"தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 07

பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது" [தமிழிலும் ஆங்கிலத்திலும் / In English and Tamil]



நீண்ட கால மனித வரலாற்றில், எமது உணவின் முக்கிய மூலப் பொருட்கள் அவ்வளவாக மாற்றம் அடையவில்லை என்றும், ஆனால் அவை தயார் செய்யப்பட்ட விதம் அல்லது சமைக்கப்பட்ட முறைதான், எமது தாவர, விலங்கு  இனங்கள் முழுமையான மற்றம் அடைய வழிவகுத்தது என்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக (Harvard University)  பேராசிரியர் ரிச்சர்ட் வரங்ஹம் நம்புகிறார். எமது பழைய கற்கால முதாதையர்கள் தவறுதலாக தமது புலால் உணவை நெருப்பில் போட்டு இருக்கலாம். அதை பின் ஒருவாறு தட்டி எடுத்து உட்கொள்ளும் போது, அது இன்சுவை மிகுந்த ஒன்றாக மாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கலாம். அதுவே உணவை சமைத்து உண்ணும் - ஒரு புது திருப்பத்தை - ஏற்படுத்தி இருக்கலாம். மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு என்பது உணவைச் சமைத்து உண்பதும், மனித இனத்தின் தகவல் பரிமாற்ற மொழியும் தான். முக்கியமாக சமைப்பது என்பது, மொழியையும் விடவும் கூட தனித்துவமானதாக, சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் எந்த விலங்கும் உணவை சமைத்து உண்பதில்லை. கிடைப்பதை அப்படியே விழுங்கி வைக்கிறது. மனிதன் மட்டுமே விலங்கினத்தில் உணவை சமைத்து உண்கிறான். மனித இனம் தான், கொதிக்க வைத்து, சுட்டு, பொரித்து, வறுத்து, இப்படி எல்லாம் செய்து சாப்பிடுகிறது. மொழி / குரல் வளத்தில், மற்ற விலங்குகள், தொடர்புக்காக, மிரட்ட அல்லது  தன் உணர்வைக் காட்ட குரைக்கின்றன, கனைக்கின்றன, உறுமுகின்றன, ஊளை யிடுகின்றன அல்லது ஏதாவது ஓர் ஒலியை எழுப்பி தகவலை பரிமாறுகின்றன. இதுதான் இயற்கை. சமைத்து உண்பது இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று. இந்த விடயம் தான் நாகரிகத்தின் இதயமாக வரலாற்றில் கருதப்படுகிறது. என்றாலும் துவக்க காலத்தில் பச்சை இலை தழைகளையும். பழங்களையும் உண்ட மனிதன் எப்போது சமைத்து உண்ணத் தொடங்கினான் என்பது துல்லியமாகத் தெரிய வில்லை. துவக்க கால மனிதன் - முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில்ஹோமினிட்  (Hominids),  என்று சொல்கிறார்கள் - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், முன்பு கூறியவாறு, எப்படியோ மாமிசத்தை நெருப்பிலிட்டு உண்டிருக்கிறான். பின் சுட்டிருக்கிறான். அவன் கொன்ற விலங்கு தற்செயலாக காட்டுத்தீயில் மாட்டி சுடப்பட்டு கூட இருக்கலாம்? அப்படி சுடப்பட்ட மாமிசம் பல்லுக்கு மிக மெதுவாக இருந்ததுடன், நாவுக்கும் சுவையாகவும் இருந்திருக்கிறது. அது மட்டுமா? அந்த மாமிசம் வழக்கமான பச்சை மாமிசத்தை விட, மிக எளிதில் சீரணமும் ஆகிவிட்டது. ஆகவே, முதல் சமையல்காரர் என்பவர் தற்செயலாக எதிர் பாராமல் தான் உருவாகி இருப்பார். அது பெண்ணா, ஆணா, என்பதும் தெரியவில்லை. ஆனால் சமைத்து உணவை உண்பது என்பதை மனிதன் தவிர வேறு எந்த விலங்கும் செய்ய வில்லை. இந்த சமையல் தான் மனிதனின் பரிணாமப் பாத்திரத்தில் பெரும் பங்கு வகிப்பதாகும். அன்றில் இருந்து அவர்கள் எரியும் நெருப்பை சுற்றி கூடியிருந்து, அதிகமாக தமது தொன்மையான, பண்டைய வடிவ  கேபப் [kebab] செய்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து பல்லால் அரைத்து அல்லது சப்பி உட் கொண்டிருப்பார்கள். உண்ணுதலை சூடாமணி நிகண்டு,

 


"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும் மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே"

 

என கூறுகிறது. இந்த செய்யுள் மூலம் உண்ணல் வகையில் கடித்துண்பது, நக்கியுண்பது, பருகியுண்பது, விழுங்கியுண்பது, சப்பியுண்பது என பலவகை உண்டு என அறிவதுடன் தமிழர்களுக்கு சுவையான உணவுகளை எப்படி சமைக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அவற்றை எப்படிச் சாப்பிடுவது என்றும் தெரிந்து இருந்ததை காண்கிறோம். மேலும் அருந்துதல் [அருந்தல் , குடித்தல், பருகல்], உண்ணுதல் [உண்ணல், துற்றல், தின்றல்], உறிஞ்சுதல் [உறிஞ்சல்], உணவை சுவைத்து மகிழுதல் [துய்த்தல்], நக்கல் [நக்கல்], முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல் [நுங்கல்], மெல்லுதல் [மெல்லல்], விழுங்குதல் [விழுங்கல்] மற்றும் பல சொற்கள் தமிழில் காணப்படுகின்றன. இந்த வார்த்தைகளை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில் பயன்படுத்துகிறோமா என்று தெரியாமல் பேசுகிறோம். ஒவ்வொரு சொல்லும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. மேலும் திரு.இரா.வேங்கடகிருட்டிணன் அவர்கள் 'தமிழே முதன் மொழி' என்ற நூலில், உணவு உட்கொள்ளும் வகைக்கு தமிழில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதில் "சப்புதல்" என்ற சொல்லையும் தருகிறார். அதில் இருந்து தான் சாப்பாடு என்ற சொல் திரிந்தது என்கிறார்.  சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு ஆகும்.

 


அவர்கள் இந்த சப்பி சாப்பிடும் சாப்பாட்டை அதன் பிறகு தொடர்ந்து இருக்கலாம். இப்படி சமைத்த சாப்பாடு, இந்த முன்னைய மனித இனம் சமைக்காத மூலப்பொருளை பல்லால் கொறித்து கொறித்து சாப்பிடுவதிலும் அதை ஜீரணிப்பதிலும் பார்க்க குறைந்த நேரத்தை செலவளிப்பதற்கு வழி சமைத்தது. இது மற்றவைகளை செய்ய, உதாரணமாக கூடிப்பழக, போதுமான காலத்தையும் பலத்தையும் கொடுத்தது. இந்த ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டும் கூடிப்பழகும் செயல் அல்லது அறிவுத்திறன், மிகவும் பலம்வாய்ந்த மூளையை மேம்படுத்த அந்த முன்னைய மனித இனத்தை தூண்டியது. சமைத்த உணவு அதற்கு தேவையான சத்தியை, கலோரியை கொடுத்தது. எம்மை ஒரு அறிவுத் திறன் படைத்த மனிதனாக வளர்ச்சி பெற இந்த சமையல் இடம் கொடுத்தது. சமைத்தலில் உள்ள மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நெருப்பைக் கண்டு பிடித்ததும், அதனைக் கட்டுப் படுத்தியதும் தான். இந்த நெருப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் முன்னைய மனித இனம் சமைக்க மட்டும் அல்ல, குளிர் காயவும் வழிசமைத்தது. மேலும் நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும் கருதப்படுகிறது. நாம் சமைக்காத பச்சை உணவு சாப்பிட்டு இருந்தால், எமது உடல் அளவையும் எமது மூளை வைத்திருக்கும் நியூரான்களையும் [neurons], பராமரிக்க, குறைந்தது 9 மணித்தியாலத்திற்கு மேலாக நாம் சாப்பிட வேண்டி இருந்து இருக்கும். - மூளையின் அடிப்படை துகள்கள், நியூரான்கள் ஆகும். தகவல்களை உடலின் பாகங்களுக்குக் கொண்டு செல்வது இந்த நியூரான்கள் தான். அனைத்துத் தகவல்களும் மின் சைகைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது. - ஆகவே இந்த நெருக்கடியை தாண்ட சமைத்த உணவு ஹோமோ எரக்டஸ் (Homo erectus) இற்கு உதவியது. இதனால் சமூக கட்டமைப்பை கட்டமைக்க அவர்களுக்கு நேரம் மிகுதியாக இருந்தது. சமையலை எதோ எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்று என நம்புகிறோம். ஆனால், இந்த சமையலை நாம் அறிந்துகொள்ளா விட்டால், நாம் இன்னும் சிம்ப்பன்சி போன்றே காட்சி அளிப்பதும் மட்டும் இன்றி, அவை போன்றே ஒரு நாளின் பெரும் பகுதியை உணவை சப்பிக் கொண்டு இருப்பதற்கு செலவழித் திருப்போம். அது மட்டும் அல்ல, ஒரு சராசரி மனிதன் வாழ, தனக்கு தேவையான கலோரியை [உணவினால் உடலுக்குக் கிடைக்கும் சக்தியின் அளவு / calories] பெற, குறைந்தது 5 கில்லோ பச்சை உணவை சாப்பிட வேண்டி இருந்து இருக்கும்.

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி : 08 தொடரும்…

 👉அடுத்த பகுதியினை வாசிக்க ... அழுத்துக 

Theebam.com: தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 08:

 👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 

FOOD HABITS OF TAMILS / PART 07 "FOOD HABITS OF PALEOLITHIC PERIOD-CONTINUING"

 


Harvard Professor Richard Wrangham believes that it is not so much a change in the ingredients of our diet, but the way in which we prepare them that has caused the radical evolution of our species. Our ancestors most probably dropped food in fire accidentally & they would have found it was delicious and that set us off on a whole new direction. Since then they may Gathered around a blazing fire, probably made first archaic kebab, munching cooked meat and might share it and may be planed to continue there after. Eating cooked food allowed these early hominids to spend less time gnawing on raw material and digesting it, providing time and energy to do other things instead, like socialize.The strenuous cognitive demands of communicating and socializing forced human ancestors to develop more powerful brains, which required more calories - calories that cooked food provided. Cooking, in other words, allowed us to become human.The control of fire allowed early hominids to not only cook their food, but obtain warmth, allowing them to shed body hair and in turn run faster without overheating; to develop calmer personalities, enabling social structures around the hearth and even to form relationships among men and women - In short, to become human. If we ate an only raw diet, to maintain the body size we humans possess, as well as the number of neurons our brains possess, people would have to eat for more than 9 hours per day. Cooked food allowed Homo erectus to overcome these limitations. As a consequence, more time was available for social structure to develop. Cooking is something we all take for granted but a new theory suggests that if we had not learned to cook food, not only would we still look like chimps but, like them, we would also be compelled to spend most of the day chewing. Without cooking, an average person would have to eat around five kilos of raw food to get enough calories to survive.

 

Tamils ​​do not only know how to cook delicious food. He knew how to eat them and had a variety of beautiful Tamil words for it. Here are those words

 


Drinking [அருந்தல் , குடித்தல், பருகல்], Eating [உண்ணல், துற்றல், தின்றல்]  Sucking [உறிஞ்சல்], taste and enjoy the food [துய்த்தல்], Lick [நக்கல்], devouring [நுங்கல்],  Chewing [மெல்லல்], Swallowing [விழுங்கல்] and so on. We use these words everyday. But we speak without knowing whether we are using these in the right places. It is the specialty of Tamil that each word is given according to its nature. Here I have also pointed out the method of using the words given for eating.

 

Drinking [அருந்தல் / குடித்தல் / பருகல்] = intake of liquid or liquid food (E.g .: 'took medicine' / மருந்து அருந்தினான் / drank porridge / கஞ்சி குடித்தான் / he drank yogurt drink / மோர் பருகினான்).  Eating [உண்ணல் = துற்றல்] Indicates intake (e.g. Full-fed / வயிறார உண்டான்). Sucking [உறிஞ்சல்] = The word refers to the intake (e.g Sipping a drink through a straw / Sucked water with). தின்றல் = திற்றி Also known as திற்றில். It also refers to the feeding of living beings / இச்சொல் கொறித்தலையும் அஃறிணை உயிர்கள் தீனி கொள்வதையும் குறிக்கும் (e.g He ate a kind of short eat / முறுக்குத் தின்றான்). துய்த்தல் = taste and enjoy the food (eg:பல்சுவைப் பண்டம் துய்த்தான்). Lick [நக்கல்] = pass the tongue over (something) in order to taste e.g Licked with honey. devouring [நுங்கல்] = rushing to grab the whole thing in one mouth / eating food or prey hungrily or quickly. The word refers to the intake (e.g the wolf is a devouring beast). Chewing [மெல்லல்] = chewing and swallowing a piece of food / கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்வதை இச்சொல் குறிக்கும். Swallowing [விழுங்கல்] = The act or process of swallowing food (e.g. swallowed the pill / மாத்திரை விழுங்கினான்)

 

Sudamani Nigandu also describe about five type of foods, which human consumes by biting with teeth, licking, drinking, Swallowing and Slow Tasting. Also Mr. Ira Venkatagiruttinan in his book  'தமிழே முதன்மொழி / Tamil is the first language' mentions that there are more than twenty five words in Tamil for type of food intake and also gives the word "சப்புதல் / sapputhal", from which Tamil words for meal developed as: சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு

 

Thanks

 

[Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]

 

PART : 08 WILL FOLLOW


0 comments:

Post a Comment