நாஸ்திக கொள்கையுள்ள நம் ஆஸ்திக இந்துக்கள்.


நம்மில்  பலர், நீண்ட காலமாகவே தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொண்டு நாஸ்திகக் கொள்கைகளையே பிடிவாதமாகக் கடைப்பிடித்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் தாங்கள் முழுமுதல் கடவுள் என்று நம்பும் இந்து தெய்வங்களை, மிகவும் சக்தி குறைந்த, பலவீனமான, செவி மடுக்காத வெறும் ஜடங்கள் என்று எண்ணுவதால், இத்தெய்வங்களை முழு மனதுடன் நம்பாமல்தாம் கேட்பவைகளைத் தராது விட்டு விடுவாரோ என்ற ஐயத்தில், பிற மதத் தெய்வங்கள் மிகவும்  சக்தி வாய்ந்தவர்களாய்  இருப்பார்களோ என்று எண்ணும் ஒரு மாயையில் சிக்கி அலைகிறார்கள்  இவர்கள் பிற மதத் தெய்வங்களுக்குப் பூசை , வேண்டுதல், நேர்த்திக் கடன், ஆலய தரிசனம் என ஒழுங்காகச் செய்து ஓடித்திரிவது அன்றாடம் காணக்கூடிய ஒரு காட்சியாகும்.

இவர்கள், தங்களுக்கு எம்மதமும் சம்மதம் என்று யாரோ அன்று  புற மதங்களின்பால் சகிப்புத் தன்மையை வளர்ப்பதற்காகச் சொல்லப்பட்டதைத்  தங்கள் செய்கையை நியாயப் படுத்தப்  பாவிக்கிறார்கள்.உண்மையில், இவர்களின் இச்செய்கைகளுக்கு மிக முக்கிய உந்தல் காரணங்களாவன:
* தங்கள் சமயத் தத்துவங்கள் பற்றிய அடிப்படை அறிவின்மை.
* தாம் கேட்பதை எவர்தான் தருவாரோ என்ற தேடலில் புதைந்துள்ள பேராசை.
* பிறமத போதனைகளின் பசப்பு வார்த்தைகளால் இலகுவாக உள்ளிழுக்கப்படக்கூடிய பலவீனம்.
* தமது தெய்வங்களின்பால் அடிமனத்தில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை.
* இந்து சமயத்தின் கட்டுப்பாடுகள் போட்டுப் பயமுறுத்தல்கள் இல்லாத நெகிழ்ச்சித் தன்மை.

இக்காரணங்களினால் பச்சோந்திகளாக இருக்கும் இவர்களை, பிற மதப் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்யவும், சில பதவிகளை அடையவும், சிறு உதவிகள் பெறுவதற்கும், சமூக வேறுபாடுகளில் இருந்து தப்பவும் வெகு இலகுவாக மதமாற்றம் செய்யக்கூடியதாக இருக்கின்றது. இந்து சமயத்தின் மென்மையான போக்குக் காரணமாக சமய மாற்றம் என்பது எப்போதும் ஒருபக்கமாகவே நடந்து கொண்டு இருக்கிறது; மறுபக்கம் அப்படி ஒன்று நடப்பது சாத்தியமே இல்லாத ஒரு நிகழ்வு.

இங்கு கோவில் பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்கள் எல்லாம், மதம் மாறி ஐந்தாறு முறை தொழுவதை ஏற்றுக் கொள்ளுவார்கள்; ஒவ்வொரு கிழமையும் ஆலயம் செல்லென்றால் அதைக்  கீழ்ப்படிந்து ஒழுகுவார்கள். அம்மதத்தில் சேராவிட்டால் இறந்தபின் புதைக்க இடம் கிடைக்காது என்றால் கலங்கி விடுவார்கள்; சொர்க்க வாசல் திறக்கவே மாட்டாது என்றால் துடித்துப் போய் விடுவார்கள். நாம் செய்யும் பாவங்களுக்காக அன்றே ஒருத்தர் இறந்தார் என்றால் அப்படியே நம்பிவிடுவார்கள்.

 மாற்று சமயங்களில் இன்னொரு சமயம் பற்றிப் பேச்செடுத்தாலே சிலர் கொலையே செய்து விடுவார்கள். வேறு சிலர் இந்துக் கடவுள் பற்றிப் பேசினாலே பாவம் என்பார்கள். இன்னும் சில தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதோடு விட்டுவிடுவார்கள். இந்துக்கள் வீட்டிற்கு மாற்று மதச் சின்னங்களை அம்மததினரே கொண்டு வந்து தருவதற்குத் தயங்க மாட்டார்கள்; ஆனால் இந்து மதச் சின்னனங்கள் ஒன்றுமே புறச்சமய இல்லங்களில் இருக்கவே மாட்டா.
வேற்றுச் சமயங்களில் எக்காரணத்திற்கும் அச்சமயங்களில் இருந்து மதம் மாறுவது மாபெரும் குற்றம். மாறினால், கடவுளின் சீற்றத்திற்கு உள்ளாகி நரகத்தில் தள்ளப்படுவர் என்று பலவிதமான கடுமையான எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  அம்மயக்கத்தினுள் அவர்கள் இருப்பதால், எப்படியும் மதம் மாறுவது -முக்கியமாக திருமணதிற்காக- இந்துவாகத்தான் இருக்கும்.

