இதே நாளில் அன்று -மார்ச், 22, 2005


காதலுக்கும்  ஒரு மன்னன், காலம் செல்லும்வரை...


புதுக்கோட்டையில், 1920 நவ., 16ம் தேதி, ராமசாமி ஐயர் - கங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், ரத்னகண்ணு கணேசன்.
இளம் வயதில், தந்தையை இழந்து, சித்தப்பா, நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார்.சென்னை கிருஸ்துவ கல்லூரியில், ஆசிரியராகப் பணியாற்றினார். பின், 'ஜெமினி' திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1947ல், மிஸ்.மாலினி படத்தில், சிறிய வேடத்தில் நடித்தார். தாயுள்ளம் படத்தில், வில்லன் வேடம் ஏற்றிருந்தார். பின், கதாநாயகனாக உயர்ந்தார். தன்னை வளர்த்த நிறுவனத்தின் பெயரை இணைத்து, ஜெமினிகணேசன் என, பெயர்பெற்றார்.எம்.ஜி.ஆர்., - சிவாஜிகணேசன் என்ற இரு ஆளுமைகளுக்கு இடையே, இயல்பான நடிப்பு, தனக்கான பாதையை தேர்ந்தெடுத்தார்.. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில், 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் அவனில்லை படத்தை தயாரித்தார். இதய மலர் என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த, 1971ல், 'பத்மஸ்ரீ' விருது பெற்றார்.கடந்த, 2005 மார்ச், 22ம் தேதி மறைந்தார். 'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் காலமான தினம் இன்று.

👧👦👦👧👧👦👦👧👧👦👦👧👧👦👦👧

0 comments:

Post a Comment