துடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா?:

ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் 
நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை'  என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தகூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
 துடக்கு காலத்தில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்துவதோ தவிர்க்கப்படுகின்றது.
 இத்துடக்கு, அவ்வீட்டினைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின்  ஆண்வழிப் பரம்பரையில் (பெண்கள் அல்ல; அவர்களின் இரத்தம் மனுஷ இரத்தம் அல்ல!) சகோதரங்கள், பெரியப்பன், சித்தப்பன், பேரன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று எல்லோருடைய ஆண் பிள்ளைகள், மனைவிகள், அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் என்று எல்லோரையும் பாதிக்கும் என்பது மரபு.
 துடக்கு என்பது பின்வரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் காக்கப்படுகின்றது:
 ஒருவர் இறந்தால்:

 குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அது ஒரு 'துடக்கு' சம்பவமாக ஒரு மாத காலத்திற்கு பேணப்படுகின்றது. அவர் உடலை அன்றே கொண்டு சென்று எரித்துவிட்டு வந்தாலும் துடக்கில் மாற்றமில்லை.அதுவும் அவரவர் சாதியைப் பொறுத்து அந்தத் தூய்மையின்மையின் காலமும் மாறுபடும். 'உயர் சாதி இரத்தம்' உள்ளவருக்கு தூய்மை 14 நாளிலேயே வந்துவிடும். ஏனையோர் பாவங்கள் 21 நாள், 30 நாள் என்று காத்திருக்க வேண்டும். அந்த நாள் முடிவில் ஐயரை அழைத்து, மந்திரம் சொல்லி 'துடக்கு கழித்தல்' கிரியைச் செய்தால் மாத்திரமே இவர்கள் எல்லோரும் வழக்கமான நிலைக்குத் திரும்ப முடியும், இடையில் இன்னொரு துடக்கு சம்பவம் நிகழாதிருந்தால்!
ஒரு சிலர் துடக்குக் கழிந்தபின்னரும், இறந்தவர் மேலுள்ள பெரும் பாசப் பெருக்கினால் மிகுதி உள்ள ஒரு வருட காலத்திற்கு 'துக்கம்' அனுஷ்டித்து, ஓரளவு இரண்டாம் படிநிலைத் துடக்கும் காப்பர்.

சில சமயத்தவர், இறந்தவர் உடலையே தங்கள் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றார்களே! அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா? நம்மர்வர் ஒரு செத்தவீட்டிற்குப் போய்விட்டுக் கோவிலுக்குப் போவதென்றால், முதலில் ஏழு கிணறுகளில் குளித்து சுத்தமாக்கிவிட்டுத்தான் போகவேண்டுமாம். என்ன கொடுமை ஐயா, இறந்தவரை இவ்வளவுக்குக் கேவலப்படுத்துகிறார்களே!

நியாயமாகப் பார்த்தால், இறந்தவர்மேல் உண்மையிலே பாசம் இருக்குமேயானால், அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால், இறந்தவர் விரும்பிய  'சொர்க்கம்' அவர் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் கொண்டவர்களாக இருந்தால் இறந்தவர் உடலைக் கடவுள் சன்னதியில் கொண்டு சென்று உங்கள் கிரியைகளைச் செய்யவேண்டும். அத்தோடு, தினமும் கோவில் சென்று, இறந்தவரை இடையில் எங்கும் நிற்பாட்டாது நேரே 'அங்கு'  கொண்டுபோகுமாறு அவர்கள் வணங்கும் கடவுளிடம் விண்ணப்பம் செய்தல்வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாய் இருக்கவேண்டும் அல்லவா?
குழந்தை பிறந்தால்:

 குடும்பத்தில் ஒருவர், என்னமாதிரித்தான் சுத்தமான சுகாதார சூழலில், பெரும் வைத்திய சாலையில் ஒரு குழந்தையைப் பிரசவித்தாலும், இந்நிகழ்வும் ஒரு செத்த வீட்டை ஒத்த துடக்குப் போலவே காத்திடுவார். என்றாலும், சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பதால் துடக்கு கழிந்தவுடன் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர்.
 பெண் மாதவிடாய் வந்தால்:

