"தமிழரின் உணவு பழக்கங்கள்" -பகுதி: 05

"பழைய கற்கால உணவு பழக்கங்கள்" [இன்றில் இருந்து, 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் 10,000 ஆண்டுகளுக்கும் இடைப் பட்ட பகுதி / between 2.5 million and 10,000 years ago] [ஆங்கிலத்திலும் தமிழிலும் / In English and Tamil]மனிதன் அனைத்துண்ணியாக [தங்களுடைய முதன்மை உணவாக தாவரம், விலங்குகள் ஆகிய இரண்டையும் கொள்ளும் உயிரினங்கள்] இன்று இருந்தாலும், அவன் அடிப்படையில் புலாலுண்ணுபவனாகவே பல மில்லியன் வருடங்களாக இருந்தான் என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளார்கள். அவன் தொடக்கத்தில் இருந்து கிட்டத் தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அதாவது புதிய கற்காலம் வரை, மனிதன் ஒரு நாடோடியாக, வேட்டையாடியும் காட்டு பழங்களையும் மரக்கறிகளையும் பொறுக்கி யெடுத்தும் வாழ்ந்தான். இடைக் கற்காலத்தை அடுத்து, வேளாண்மைத் தொழில் நுட்பத்தின் எழுச்சியுடன் உருவான, புதிய கற்காலத்தில், நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்பு தோன்றி, அவன் ஓர் இடத்தில் குடியேறி வாழத் தொடங்கினான். அவனின் உணவு பழக்கங்களில் முதலாவது வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. கால்நடை வளர்ப்பு அவனுக்கு தொடர்ந்து ஊனுணவு [இறைச்சி] கிடைக்க வழிசமைத்தது. தொடக்கத்தில் செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. பின்னர் இவற்றுடன், மாடுகளும், பன்றிகளும் சேர்க்கப்பட்டன. புதிய கற்காலத் தொடக்கத்தில், வேளாண்மை பயிர்கள், காட்டுத் தானியங்களாயினும், நாட்டி வளர்க்கப்பட்டவை ஆயினும், குறைந்த அளவு வகையினமாகவே இருந்தன. இவை சில வகைக் கோதுமை, கம்பு [Pennisetum glaucum, Pearl Millet / ஒரு தானியம்], வாற்கோதுமை [பார்லி] போன்ற தானியங்களை உள்ளடக்கியிருந்தன. அதன் பின் பருப்பு, பட்டாணி போன்ற பயறு வகைகளும், இறுதியாக, மரக்கறிகளும் பழங்களும் வளர்க்கப்பட்டன. இடைக் கற்காலஞ் சார்ந்த வேட்டையாடி உணவு சேகரிப்பவர்களுடன் ஒப்பிடும் போது, இந்த வேளாண்மை - கால் நடை பண்ணை மனிதனின், உணவு வகை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. ஏனென்றால், ஒரு சில மிருகங்களே வீட்டு மிருகமாக மற்ற முடியும் என்பதாலும், அதே போல சில தானியங்கள், மரக்கறிகள் மாத்திரமே பயிர் செய்யக் கூடியதாக இருந்ததாலும் ஆகும். இந்த - எமது முதாதையரின் வாழ்க்கையின் அடிப்படை மாறுபாடு, அதன் தடயத்தை எம்மிடம் விட்டுச் சென்றுள்ளது. முதலாவதாக, இது மனிதனின் ஆரோக்கியத்தை பாதித்தது. பெரும்பாலும் அங்கு விவசாயத்தில் நிலவிய ஒரே வகை பயிர் செய்யும் போக்கு, மக்களின் உணவுகளில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டது. அது மனிதனின் உயிர் வாழும் காலத்தை குறைத்தது. முன்னைய, பழமையான மனிதன் இயற்கையுடன் ஒன்றியும் அதனுடன் சமநிலைத் தன்மையுடனும் வாழ்ந்தனர். அவனது இயற்கை உணவு, காலநிலையுடன் அல்லது மற்ற இனங்களின் இடம் பெயர்தலுடன் ஒன்றி, தனது முன்னைய இடத்தில் இருந்து வேறு ஓர் இடத்திற்கு அசையும் போது, அவனும் அதனுடன் சேர்ந்து இடம் பெயர்ந்தான். ஆனால், ஓர் இடத்தில் அவன் நிலையாக குடியேறிய போது, மனிதன் தனக்கு தானே சில புதிய வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைத்  திணித்தான்.

