கண்புரை - வெள்ளெழுத்து - சாலேசரம் – cataract



பொதுவாக 40 வயதிற்குப் பின்னர் மெல்ல ஆரம்பமாகும்,ஆனால் எப்போதும் அல்ல, கண்பார்வைக் கோளாறு கண்புரை -cataracts -எனச் சொல்லப்படும் கண்ணில் மேல் படரும் படலம் ஆகும்.
அனேகமாக 60-65 வயதுகளில் அனேகமானவர்களுக்கு வந்து விடும் இந்த நோயின் அறிகுறிகள்........
பார்வையில் புகை போன்ற மறைப்பு,நிறத்தில் வேறுபாடு, இரண்டாகத் தெரிவது, இரவில் அதிக பார்வைக் குறைவு, படிக்க/பார்க்க அதிக வெளிச்சம் தேவைப்படுவது  போன்ற காரணங்கள் இருப்பின் கண் மருத்துவரை அணுகலாம்.
கண்ணில் உள்ள வில்லையை மூடி வளரும் படலம் காரணமாக, ஒளி சமிக்கைகளை-signal- ரெட்டினாவிற்கு சரியாக அனுப்ப முடியாமல் போவதனால், அவை மூளைக்கு கடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சில குழந்தைகளுக்கும், விபத்து ,பரம்பரை காரணமாகவும் முன்னரே ஏற்பட்டு விடுவதும் உண்டு.
இது தவிர,சர்க்கரை நோய்,அதிக சூரிய ஒளி படுவது, புகைத்தல்,மது, கதிர்வீச்சு, கண் அறுவை சிகிச்சை, உயர் குருதி அழுத்தம் போன்றவற்றாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற ஊதாக் கதிர்களை எடுத்துக் கொள்ளும் கண்ணாடிகளைப் -sun glasses-பாவிக்கலாம்.

Visual acuity test – எழ்ழுத்துக்களைப் படிக்கச் சொல்வதன் மூலம், Dilated eye exam -கண்ணில் மருந்துத் துளிகளை விட்டு பரிசோதிப்பது,Tonometry -உட்கண்களின் அழுத்தத்தை அளப்பதன் மூலம்,Slit-lamp exam -ஒளியைப் பாச்சி iris - cornea இடையில் உள்ள இடைவெளியை அளப்பது போன்ற முறைகளை பாவித்து கண்டறிவார்கள்.
ஆரம்பத்தில் இந்த நோய் பற்றி அதிக அறிகுறிகளை காண முடியாது. மெல்ல நிலைமை மோசமடையும்.
கண்புரையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அரை மணி நேர அறுவை சிகிச்சையும் மறு நாளே நிலைமை சரியாகி, ஒரு சில தினங்களில் முற்றாக சாதாரண நிலைக்கு வந்து விடும். Laser-assisted cataract surgery-LASIK surgery  ,Extracapsular surgery என சில வேறுபட்ட அறுவை சிகிச்சைகள் இன்று செய்யப்படுகின்றன.
தற்போது அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் வில்லைகளை-lens- பொருத்துகிறார்கள்.
மிக சுலபமான சிறிய அறுவை சிகிச்சையானாலும் சிலருக்கு தொற்று,குருதி வெளியேற்றம்,விழித்திரை-retina-விலகி விடுவதும் உண்டு. இப்படியான நிலை மிகச் சிலருக்கே ஏற்படுகிறது.

👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁👁

0 comments:

Post a Comment