கொரோனாவும் மதவாதிகளும்

தற்போது உலகெங்கும் பரவி, பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை வைத்து, சில மதம் மாறிகள், மிரண்டு போய் இருக்கும் அப்பாவிப் பொதுமக்களிடம் திகில் பரவச் செய்து, பணம் பறிக்கும், மற்றும் மதம் மாற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

சுவிஸ் தொலைக்காட்சியில், இவர் ஒரு சுத்துமாத்து பேர்வழி என்று அறிவிக்கப்பட்ட தமிழ் கத்தோலிக்க மத போதகர் ஒருவர், யாழ்ப்பாணம் சென்று, ஜேசுவின் கருணையால் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்ற விடாது எல்லோரையும் காப்பதற்காக தான் வந்துள்ளதாக அறிவித்து, நூற்றுக்கணக்கானவர்களுக்கு (அதே இயேசு கிருபையினால்) கொரோனா பயம் கொடுத்துவிட்டு, மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் கோரோனோவுடன் படுத்திருக்கிறார்,
இதே ஜேசுதான் சென்ற வருடம், பெரும் ஈஸ்டர்  தினத்தில் அவரை வணங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களைக் காவு கொண்டார்.

இந்த ஜேசுவின் மையமாகிய இத்தாலியும், வத்திக்கானும், இதர ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் இந்த வியாதியால் மிகவும் வருந்திக் கொண்டு இருப்பது இந்தக் கடவுளுக்குத் தெரியவில்லையா?

மற்றும், அல்லாவின் உயிர் மையமே மூடப்பட்டு விட்டது  அல்லாவின்  நாடுகள் எல்லாம் அல்லோல கல்லோலப் படுகின்றன. உலகின் ஒரே ஒரு கடவுள் என்று அவர்களால் சொல்லிக் கொள்ளப்படும்  கடவுளின் சக்தி எல்லாம் எங்கே மறைந்து போய் விட்டது?

120 வருடங்களாகப் பூட்டியே அறியாத பணக்கார திருப்பதியாரும் ஒழிந்து விட்டார்! பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டிருந்த இந்துக் கோவில்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

ஒன்று விளங்கவில்லை; கடவுள்களின் உறவிடங்கள் பூட்டப்படுவது கடவுள்களை வைரஸிலிருந்து காப்பாற்றத்தானோ தெரியாது!

பூட்டுவதற்குப் பதில், எல்லோரையும் மெக்கா வரும்படி செய்து, அங்கு உள்ள சர்வ-ரோக-பூரண-நிவாரணியான ஸம்-ஸம் புனித நீரினை ஒவ்வொரு சொட்டு வாயில் விட்டு நோய்க் கிருமிகள் தொற்றாமலும், தொற்றியோரைக் குணப்படுத்தியும் அனுப்பலாமே!

அல்லது, எல்லோரும் சேர்ந்து 'அல்லாஹு அக்பர்' என்று கோஷம் போட்டு அவர் கவனத்தை ஈர்க்கலாமே!

எல்லோரையும் வத்திக்கான் வரும்படி செய்து ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரினை தெளித்து மாற்றலாமே!

அன்றில், 'ஜேசுவே கருணை காட்டுங்கள்' என்று எல்லோரும் செபம் செய்து அருளை பெற்றுக்கொள்ளலாமே!

இந்தியாவின் புனித கங்கை நீர் இவ்வளவு இருக்கப் பயம்தான் ஏனொ?
அல்லது பெரிய ஒரு மஹா யாகம் செய்து, ஹெலோ, கடவுள்! இப்படி ஒரு விடயம் இங்கு நடக்குது; வந்து மாற்றவும் என்று தெரியப்படுத்தலாமே!
இதுவரை, இப்பூமியின் வந்துதித்த கடவுளோ, அல்லது கடவுளின் மைந்தர், அவதாரம், தூதுவர், தீர்க்கதரிசி, சித்தர், அருள் பெற்றவர் என்று கூறப்பட்ட எவரும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவோ, சிரமமற்ற  மரணம் எய்ததாகவோ தெரியவில்லை.
உதாரணமாக:
* இயேசு: சுமை சுமந்து அடிவாங்கி, இரத்தம் சிந்த சித்திரவதை செய்யப்பட்டு, இழுத்துச் சென்று ஆணியால் சிலுவையில் அறையப்பட்டு,  33 (அல் 36 ) வயசிலேயே கொல்லப்பட்டார்.

* மொஹமது: பகைவர்களால் நச்சு உணவு கொடுக்கப்பட்டு,  61  வயசில் கொல்லப்பட்டார்.