 பெண் பருவம் எய்தால், அல்லது வழக்கமான மாதவிடாய் வந்தால் அந்த நாட்கள் எல்லாம் அப்பெண்ணுக்கு துடக்குத்தான். அப்பெண்ணை ஒருபுறத்தில் உட்காரவிட்டு, வேறு பக்கங்களுக்குச் சென்று 'அழைஞ்சு'  துடக்கை மற்றவர்களுக்கும் பரவாமல் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் என்னமாதிரியான நவீன யுக்திகளை உபயோகித்துச் சுத்தமானவர்களாய் இருந்தாலும், அது துடக்கு, துடக்குதான்.
 மேலை நாடுகளில், இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடப்பது என்பது அவரின் வீட்டிலேயே தெரிய வராது. அப்படி என்றால், அவர்கள் எல்லோருமே, எப்போதுமே துடக்கு உள்ளவர்கள் என்று ஆகிவிடுமா?
 தாம்பத்திய உறவினால்:
 தாம்பத்திய உறவினால் பெரும் துடக்கு உண்டாகுவதாகச் சொல்லி விரத காலத்திலும், கடவுளை வணங்குவதன் முன்னும் இப்படியான 'அசுத்த' வேலைகள் செய்வது கூடவே கூடாதாம். இது, இவர்கள் வணங்கும் அந்தக் கடவுளின் அபார சிருஷ்டிதனைக் கொச்சைப் படுத்தும் இந்தச் சாதாரண மானிடரின் கட்டுப்பாடு. ஆனால், கடவுள்மாரின் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெரும் திருவிளயாடல்களை மட்டும்  கதை, கதைகளாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், பஜனைகள் பாடியும், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆடியும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒழுங்கான தாம்பத்தியம் இவர்களுக்கு ஒரு துடக்கு சமாசரமாம்.

துடக்கு இல்லாத எத்தனை பேரை மிகவும் நாற்றமடிக்கும் அழுக்கு உடையுடன் பொது நிகழ்வுகளில் சந்திக்கின்றோம்! இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, 'அசுத்தம்', 'கிருமி' என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர்? நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை நோக்கி அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

'அப்போது சொன்னார்கள்', 'காலம், காலமாய்க் கடைப்பிடித்தார்கள்' என்பதற்காக, தேவையற்ற, பிழையான, அர்த்தமற்ற ஒரு விடயம் தற்போதைய சூழலில் இன்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற  கட்டாயம் இல்லை என்று ஓர் அற்ப அறிவு உள்ள சிறுவர்களுக்கே தெளிவாகப் புரியும்!
-----------------------------------------------

இலங்கை-சிலாவத்துறை யில் முத்துக்குளிக்க வாறீ ங்களா?



முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லதுமுத்தெடுத்தல் அல்லது முத்து  வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின்மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.


