2300 களில் மனிதன்


See full size imageசமீப காலத்து நுண் தொழில்நுட்ப (nanotechnology) அபரிதமான வளர்ச்சி, இன்னும் 300 வருடங்களில் நாம் கற்பனையே செய்து பார்க்கமுடியாத அளவுக்கு மனிதனை இட்டுச்செல்லும் என்று விஞ்ஞானிகள் உய்த்தறிந்து கூறுகின்றார்கள். அக்காலத்து மனிதன் ஒரு கடவுள்தானோ என்று வியக்கும் அளவுக்கு அபார சக்தியுடையவனாக இருப்பான். அவனின் சில சிறப்பியல்புகள் பின்வருமாறு அமைந்திருக்குமாம்:
🖧 உணவு, தண்ணீர் ஒன்றுமே தேவை இல்லை; சுற்றாடலில் உள்ள பலவிதமான சக்திகளையும் அவனது உடலில் உள்ள ஒளித்தொகுப்புச் செய்யவல்ல (photosynthetic) மின்காந்தத் தோல்கள் (piezoelectric) உறுஞ்சி எடுத்துக் கொள்ளும்.
🖧எதிரில் இருப்பவர் நினைப்பது, உணர்வதை அறிந்து கொள்வான் (telepathy).
🖧 பழைய சம்பவங்களைத்  திரும்பக் கொணர்ந்து நடத்திக் காட்டுவான்.
🖧 உயிரித் தொழில்நுட்பத்தினால் (biotechnology ) உயர்த்தப்பட்டுள்ள உடம்புக்கு நித்திரை தேவை இல்லை. 
🖧 தூரத்தில் உள்ளவர் இரகசியமாகக் கதைப்பதை, இடைச்சத்தங்களை வடித்தொதுக்கி கிரகித்துக் கொள்வான்.
 🖧வெறும் கண்களினால் சிறு அணுக்களையும், தொலை நட்சத்திரங்களையும் பார்ப்பான் (microscopic & telescopic visions ).
🖧 அசுர வேகத்தில் பயணம் செய்து எரிமலையோ, என்ன தடையோ எல்லாவற்றையும் தாண்டிவிடுவான்.
🖧 ஒரு பொருளைத் தொட்டோ, ருசித்தோ அது என்ன இரசாயனக் கலவை என்று கண்டுபிடிப்பான்.
🖧 இருவர் இணையும்போது இருவரின் கூட்டுச்சக்திகளும் பரிமாறப்பட்டு ஒன்றாகப் பிரயோகிப்பான்.
🖧 காலநிலைகளைக் கட்டுப் படுத்துவான். வெளிச்சம், இருட்டு, மழை, புயல் எல்லாம் விருபியபடி மாற்றிக்கொல்வான்.
🖧 பொருட்களை மறைத்து இன்னோர் இடத்தில் தோன்றச் செய்வான் (teleportation).
🖧 தன் உடல் வெப்பத்தினாலே பெரு நெருப்பை உருவாக்கி உயர் தொழில் நுட்ப உபகரணங்களை இயக்குவான்.
🖧 நிரந்தர வீடு தேவை இல்லை. தற்காலிகமான பெட்டிகளே தேவை.
🖧 அவன் உடம்பும் நிரந்தரம் இல்லை. அடிக்கடி உலகாந்த (real world) அல்லது எண்கணன (degital) சுற்றாடல் உடல்களுக்கு மாறிக்கொண்டே இருப்பான்.
🖧 உலகம் முழுவதுமே ஒரு இராட்சத கணினியாக இருக்க, ஒவ்வொரு மனிதனும் தேவைக்கேற்ப விரும்பிய கணனியுடன் தன் உடலைப் பொருத்திக் கொள்வான்.
🖧 துப்பாக்கிக் குண்டோ வேறெதுவோ உடலினுள் பாய்ந்து வெளியே வந்தாலும் அவன் உடலுக்கு எதுவித பாதிப்பும் இருக்காது.
🖧 உடலைத் தேவையானபடி சிறிய, பெரிய அளவுக்கு எந்த வடிவத்துக்கும் மாற்றுவான்.
🖧 மின்காந்த அதிர்வுகளால் எந்தப் பொருளையும், எங்கிருந்தாலும் செயல் இழக்கவும், இயக்கவும் செய்வான்.
🖧 உடம்பின் உணர்விகள் 360 பாகையும், 24 / 7 நேரமும் எல்லாவற்றையும் பார்க்கவும் உணரவும் செய்யும்.
🖧 சக்தி சொட்டுத் தத்துவம் (quantum theory), சிந்தனா சக்தி (thought energy) என்பனவற்றால்  அவன் ஓரிடத்தில் மறைந்து இன்னோர் இடத்தில் தோன்றுவான்.
🖧 ஒரு மாறுபட்ட மனநிலையில் புகுந்து, சக்திச்சொட்டு வெற்றிடத்தில் ஒரு பூச்சிய சக்தியை வரவழைத்து வான வெளியில் அந்தரத்தில் நடப்பான்.
மிக மிக வினோதம் தான். ஆனால் இவற்றை எல்லாம் பார்ப்பதற்கு நாங்கள் ஒருவரும் இருக்க மாட்டோம். சிலவேளை அவர்கள் எங்களில் சிலரை வரும் காலத்திற்குக் கூப்பிடக்கூடும் (back to the future).அப்படி ஒரு வாய்ப்பு வருமா?
ஆக்கம்:-செல்வத்துரை சந்திரகாசன்

3 comments:

 1. விண் நாணத்தின் விந்தைகள் இன்னும் எத்தனை எத்தனையோ!!!