 


பழைய கற்காலத்தில், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழக்கத்தினை கொண்ட அந்த ஆதிகாலத்து மனிதனின் உணவு பொதுவாக அங்கு நிலத்தில் வாழும் உயிரினங்களும் அங்கு தானாக முளைத்த தானியங்களும், பழங்களும் ஆகும். தொல்லுயிர் எச்சம் அல்லது புதை உயிர்ப் படிவ ஆதாரங்கள் இவர்களின் நாளாந்த உணவு அதிகமாக ஊன் [புலால்] உணவு என எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக இவர்கள் ஊட்டச்சத்து அதிகம் உள்ள மிருக இறைச்சி பகுதிகளான ஈரல், சிறு நீரகங்கள், மூளைகளை [liver, kidneys, and brains] விரும்பி உண்டார்கள். இந்த கற்கால மனிதர்கள் பால் உணவுகளை பெரிதாக சாப்பிடவில்லை. அத்துடன் அதிக மாவுச்சத்து [கார்போஹைட்ரேட்] உணவுகளான அவரை, அரிசி, கோதுமை, சோளம் [wheat, corn, rice…] போன்றவையையும் சாப்பிட வில்லை. இந்த பழைய கற்கால வேடர்களின் உணவின் தொகுதியில் கிட்ட தட்ட 2/3 பகுதி சக்தி மீன், மட்டி [fish and shellfish] உட்பட ஊன் உணவில் [இறைச்சியில்] இருந்தும், எஞ்சிய 1/3 பகுதி மட்டுமே தாவர உணவில் இருந்தும் எடுக்கப் பட்டுள்ளன என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆகவே கற்கால மனிதர்கள் கூடுதலாக புரதத்தையும் குறைவாக மாவுச் சத்தையும் எம்மை விட சாப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கொழுப்பு சத்தை எம் போலவே உட் கொண்டார்கள். ஆனால், கொழுப்பின் வகை பரந்தளவில் வேறுபடுகின்றன. உதாரணமாக விவசாயத்திற்கு முன்னைய மனிதனின் ஒமேக 6 கொழுப்பு அமிலம் / ஒமேக 3 கொழுப்பு அமிலம் (Omega-3 & 6 fatty acids) விகிதம் 3:1 ஆக இருந்துள்ளது, ஆனால் இன்றைய பெறுமானம் 12:1 ஆகும். அத்துடன் அன்றைய மனிதன். தானியங்களை விட, பழங்களும் மரக்கறிகளும் மட்டுமே உட்கொண்டதால், மாவுச் சத்து அவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது. விவசாய புரட்சிக்கு பின்பு தான் கோதுமை, அரிசி மற்றும் அது போன்ற தானியங்கள் மனிதனின் நாளாந்த உணவாக வந்தன.

 

ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்கள் முழுவதும் பெரிய பாலூட்டிகள் அழிந்து போனதால், இலகுவாக வேட்டையாடக் கூடிய மிருகங்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டதால், இந்த வேடுவர்கள் தமது உணவையும் உணவு பழக்கங்களையும் குறிப்பாக, தாம் செறிந்து வாழும் இடங்களில் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது . இந்த சூழ்நிலை மாற்றம், உணவு சார்ந்த தாவர விவசாயங்களுக்கு அடிகோலியது. இந்த மாற்றத்தின் பின், மாவுச் சத்து முன்னைய மனிதனின் உணவில் வழக்கமான அம்சமாகியது.

 


மனிதன் அற்ற, எல்லா வாலில்லாக் குரங்குகளும் அல்லது மனிதக் குரங்குகளும் அடிப்படையில் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், உண்ணும் தாவர உண்ணிகளாகும். ஒராங்குட்டான், கொரில்லா [Orangutans and gorillas] போன்றவை தாவர உண்ணிகளே , எனினும் சிம்ப்பன்சி [chimpanzee] அதிகமாக, குறைந்தது 90% தாவர உண்ணியாக இருப்பதுடன், இதன் வேட்டையாடும் திறனும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் ஆண் சிம்ப்பன்சி, பெண்ணை  விட பெரும்பாலும் அதிகமாக புலால் உண்ணக் கூடியது. இங்கு ஒரு மிக சுவாரஸ்யமான விடயம் அதனின் பிடரிப்புடைப்பு அல்லது தலையின் பின்புற முகடு "occipital ridge" ஆகும். அதாவது கொரில்லாவின் கூம்பு வடிவத் தலை ஆகும். மிகவும் பலமான தாடை தசைகளை [jaw muscles] தாங்கிப்பிடிக்க occipital ridge உண்டாகினது. ஒரு நாள் முழுவதும் பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகளை சாப்பிடுவது அவ்வளவு இலகுவல்ல. அதற்கு பலமான தாடை தசைகள் தேவைப் படுகின்றன. ஏறத்தாள 2.4 மில்லியன் வருடங்களிற்கு முன், மனிதன், குரங்கில் இருந்து பிரிந்து, இந்த occipital crest ஐயும் இழந்தான். இதனால் நாள் முழுவதும் தாவரங்களை சாப்பிடுவது கடினமாகியது. ஆகவே அந்த முதல் மனிதனுக்கு தகுந்த இரை தேடும் திறமை தேவைப்பட்டது. அப்பொழுது இந்த மனித இனம் கூடுதலாக புலாலுணவும் மிக குறைந்த அளவு தாவரங்கள் உணவும் சாப்பிடத் தொடங்கின. அத்துடன் பின்மண்டை மேடை  [occipital ridge ஐ] இழந்ததால் பெற்ற மேல் அதிகமான இடம், மூளை வளர்ச்சிக்கு தேவையான மேல் அதிகமான இடத்தை கொடுத்தது [The loss of the occipital ridge created increased space for brain development].


நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி : 06 தொடரும்...

 📃அடுத்த பகுதியை வாசிக்க... அழுத்துக... 

Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்" பகுதி : 06:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க...

 Theebam.com: "தமிழரின் உணவு பழக்கங்கள்"பகுதி: 01:

 

"FOOD HABITS OF TAMILS" / PART: 05 "Food habits of Palaeolithic age" [between 2.5 million and 10,000 years ago]

 


Historians are unanimous in stating that although man is omnivorous, he has been essentially carnivorous for millions of years. From the beginning and up to the Neolithic Period, approximately 10 000 years ago, man was a nomad who lived by hunting and picking wild fruit and vegetables. During the Neolithic Age, as these men became more and more sedentary, man’s eating habits suffered the first of the dramatic changes to come. Animal breeding allowed him to continue to have meat to eat (although not exactly the same kind of meat) while the development of agriculture let him plant his own food and produce cereals (wheat, rye, barley …, later on pulses (lentils, peas…) and lastly, vegetables and fruit. Compared to the hunter - food pickers of the Mesolithic Age, the farmer - cattleman had considerably reduced the variety of the food he ate. In fact, very few animals could be domesticated or bred and only certain vegetables could be grown. This revolution in our ancestors’ lifestyle left its mark. Firstly, it affected human health. As a result of the tendency to grow one sole crop, people’s diets became deficient; that which shortened their life span. Primitive man lived in harmony and in balance with nature. When he moved from one place to another with the different species ’migratory movements or with the seasons, his natural food too change as well. Upon becoming sedentary, man imposed new limitations and restrictions on himself.

 

During the Palaeolithic period of the Stone Age, humans were hunter - gathers whose diet foods included both the animals and plants that were part of their natural environment. Fossil evidence from groups of hunter - gatherers suggests that the daily diet came mainly from animal based foods. In particular, they enjoyed animal organ meats like the liver, kidneys, and brains - meat foods that are extremely rich sources of nutrition. Stone Age humans didn't consume much dairy food, nor did they eat high carbohydrate foods such as beans and cereal grains (wheat, corn, rice…). Latest studies into the composition of Palaeolithic hunter - gatherer diets show they obtained about two - thirds of their energy intake from animal foods, including fish and shellfish and only one - third from plant foods. Stone Age humans ate more protein and less carbohydrate than we do now. Their fat intake was similar to today but the type of fat was vastly different. For example, the average Omega-6 / Omega-3 ratio in pre-agricultural humans was about 3:1,compared to about 12:1 today. Carb intakes were lower as the main plant foods were fruits and vegetables rather than cereals. It was only after the agricultural revolution that wheat, rice, and other cereal grains became a regular feature of the early hunter gatherer diet. With the extinction of large mammals throughout the continents of Europe, Asia, and North America, and the depletion of easily hunted animals, hunter gatherers had to modify their diet and eating habits, especially in more densely occupied areas. This changing environment helped to create the agricultural revolution and the cultivation of plant - based foods. After this switch in human behaviour, carbohydrates would become a regular feature of the early human diet.

 

All non-human apes are basically vegetarians. Orangutans and gorillas are peaceful vegetarians. browsing fruits and leaves in trees. chimpanzee are mostly vegetarian, usually at least 90%, but they will eat meat once in a while - Males are more likely to eat meat than are females - although chimp hunting skills are relatively poor. These Gorillas and macaques, share large crests on their skulls to which their heavy jaw muscles attach. Such structures are notably absent from human skulls despite our fairly close genetic kinship with gorillas. It’s not easy to eat plants all day long. You need strong jaw muscles like them. But 2.4 million years ago, humans split from other apes and lost the occipital crest. A mutation 2.4 million years ago could have left us unable to produce one of the main proteins [a protein called MYH16] in primate jaw muscles, This made it harder to eat plants all day and required better foraging skills. At this time, humans or Homo started eating a lot more meat and a lot less plants. The occipital ridge was lost because believe it or not, it’s easier to eat meat than it is to eat plants all day. The loss of the occipital ridge created increased space for brain development.

 

Thanks

[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]

 

PART : 06 WILL FOLLOW


0 comments:

Post a Comment