mannar 4
சிலாவத்துறை முத்துக்குளித்தல் வரலாறு

எகிப்தியப்;  பேரழகியும், அரசியும் ஆகிய ‘கிளியோப்பட்ரா காதினிலே’ அணிந்திருந்த காதணியில் முசலிக் கடலில் இருந்து பெறப்பட்ட முத்து பதிக்கப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. இதனால் எமது முசலி பிராந்தியத்திற்கு ஒரு பெரும் புகழாக இருந்தது. 
போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது.கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது.13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வெனிசிய அறிஞர் மார்க்கோபோலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார்.
மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் , கண்டதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா, பேர்ஸியா மற்றும் அரபியா ஆகிய நாடுகளிலிருந்துவந்த வர்த்தகர்கள் இந்த முத்துப்படுக்கைகளை உடைமை கொள்வதற்காக சண்டையிட்டும் உள்ளனர். 1294ஆம் ஆண்டு  மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன், அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன. தாம் உழைத்துக்கொண்டதிலிருந்து 10 சதவீதத்தினை மன்னனுக்கு செலுத்த வேண்டியும் இருந்தது.
காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆயினும் 1881ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் அடுத்த வருடம் விநியோகிப்பதற்கு சிப்பிகள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.
பிரித்தானியர் மார்ச் 1828 – மே 1832, 1796 – 1887 வரை பாரிய முத்துக்குளிப்பில் ஈடுபட்டனர். (30 தடவை) இதன் ஊடாக 4372985 ஸ்ரேலிங் பவுன் வருமானம் பெற்றுக் கொண்டனர். இதனாலேயே பிற்காலத்தில் முத்துக்குளித்தல் துறை பாதிக்கப்பட்டது.
புpரித்தானியரின் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம்  அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டுஅழிவின்விளிம்பில்உள்ளது.
இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிட  ஆரம்ப வைபவத்தில் இவரும் குடை பிடித்த வண்ணம் காட்சி தருவதை  அங்கு நடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணக்கூடியதாகவுள்ளது. இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.
1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, முசலிப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும்.
முத்துடன் இப்பிரதேச மக்களுக்கு இருந்த பரிட்சயத்தின் காரணமாக முத்து என்ற சொல் இப்பிரதேச மக்களின் பெயர்களுடனும், கிராமப்பெயருடனும் இணைத்திருப்பதைக் காணமுடிகின்றது. (உ-ம்) தங்கமுத்து, பாத்துமுத்து, , முத்துக்குட்டிவிதானையார், முத்து மரைக்கார், முத்து, முத்துச்சிலாபம், முத்தரிப்புத்துறை என்பதனைக் காணலாம்.
முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, கொண்டச்சி, சிலாவத்துறை, பொற்கேணி, வேப்பங்குளம், பூநொச்சி, நாலாம் கட்டை, இலந்தைக்குளம், பண்டாரவெளி, மணக்குளம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லீம்களில் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல்,சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது. இதனைப்பார்க்கும் போது அன்று செல்வம் கொளிக்கும் தொழிலாக இருந்த முசலிப்பிரதேச முத்துக்குளித்தல் நிகழ்வு மனக்கண் முன் வருகிறது. 
முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. உதாரணம்: மறிச்சுக்கட்டிபார், கொண்டச்சிபார், அரிப்புபார் சிலாபத்துறைபார். முசலிப் பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். இதில்; இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படைவசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு,கடைகள் இங்கு நடை பெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டுள்ளாக அறியக் கிடைக்கிறது.
முத்துச் சேகரித்தல்                                                              
 முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.
 mannar 3
முத்தெடுக்கும் முறை                                          
சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணிமுடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில்எடுப்பார்கள்.
முத்தின்வகைகள்:
1. ஆணி,2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில்,6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.
இன்றைய நிலை:
இயற்கைச் சுற்றாடலை சாதாரணமாக மிக அதிகமாகவே மனிதன் பயன்படுத்துகிறான். விலங்கினங்களும் தாவரங்களும் வளரவும் பெருகவும் வேண்டும். ஆயினும்; சிலவேளைகளில் இத்தகைய விலங்கினங்களும் தாவரங்களும் பெருகவும் வளரவும் சந்தர்ப்பமளிக்கப்படாமல் மனிதனால் பிடிக்கப்பட்டு அல்லது அறுவடை செய்யப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அடுத்த தடவை பிடிப்பதற்கோ அல்லது அறுவடை செய்யவோ போதுமானளவுக்கு அவை கிடைக்காதுபோகின்றன. இவ்வாறாக நீண்ட காலத்துக்கு மிக அதிகமானளவுக்கு இவை எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் இறுதி விளைவாக எதுவுமே எஞ்சியிராமல் அல்லது சொற்ப அளவே எஞ்சியிருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மன்னார் வளைகுடாவின் முத்து அகழ்வுகள் மிக அதிகமானளவுக்கு நடைபெறுவதனை கூறலாம்.
 mannar 1OLYMPUS DIGITAL CAMERA

Origins of Tamils?[Where are Tamil people from?/PART :28

Compiled by: Kandiah Thillaivinayagalingam         

When we write ‘three hundred’, we use two symbols: a ‘three’ and a couple of ‘zeros’. But what if, like the Sumerians/Babylonians, we had no symbol for ‘zero’?  When they wrote ‘sixty’ it was  Babylonian 1.svg, which is exactly the same as ‘one’! Their symbol Babylonian  10.svg   can mean ‘ten’  or ten x 60  or ten x 60 x 60  or . . . So why wasn’t this a big problem for them? It seems that the context helped them.By ‘context’ I mean the sentences in which they found the numbers.So we give an example below to explain this.



