இன்று மறைந்த பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா- ஒரு பார்வை



சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று [29/03/2010] அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். அவரது நினைவாக அவர் வரலாற்றினை நினைவுகொள்வோம் .
பரவை முனியம்மா (Paravai Muniyamma, 25 சூன் 1943 - 29 மார்ச் 2020) என்பவர் தமிழ்த் திரைப்பட, நாட்டுப்புறப் பாடகி, மற்றும் நடிகையாவார். இவர் மதுரை மாவட்டத்திலுள்ள, பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.
தமிழ்த் திரைப்படங்களில் தூள்[2003] எனும் படத்தில் திரைப்படப் பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமானார். காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன் என 33 திரைப்படங்களுக்கும் மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவரது மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரிலும் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இடம்பெற்றன.
கனடாவில் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தின் ஆண்டுவிழாவிலும்  பரவை முனியம்மா கலந்து தன் கலைத் திறமைகள்  மூலம் தமிழ் இரசிகர்களைப் பரவசப் படுத்தியிருந்தார். 
பரவை முனியம்மாவின் ஏழ்மை மற்றும் இயலாமையையும் கருத்தில் கொண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 6 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்ப செலவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயும் மற்றும் மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.
இவர் மார்ச் 29, 2020 அன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரது ஆத்மா சாந்தியடைய நாமும் வேண்டி நிற்போம்.

 😢😢😢😢😢😢😢😢😢😢😢

0 comments:

Post a Comment