இந்து சமயத்தில் கடவுள், ஆன்மா, உலகம் எல்லாம் அநாதியானது. அதாவது அவை தொடக்கமும் முடிவும் இல்லாதவை. கடவுள் வந்தார்; திடீரெனப் படைத்தார்;நல்லாய் இருந்தது என்று கூறுவதை நம்புபவர்கள், அதற்கு முன்னால் என்ன இருந்தது என்று சிந்திக்க மாட்டார்கள். அதனால்தான், இந்து மத 'அநாதி' என்ற பதம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. (இது பல் பரிமாணக் கொள்கை; பின்னர் பார்ப்போம்)
இறைவன் பேராற்றலும், பெரும் கருணையும் கொண்டவர் என்பதை நம்பாமல், இறைவன் நாளுக்கு ஒவ்வொன்றாக உலகையும், உயிர்களையும் படைக்க, மந்த கதியில் ஆறு நாட்கள் எடுத்தது என்றால் நம்பிவிடுவார்கள். அத்தோடு ஏழாம் நாள் களைத்துப்போய் இளைப்பாறினார் என்றால் முகம் சுளிக்க மாட்டார்கள். படைக்கும்போது Mr.&Mrs.மனிதன், Mr.&Mrs. புலி, Mr.&Mrs. எலி, Mr.&Mrs.பாம்பு, Mr.&Mrs.பூச்சி என்று எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் படைத்தார் என்றால் எள்ளி நகைக்க மாட்டார்கள்.(இது பரிணாமக் கொள்கை; பின்னர் பார்ப்போம்).
இவர்கள் இங்கு கடவுளை நம்பாதவர்கள் அங்கு செல்வது கடவுள் நம்பிக்கையினால் என்று கூறுவதிலும் பார்க்க சொந்த இலாபம் கருதியே இக்கரைக்கு அக்கரை பச்சை என்று இங்கும் அங்கும் ஓடித் திரிகிறார்கள். இப்படி ஓடுவதில் இந்துக்களுக்குச் சளைத்தவர்கள் எவ்வுலகிலும் வேறு எவரும் இருக்கவே மாட்டார்கள்.
 கடவுளை நம்பாத அங்கும் இங்கும் அலையும் இவர்களை ஆஸ்திகர் என்பதா நாஸ்திகர் என்பதா; ஒன்றும் புரியவில்லை!

: செல்வத்துரை சந்திரகாசன்.

3 comments:

 1. 1.இன்னும் பலர் தங்களைப் பக்திமான்கள் என்று நம்பிக்கொண்டு (பிராமண ஜாதி செய்யாத) காணிக்கை,நேர்த்திக்கடன் என்றபேரில்
  *எல்லாம் வல்ல
  *ஆசைகளைக் கடந்த
  கடவுளுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவனை சரிக்கட்டிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறவர்கள்
  2.கடவுளை நம்பாது மந்திரம்,தந்திரம் தெரிந்த மந்திர வித்தைக் கார மனிதர்களை ஸ்வாமி,சுவாமி என்று சுற்றிவருபவர்கள்.
  இவர்களெல்லாம் கடவுளை நம்பாத நாத்திகர்களே.

  ReplyDelete
 2. உந்தச் சுவாமிகள் என்று திரிபவர்கள் அப்படி என்ன அற்புதம் செய்து காட்டிவிட்டார்கள்? அந்த Dynamo என்ற பையன் செய்துகாட்டும் வித்தைகளில் கோடியில் ஒரு பங்காவது செய்து காட்டுவார்களா? நகையும் வேண்டாம், பொருளும் வேண்டாம்; ஒரு 10 தொன் கல்லை சும்மா ஒரு அரை மில்லி மீட்டருக்கு அசைத்து அற்புதம் செய்து காட்டட்டும் பார்க்கலாம்! (அவர்கள் காட்டும் அற்புதங்களால் மனித குலத்திற்கு ஒரு பிரஜோசனமும் இல்லை என்பது வேறு விடயம்!)

  ReplyDelete
 3. k.gnaanappiragasanTuesday, April 07, 2020

  எம்மதமும் சம்மதம் என்று கூறுவதே தாம் செய்யும் செயலை நியாப்படுத்துவதற்கே.

  ReplyDelete