"A poor fisherman had only small boat and with luck he would catch << fish in a day. In a month he’d catch about    fish. During this time he needed  fish to feed his family. The rest he sold."Now we give below possible explanation:

Boats:  can mean 1, or 1 x 60, or 1 x 60 x 60 or..... But he was poor, so he couldn’t have had 60 boats.He must have had only one boat.Fish caught in a day:<< can mean 20, or 20 x 60, or 20 x 60 x 60 or .... He had only 1 small boat; he couldn’t have stored 1200 fish on it.So the fisherman caught 20 fish per day.
Fish caught in a month: A month has about 30 days, so he caught about 600 fish.    can mean 9 x 60 + 50 = 590 which is about right,  or  9 x 60 x 60 + 50 x 60 =  which is way too much. He caught about 590 fish a month.
  

Fish to feed his family: can mean 5 (way too few),  or 5 x 60 = 300 (looks right),  or 5 x 60 x 60 = 18,000 (way too large).


Fish sols in a month:The fisherman had 1 boat. He caught about 20 fish a day, 590 per month. He used 300 to feed his family and sold the rest.So in a month he sold 590-300=290 fish, which is 9 or 10 per day. 


We use positional notation to represent not only very big numbers but also very small ones: that is, we have the decimal representation of fractions. For example, we can write 1/4 as 0.25, with 2 in the tenths place and 5 in the hundredths place. The Mesopotamian people took the analogous step: they introduced a 1/60 place, a 1/3600 place and so on.Moreover, due to 60's many factors, Mesopotamian people sexagesimal representations were typically much simpler than our decimals. For example, since 1/4 = 15/60 this fraction could be written by the Mesopotamian people with just 15 in the 1/60 place. An even more telling example is 1/3, which didn't bother the  Mesopotamian people at all, while we have to resort to an infinite decimal.

The above table of reciprocals illustrates the benefits of 60 as a base, and also that 60 was not a cure-all. The reciprocal 1/7 could only be expressed as an infinite repeating sexagesimal, just as we would write it as an infinite repeating decimal. Indeed, tables of reciprocals often left out such problematic examples, though they did have methods for obtaining approximations to these fractions.Hence  the table had gaps in it since 1/7, 1/11, 1/13, etc. are not finite base 60 fractions.

Sumerian treated division as "multiplication by the reciprocal." Instead of computing 19 divided by 12, they would compute 19 times the reciprocal of 12.That is, in order to divide they made use of fact that a/b = a cross (1/b).To this end,they also constructed tables of inverse,like the one given above.They also had tables of squares,cubes,square roots ,cube roots and tablets for geometrical exercises,division problems from around 2600 BC onwards, However Their geometry was sometimes incorrect..Two tablets found at Senkerah on the Euphrates in 1854 date from 2000 BC, give squares of the numbers up to 59 and cubes of the numbers up to 32. The table gives 82= 1,4 which stands for = (1 x 60) + 4 = 64 & and so on up to 59² = 58, 1 = ( 58 x 60) +1 = 3481.Also These mathematicians used the formula, ab =  [(a + b)2 - a2 - b2]/2  to make multiplication easier as they already knows squares of the numbers. Later Babylonian tablets dating from about 1800 to 1600 BC cover topics as varied as fractions, algebra, methods for solving linear, quadratic and even some cubic equations with the help of tables,studied circular measurement.,One Babylonian tablet[YBC 7289] gives an approximation to √2 accurate to an astonishing five decimal places.  Yet another gives an estimate for π of 3 1⁄8 [3.125], a reasonable approximation of the real value of 3.1416.

In the history of mathamatics tamils had great achievements. The below verses/poems indicates that they knew how to calculate area of circles even before pythagorouss  & others. This was stated in a text called Kakkai Paadiniam  of pre christian era by female poet Kakkai Paadiniar.In this text she explained the area of a circle in a poem 


"விட்டமோர் எழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டென இரட்டிச் செய்யின் திகைப்பன சுற்றுத் தானே"- Kakkai Paadiniam.This poem is said to be written by Kakkai Paadiniar as per professor Kodumudi S Shanmugam. 

Here  it says:Circumference of circle = 2*(7+4)*D/7.

Here  π = 22 / 7 (This is an approximate value for π 

Also Kanakkathikaram Poem 50 explain how to calculate circumference of a circle.


“ விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டு நான்மா வதினில் மாறியே – எட்டதனில்
  ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
  தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

Explanation

விட்டம்தனை விரைவா யிரட்டித்து =Twice of diameter 
                                                 = 2r + 2r = 4r (Diameter= 2r )
மட்டு நான்மா வதினில் மாறியே       =by multiplying by 4
எட்டதனில் ஏற்றியே                           =by multiplying by 8                   
செப்பியடி = divide by 20

Circumference of circle                             = ( 4r x 4 x 8 )  / 20
                                                             =  32 / 5 r
                                                             =  2 ( 16/5) r
                                                             = 2 π r

Here  π = 16 / 5 = 3.2 (This is an approximate value for π 
PART :29 WILL FOLLOW

சமையலுக்கு உகந்த எண்ணெய் எது?

பெண்களுக்கான  வழிகாட்டி
பொதுவாக நாம் பயன்படுத்தும் எண்ணெயாக தற்போது சூரிய காந்தி எண்ணெய் அதிகரித்து வருகிறது.
இந்த எண்ணெய்யில் அமிலம் அதிகம் உள்ளது. தீய கொலஸ்ட்ராலை மட்டுமன்றி, நல்ல கொலஸ்ட்ராலையும் குறைப்பதால், சூர்ய காந்தி எண்ணெய்யை தொடர்ந்து உபயோகிக்கப்பதால், நமது உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்காமலேயே போய்விடுகிறது. இதனால், உடல் பல்வேறு கோளாறுகளை சந்திக்கிறது.
சூரிய காந்தி எண்ணெயில் அதிகமாக இருக்கும் அமிலத்துடன்,  லினோலிக் அமிலம் குறைவாக உள்ள பாமாயிலுடன் கலந்து உபயோகிக்கலாம். பலரும், பாமாயில் எண்ணெய் உடலுக்கு மிகவும் கெடுதல் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சூரிய காந்தி எண்ணெயால் நமது உடலுக்குக் கிடைக்காத கொழுப்புச் சத்தைப் பெற, சூரிய காந்தி எண்ணெயுடன் கலந்தோ அல்லது ஒரு நாள் சூரிய காந்தி எண்ணெய், மறுநாள் பாமாயில் என்று மாற்றி மாற்றி உபயோகிக்கப்பதும் நல்லது.
பொதுவாகவே, எந்த வொரு எண்ணெயாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே எண்ணையை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மாதத்தில் ஒரு முறையாவது ஆலிவ் ஆயில், பாமாயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய் என சுழற்சி முறையில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.
ஒரைசனால் எனப்படும் அரிசி உமி எண்ணெயும் விட்டமின் இ நிறைந்த எண்ணெய்-ஆக உள்ளது. ஆலிவ் எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும் விலை அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர் அதை வாங்கிப் பயன்படுத்துவது இயலாதது.
எது எப்படி இருந்தாலும், எண்ணெயை அளவோடு சேர்த்துக் கொள்வது நலம்.

பாசமா? பணமா?

அன்றாட வாழ்விற்கு பணம் தேவையே அன்றி. அதுவே முழுமையான இன்பத்தை ஒருபோதும் அளிக்காது. ஏனெறால் ஒருவர் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் பணம் உழைப்பதற்காக தனது நேரத்தை உபயோகப்படுத்துவதால் குடும்ப அங்கத்தவர்களுடன் பாசத்தை பகிர்ந்து கொள் வதற்கு நேரமின்மையாலும்,வேலைப்பளுவினாலும் உடலும், உள்ளமும் சோர்ந்து விடுவதால் உண்மையான மகிழ்ச்சி, உற்சாகத்துடன் குடும்ப அன்றாட வாழ்வியலில் இரண்டறக்கலக்க முடியவில்லை.ஆதலால் சொல்கிறேன்


ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப உறுப்பினர் அனைவரிற்கும் உரியநேரத்தை அவரவர் தேவைகளிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதோடு,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நன்கு அளவளாவிக் கொள்வதன் ஊடாகவே ஒவ்வொருவரினதும் குடும்ப வாழ்வில் பாசத்தைக் காணலாம்.
ஆகவே மனித வாழ்விற்கு பணம்தான் பாசத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.
என்பதே எமது கருத்தாகும்