  ReplyDelete
 2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, October 19, 2012

  சந்திரகாசனின் ஐந்து பாகங்களை கொண்ட விரிவான "THEORIES AND PREDICTIONS UP TO 2500:[Futuristic view of our world up to the year 2500 By Selva Santhiragasan]" என்ற ஆங்கில கட்டுரையை முழுமையாக வாசித்தவன் என்பதால்,அந்த நீண்ட கட்டுரையினது இந்த சிறு துளிகளுக்கு நானும் சுருக்கமாகவே மறுமொழி இடுகிறேன்.

  ஒரு மனிதனின் அதீத கற்பனை தான் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதல் படி.
  இதையே Albert Einstein என்ற இந்த நூற்றாண்டு விஞ்ஞானி இப்படி கூறியுள்ளார்.
  "I believe in intuition and inspiration. Imagination is more important than knowledge. For knowledge is limited, whereas imagination embraces the entire world, stimulating progress, giving birth to evolution. It is, strictly speaking, a real factor in scientific research."

  ஆகவே இது அவரின் அதீத கற்பனையாகவோ,அல்லது ஒரு நுண் அறிவாகவோ,அல்லது இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம்.

  எப்படியாயினும் முழுக்க முழுக்க கற்பனையாக இதை சொல்லியிருக்க மாட்டார்.ஏன் என்றால் அவர் ஒரு பொறியியல் பட்டதாரி,பொறியியலாளராக இன்னும் வேலை செய்பவர் .
  மிகவும் பழமை வாய்ந்த மகாபாரதத்தில் அணுக்குண்டை பற்றியும் இராமாயணத்தில் விமானத்தை பற்றியும் "2500" ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்கள். அது மட்டும் அல்ல அணுக்குண்டின் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளையும் நுணுக்கமாக கூறியுள்ளார்கள். வியாச முனிவர் சொல்லுக்கு சொல்லு ஹிரோஷிமா , நாகசாகி யில் நடந்த உண்மையான சம்பவத்தை விவரிப்பது போல கூறுகிறார்.அது எப்படி அவரால் முடிந்ததது ?

  "Gurkha,flying a swift and powerful vimana hurled
  ...a single projectile
  Charged with all the power of the Universe.
  An incandescent column of smoke and flame
  As bright as the thousand suns
  Rose in all its splendour"[34 of the Karna Parva]....

  "...The corpses were so burned
  As to be unrecognisable.
  The hair and nails fell out;
  Pottery broke without apparent cause,
  And the birds turned white.
  After a few hours
  All foodstuffs were infected...
  ...to escape from this fire
  The soldiers threw themselves in streams
  To wash themselves and their equipment"

  உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்?

  இந்து சமயத்தின் படி நாம் சாகும் போது உயிர் ஆனது உடலை விட்டு வெளியேறுகிறது.அது அழிவது இல்லை.அதை அழிக்கவோ ஆக்கவோ முடியாது .ஒரு உடலில் இருந்து மற்ற உடலுக்கு செல்கிறது.
  ஒரு வடிவில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மாறுகிறது. அவ்வளவுதான் .

  சக்தி என்பதை உயிர்[உயிர்=சக்தி] என்பதிற்கு சமன் படுத்தினால்,நீங்கள் என்னத்தை அறிகிறீர்கள்?

  சக்தியானது ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மாறலாம் .அதை ஆகவோ அழிக்கவோ முடியாது. இது இன்றைய நவீன விஞ்ஞானம் அல்லவா?

  இனி சந்திரகாசன் சிந்திய சில துளிகளை பார்ப்போம்

  எதிரில் இருப்பவர் நினைப்பது, உணர்வதை அறிந்து கொள்வான் (telepathy).

  பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.

  மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது இந்த ஆற்றலைக் கொண்டுதான்.

  பொருட்களை மறைத்து இன்னோர் இடத்தில் தோன்றச் செய்வான் (teleportation).

  சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது

  நமீநந்தியடிகள் ஓர் வீட்டில், புகுந்து, "சிவாலயத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் இங்கே நெய்யில்லை, விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்" என்றார்கள். அப்பொழுது "குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று" என்று ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று, நமிநந்தியடிகணாயனார் குளத்தில் இறங்கி, நீரை முகந்துகொண்டு, வந்து திரியின்மேலே அந்நீரைவார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது

  இப்படி "1௦௦௦,2௦௦௦" ஆண்டுகளுக்கு முன்பே சந்திரகாசன் கூறிய பல கதைகளில் கூறியுள்ளார்கள்.சில இப்ப நிறைவேறியும் உள்ளது.ஆகவே சந்திரகசனின் கூற்றுக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்.


  ReplyDelete
 3. நன்றி.
  தில்லையின் ஆழ்ந்து சென்று கொண்டுவந்து காட்டிய இலக்கியம் மற்றும் சமயம் சார்ந்த எடுத்துக் காட்டுகள் எல்லாம் ரொம்பவும் அருமைதான். ஆனால், இவைகள் எல்லாம் தமிழ் மொழியின் உயரிய செல்வங்களே ஒழிய உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்களே அல்ல. ஆச்சரியகரமாக, அந்தப் புலவர்களும், நாயன்மார்களும் தங்கள் எதிர்பார்ப்புகளைச் சிறந்த கற்பனை வளத்துடன் பாடியவை எல்லாம் தற்சமயம் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல, நாம் விரும்புவதைக் கற்பனை பண்ணிக் கனவு காண்போம், நாளை கட்டாயம் நடக்கும்.

  ReplyDelete