மூண்ணு  பேர் நிக்கிறாங்களே,அவங்கள்  யார்?

வீட்டுக்காரி: உஷ்!கேவலமாய் பேசாதீங்க... இவரு ஆயுள் பூராவும் குடும்ப சாஸ்திரியார். அவரு குடும்ப பூசாரி.மற்றவர் குடும்பப் பிச்சைக்காரர்.

 

08.

நீதிபதி:போலீசுக்காரரை எதற்காக அடித்தாய்?

கைதி:என் வழியில குறுக்கிட்ட தாலதாங்க அடிச்சேன்.

நீதிபதி: அதெப்படி?

கைதி:ஜெயிலிலை இருந்து தப்பி ஓடுறபோது தடுத்தாங்க...

 

09.

அரசியல்வாதி 01;உங்க ஆட்சியில சுரங்கப் பாதை அமைச்சதுக்காகவா உங்க மேல வழக்குப் போட்டிருக்காங்க?

அரசியல்வாதி 02;ஆமாங்க! என்னுடைய பெரிய வீட்டிலிருந்து சின்ன வீட்டுக்குப் போய்வாற மாதிரி சுரங்கப் பாதையை அமைச்சிருந்தேன்.

 

10.

நிருபர்: உங்க புதுப்படத்திற்கு "எங்கேயோ கேட்ட கதை"என்று ஏங்க பேர் வைச்சீங்க?

தயாரிப்பாளர்: எல்லாம் ஒரு தற்பாதுகாப்புக்கு த்தான்.

 

தொகுப்பு:செமனுவேந்தன்

 

 

0 comments:

Post a Comment