'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'

   'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நினைவில் அகலா  நெல்லு சோறு
நிறைவு கொள்ளும் நெல்லு சோறு
நிலா ஒளியில் நெல்லு சோறு !"

"அத்தான்  அறுவடை செய்த நெல்லு
அத்தை வேகவைத்த  கூட்டாஞ் சோறு
அழகாய் பாத்தியால் சுமந்த சோறு
அன்பாய் இருவரும் உண்ணும் சோறு!"

"வேப்பமர குச்சியால் பல் விளக்கி
வேக தண்ணியில் வாய் கொப்பளித்து
வேட்டி தலைப்பில் வாய் தொடைத்து
வேங்கை நிழலில் பரிமாறிய சோறு!"

"ஓடும் நீரில் கால் நனைத்து
பாடும் குயிலின் இன்னிசை ரசித்து
சுடும் சோறை தயிரில் பிசைத்து
கடும் காற்றில்  ஊட்டிய சோறு !"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment