நபிகள் - ராமன்
குகன்
ராமனை சந்திக்கும் போது தேனும் மீனும்
கொண்டு வந்தான். அதை ராமன் இவற்றை
அருந்தினேன் என்று சொல்லி இந்த
உணவு மிகவும் புனிதமானது என்று புகழ்ந்து சொன்னதாக
இராமாயணத்தில் வருகிறது.குகன் மனசு நோகக் கூடாது என்று ராமன் நினைத்ததாக சொல்கிறது.
ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் திராட்சைப் பழம் கொண்டு வந்து
ஆரம்பித்து பின் யாருக்கும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் பங்கிடாமல் சாப்பிடுகிறார் என யோசித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்மணி சென்றவுடன் உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை எனக்கேட்க ஒரு பழத்தை எடுத்து ஒருவரிடம் கொடுத்து உண்ணுமாறு சொன்னார். அதை சாப்பிட்டவர் தூ புளிக்கிறது எனத் துப்பினார். அந்த பெண் முன்னால் இது போல் நடந்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை என்றார்.
இரண்டு இடங்களிலும் ஒரே சிந்தனை தான். மற்றவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்பது தான்.
தீபம்-தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகள் , தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.





