மகரந்தம் தரும் மகத்தான பொருட்கள்!




பல வகை பயன்களைத் தரும் புதிய பொருளை உருவாக்க, பூக்களில் உள்ள மகரந்தத்தை நாடியிருக்கின்றனர் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக சூரியகாந்தி யின் கடினமான மகரந்த துகள்களை எடுத்து அதன் சுவர் அமைப்பை அவர்கள் ஆராய்ந்தனர். கடினமாக இருந்தாலும், தேவைக்கேற்ப விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது சூரியகாந்தியின் மகரந்தம்.
அதை வேதி திரவத்தில், 12 மணி நேரம் வரை ஊறவைத்த போது, மகரந்த சுவர் உப்பி பெரிதாகியிருந்தது. அதன் சுவரில் இருந்த, 'ஜெல்' போன்ற பொருள் பல சிறப்புத் தன்மைகளை கொண்டிருந்தது. அந்த பொருளை மேலும் ஆராய்ந்தபோது, அதன் மூலக்கூறு அமைப்பை சில வேதியல் முறைகள் மூலம் மாற்றி, அதன் தன்மையை மாற்ற முடியும் என சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மகரந்த சுவர்களில் உள்ள சிறப்புப் பொருளை வைத்து ஒவ்வாமை ஏற்படுத்தாத பிளாஸ்திரி முதல் சுற்றுச்சூலுக்கு கேடு தராத ஸ்பாஞ்ச் போன்ற பேக்கேஜிங் பொருட்கள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் நான்யாங் ஆராய்ச்சியாளர்கள்.பூக்களின் மகரந்தம் மிகப் பரவலாகவும், எளிதாகவும் கிடைக்கக்கூடியது என்பதால் மலிவான செலவில் சில புதிய பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்தானே?

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

0 comments:

Post a Comment