* பஹா உல்லா: நெடும் காலம் ஒழிந்து, மறைந்து திரிந்துசிறைப்படுத்தப்பட்டு கடும் ஜுரம் கண்டு, 74 வயசில் மரணித்தார்.

* சிறிடி சாய் பாபா: சிறு நீரகக் கோளாறுடன்  உக்கிர மாரடைப்பு வந்து, 50 வயசில் இறந்தார். 

* சத்திய சாய் பாபா: இடுப்பில் பல எலும்புகள் முறிந்த நிலையில்,ஏழு வருடங்கள் தள்ளு வண்டியில் காலம் கழித்து, சிறு நீரகக் கோளாறு, குடல் நோய், மாரடைப்பு வந்து, 84 வயசில் இறந்தார். 

* ராமகிருஷ்ணர்: அதிகம் கதைத்ததால் தொண்டை புண்ணாகி, புற்று நோய் வந்து,  50 வயசில் காலமானார்.

* விவேகானந்தர்: மூளை ரத்த நாடி நரம்பு வெடித்ததால் 39 வயசிலேயே போய் சேர்ந்துவிட்டார்.

தெரியாமல்தான் கேட்கிறேன்; கடவுளுக்குக் கிட்டவே இருந்து, அவருடன் எப்பொழுதுமே கதைத்துக் கொண்டிருக்கும் இந்த மகா சக்தி வாய்ந்த தெய்வப் பிறவிகளையே அவர்களது கடவுளால், சுக வாழ்வும், இயற்கை மரணமும் கொடுத்துக் காப்பாற்ற முடியவில்லையே, உங்கள் மத போதகர் மட்டும் அவரைக் கேட்டால் அவர் ஓடிவந்து உங்களை கொரோனா போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறீர்களா?

அந்தக் கடவுள் வாரிசுகள், உயிருடன் இருக்கும்போதே தங்களைத் தாங்களே காப்பாற்ற முடியாதவர்கள். கொல்லப்பட்டும், மரணித்தும்  இவ்வளவு காலத்திற்குப் பின்னரும் உங்களைக் காப்பாற்றுவார் என்று எப்படித்தான் எதிர்பார்க்கிறீர்கள் என்று  அறிந்து கொள்ள முடியவில்லை.

கிறீஸ்தவ மத போதகர்கள் இந்து மக்களிளிடையே வாழ்ந்து பல நற்பணிகளை செய்தார்கள் என்பது உண்மை; பலர் தம் உயிர்களையும் பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஆனால், அப்போது வெள்ளையன் செய்தது போன்ற உள்நோக்கம் ஒன்றே குறியாய் இருக்கும். ஒரு நூறு பேரில் யாராவது ஓரிருவர் என்றாலும் அவர்கள் உதவிகளால் ஈர்க்கப்பட்டு  மதம் மாறி விடுவார்கள். மாறியபின் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல விடயம் நடந்துவிட்டால் அது இயேசுவால்தான் வந்தது என்று மனசார நம்பிவிடுவார்கள், மதம் மாறி இருக்காது விட்டால் நடந்தே இருக்காது என்று அடித்துக் கூறுவார்கள். அதன் பின்னர் வேறு சிலரையும் உள்ளே இழுக்க அயராது பாடுபடுவார்கள்.

கிறீஸ்தவ சமயத்தைக் கொண்டுவந்த வெள்ளையன் பேசாமல் இப்போது இருக்கிறான்; தேவாலயம் போவதைக் காண்பது அரிதாகி விட்டது  ஆனால், மதம் மாறிய நம்மவர் மட்டும் தீவிரமாய் இருப்பார்கள்.

அத்தோடு, எல்லாச் சமய 'புனித' நூல்கள், இக்காலத்தில் ஒத்துக்கொள்ள முடியாத கருத்துக்களையும்பிழையென்று நிறுவப்பட்ட பல விடயங்களையும் போதனை செய்து மக்களை இருளிலே வைத்துக்கொண்டிருக்க முயற்சிக்கின்றன.

அயராது இரவும், பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற மருத்துவ/ நுண்ணுயிர்/விஞ்ஞான/அரசியல் எனப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள், இந்த வைரைஸைக் கொல்லக்கூடிய மருந்தொன்றினைக் கண்டு பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.

அச்சமயம், இந்த கடவுள் நேசர்கள், கடவுளுக்கு நன்றி, கடவுளே பெரியவர், கடவுளின் கருணை, கடவுளின் தயவு என்று புலம்பத் தொடங்கிவிடுவார்.  கண்டு பிடித்தவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அவர்கள் கண்டு பிடிக்கவும் கடவுள்தான் உதவினார்  என்று ஏதோ நேரில் கண்டு சொல்வதுபோல புலம்புவார்கள்.

நம் சுவிஸ் நண்பர் கோரோனோ நோயில்  இருந்து அநேகமாகச் சுகம்  ஆகுவார். அப்போதும் சொல்வார், சுவிஸ்ஸில் அகதி அந்தஸ்து கிடைத்து இருக்கக் கிடைத்தது, நோய் சுகமாகியது எல்லாம்  தான் மதம் மாறியதால்தான் என்று. வீடு திரும்பும் பொழுது வாகன விபத்தில் கால்களை இழந்தார் என்று வைத்துக்கொண்டால் சொல்வார், இயேசுதான் தன்  உயிரைக் காப்பாற்றினார் என்று.

பொறுக்கமுடியாத, திருத்தமுடியாத அளவுக்கு இவர்களின் மூளைகள் கலைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.  ஏதோ, உலகிலே மற்றைய சமயத்தினவர்களுக்கு ஒன்றுமே நல்லது நடப்பது இல்லை, ஜேசுவை நம்பியவர்களுக்கு மட்டும்தான் நல்லது நடக்கும் என்ற தோரணையில் இவர்களை நம்ப வைக்கப் பயிற்றப்பட்டுள்ளனர்.

இவ்வளவு மக்களையும் கடவுள்தான் கொன்றார் என்று சொல்லமாட்டார்கள். அது மனிதனின் பிழை என்றுதான் குறை சொல்வார்கள். போதாதற்கு, கடவுள் இந்த நோயைப் பற்றி இன்னுமே அறியாதிருக்கிறார் என்று, அடிக்கடி அவரை வணங்கி தகவல் தெரிவித்துக் கொண்டு இருப்பார்கள்.

கடவுள்களை எந்நேரமும் தொழுபவர்கள், புனித யாத்திரை போய் வந்தவர்கள், நேர்த்திக் கடன் முடித்தவர்கள்  எல்லோருக்கும், வழக்கமாக கொரோனா போன்ற பெரும் நோய்கள் வரத்தான் செய்கின்றன. கூன், குருடு,செவிடு, அங்கவீனம் என்பன அப்படியேதான் இருக்கின்றன.  அவர்கள் பிள்ளைகள் சிலர் திருமணம் இன்றி இருக்கின்றனர். சிலர் மறு கலாசார துணைவருடன் ஓடிவிடுகின்றனர். சிலர் பிள்ளை இன்றி -கடவுள் கொடுக்காததால்- தவிக்கிறார்கள். சிலர் மணமுறிவில் முடிக்கிறார்கள். சிலர் இறந்தும் விடுகிறார்கள்.

இவ்வளவும் கடவுளை வணக்காதவர்களுக்கும் நடக்கும்; எந்த ஒரு வித்தியாசம் இருக்காது.

கடவுள்தான் இதைச் செய்தார், அந்த நோயை மாற்றினார் என்று ஆதார பூர்வமாக எந்த ஒரு நிகழ்வும் இன்றுவரை நிறுவப்படவில்லை. ஏதாவது நல்ல விடயம் நடந்தால் கடவுள்தான் செய்தார் என்று இவர்கள் முடித்துவிடுவர்.

 வெறுமனே வாதிடுவார்கள்,  'புனித நூலில் சொல்லியிருக்கிறது, ஆகவே அது உண்மை. ஏனென்றால், அந்தப் புனித நூல் கடவுளால் எழுதப்பட்டது என்பதால். கடவுள் சொன்னால் அது உண்மைஎன்று. இவர்கள், எப்போதும் அர்த்தமற்ற, அறிவுசார்பற்ற, தர்க்க ரீதியற்ற வெறும் வசனங்களை முன் வைப்பார்கள்.

அந்தக் காலத்தில், அறிவு குன்றிய மக்களை ஏமாற்றி, விதம் விதமான கடவுள்களையும்  உருவாக்கி, சில, பல பொய்க்கதைகளை புனைந்து, ஆடு, மாடு மேய்த்தவர்களாலும், பல ஊர் மக்களை கொன்று குவித்த பயங்கர மத வாத வெறியர்களாலும், கடவுள் அருள் பெற்றவர்கள் என்று கூறிக்கொண்ட  சித்தர்களாலும்  எழுதப்பட்ட சில புத்தகங்களின் பிரதிகளைக் கைகளில் வைத்துக் கொண்டு, இது கடவுள் வந்தார், தந்தார், கதைத்தார், சொன்னார், எழுதினார், அருளினார், நோய்களை மாற்றினார், பேய்களை விரட்டினார் என்று காமடி விட்டுக்கொண்டு, இந்த நூற்றாண்டிலும்  அலைந்து திரிந்து மக்களை மயக்கி பணிய வைப்பதில் வெற்றி கண்டுகொண்டே  இருக்கிறார்கள்!

ஏதோ, அந்தக் காலத்தில் சமயம் என்பது கடவுள் பயத்தின்மூலம் மனிதன்  நல்லொழுக்கமாக வாழ்வதற்கு வழி வகுத்தது என்பது உண்மைதான். ஆனால், இப்பொழுது நல்லவற்றை, உண்மையானவற்றை மட்டும் சொல்ல, பார்க்க, படிக்க, அறிய, கடைப்பிடிக்க  எத்தனையோ சட்ட, திட்டங்களும், தகவல் இணையங்களும், நல்ல சொற்பொழிவுகளும்  உள்ளன. நோய்களை மாற்ற மருந்துகள்தான் உதவிசெய்யும்; கடவுள் அல்ல.

இது நல்லது, அது கெட்டது என்று சொல்வதற்கு ஒரு கடவுளும் தேவை இல்லை, கொரோனா வருவதைத் தடுக்க எங்களுக்குத் தெரியும். கடவுள் ஒருவரையும் இங்கே அனுப்பவும் தேவை இல்லை.நாங்கள் சுய புத்தி உள்ளவர்கள். எங்களுக்கு நன்றாகவே சிந்திக்கும் வல்லமை உண்டு. அறியாத சொர்க்கம், நரகம் பூச்சாண்டி ஒன்றையும் அறிவுடையோர் நம்பமாட்டார்.

அப்படித்தான் அப்படி ஒரு கடவுள் இருந்தார் என்றால்,
'இருந்துவிட்டுப் போகட்டுமே!'

மனிதனால்  முடியும் கொரோனா வைரஸை ஒழிக்கும் மருந்து கண்டுபிடிக்க - கடவுள் துணை இன்றி!

       ✍செல்வத்துரை , சந்திரகாசன் 
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

3 comments:

 1. s.sivaramachchandranTuesday, March 31, 2020

  அறிவிப்பு:ஓம்.நமசிவாய,
  எல்லோருக்கும் என்னுடைய பணிவான காலை வணக்கம்.
  இன்று இந்த இக்கட்டான சூழலில் தன்னலம் பார்க்க்காமல் கடமைசெய்த வண்ணம் வாழும் , வாழும் தெய்வங்களாகிய வைத்தியகளையும், செவிலியர்களைம், உலகமக்கள் அனைவரையும் காக்குமாறு
  வருகின்ற வெள்ளிக் கிழமைகாலை 9 மணிக்கு எல்லோரும் ஒரேநேரத்தில்.. ஓம்.நமசிவாய, என்ற ஐந்தெழுத்தை 108த்தடவைகள் ஓதி எல்லோரும் நலம்பெறப் பிராத்திப்போம்
  குறிப்பு: பட்டும் பட்டும் சுனை,மனை உணர்வு இல்லாத ஜென்மங்கள். இவ்வளவு உயிர்களை கொரோனா பலி எடுத்துக்கொண்டிருக்க கடவுள் கேடடால் வருவானாம்,காப்பானாம் என்று பிசத்துகினம் .இவையல் பிராத்திக்குமட்டும் ஈசன் பார்த்துக்கொண்டு இருப்பானாம்.இப்படி காலமெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றும் பயித்தியக்காரக்காரர் . உலக வல்லரசுகள்,விஞ்ஞானிகள் ,மருத்துவர்களுக்கு இந்த மூளை இல்லாமலா துடித்துக்கொண்டு ஆக்க பூர்வ நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

  ReplyDelete
 2. தேவசகாயம்Tuesday, March 31, 2020

  அன்பர் பைபிளை ஒருமுறை வாசித்திருந்தாரேயானால் இவ்வளவு தூரம் இறைவனை நிந்தனை செய்திருக்கமாட்டார்.
  அவருக்கும் இயேசுவின் கிருபை எப்பவும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதை படித்தும், அனுபவரீதியாக பட்டும் புரியாதவர்களுக்கு இவை விளங்கப்போவது இல்லை.

   Delete