காதல் வலி ..


உன் பார்வைக்காக 
 தவம் இருந்து
 உன் மீது நான் 
காதல் கொண்டேன்


நீயோ 
உன்னை நேசிக்கும்
 உயிரை விட்டு விலகி 
அவன்  மாயையில் 
மதி மயங்கி 
அவன் மீது 
விருப்பு கொண்டு  
அன்பை பொழிந்து 
அலையும்  இதயமே!

நான் உன் மீது
 கொண்டு இருக்கும் மோகம்
 வரையும்  ஓவியம் இல்லை -அன்பே 
அது அழியாத உணர்வுகள் 
அதை அழிக்க நினைத்தாலும்
அதன் வலி  கண்ணீராகத் தான்
 வெளிப்படும் என் உயிரே

     ஆக்கம்:அகிலன்,தமிழன்    

விவாகரத்து அவசரமா?


அன்று,கனடிய மண்ணின் முதன்முதலில் கால் பதித்த காலமது.டொரோண்டோ நகர வீதியின் பல இடங்களில் வழக்கறிஞர்களின்  ''need quick divorce ,call 416-0000000 ' என்ற விளம்பர ங்களை வாசித்து வியந்திருக்கிறேன். [தங்கள் வருமானத்திற்காக] ''அடுத்தவனை விட நான் கெதியாக உங்களை பிரித்து வைப்பதில் கெட்டிக்காரன்'' என்று அவ்விளம்பரம் என் காதுக்குள் குசுகுசுக்க எனையறியாமல் எனக்குள் நான் சிரித்திருக்கிறேன். இத்தனை தூரம் திருமண வாழ்க்கை என்பது காசு வைத்து ஆடும் ஒரு ஆடு,மாடு மந்தைகளின் தொழில் போன்று   மேற்கு நாடுகளில் மலிந்துவிட்ட்து என எண்ணினேன்.
அவ்வேளையில்நான் எமது நாட்டில்  எனது சிறுவயதில் கேள்வியுற்ற சில குடும்பங்களின் கூடி வாழ்ந்த வாழ்க்கையினை  அன்று  எண்ணி. பெருமைப் பட்டிருக்கிறேன்...
உதாரணமாக,[பெயர்கள் கற்பனை]ஒரு சம்பவம்.
கணவன் கோவலனை எதிர்பார்த்து கண்ணகி உணவும் உண்ணாது ஆவலோடு அறுசுவையும் ஆக்கி காத்திருக்க, அவனோ குடித்துவிட்டு வந்து அவளையும் அடித்துப்போட்டு, ஏச்சுக்களோடு வெறும் நிலத்தில் வீழ்ந்துகிடக்க,அவளோ  கவலையுடன் அவன் தலைக்கு தலையணை வைக்க
செல்ல,அவனோ ஏசியபடி அவளை உதைந்துவிட அப்படியே போய் தூர விழுந்தவள் மயங்கி,பின் மயக்கம் தெளியவே மிகவும் சிரமப்பட்டு தட்டில் உணவெடுத்துவந்து அவனருகில் இருந்து அவ்வுணவை தன் கைகளில் திரட்டி அவன் வாயருகில் கொண்டு செல்ல அத்தட்டினையும் உணவையும் தகாத வார்த்தைகளினால்  ஏசியபடியே அவன் கைகளினால் அடித்துவிட உணவு எல்லாமே தரையில் பரவிட இறுதியில் அவர்களது.நாய்பாடு கொண்டாட்டம்.
இப்படி பல் விதமான யுத்தம் நாள்தோறும் முன்னிரவு நடப்பதனை பார்க்கும் அயல் வீட்டுக்  கண்கள்,அவளுக்கு காலையில் ஆறுதல் கூற காத்திருக்கும் வேளையில்,
அக்கோவலனும், கண்ணகியும் வீட்டிலிருந்து வீதி வழியே ஒருவர் ஒருவர் உரசிக்கொண்டு கலகலப்பாக சிரித்து உரையாடிக்கொண்டு, -ஆறுதல் சொல்ல காத்திருந்த அயல் வீட்டுக் கண்க ளுக்கும் -புன்னகையோடு விருந்தளித்து செல்வர்.

இப்படியான வெவ்வேறு சம்பவங்கள் பல குடும்பங்களில் பலமுறையும் நடைபெறுவதனை கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதற்காக கணவன் அரக்கனாகவும்,,மனைவி அடிமையாகவும் இருக்க வேண்டும் என்றோ  அல்லது கணவன் அடிமையாகவும் மனைவி அரக்கியாகவும் இருக்க வேண்டும் என்றோ கூறவும் இல்லை, எவ்வளவு தூரம் நம் இனத்தவர் அன்று பொறுமைசாலிகளாக இருந்தார்கள் . அதனால்  பிரிவு என்பதினை சந்திப்பது மிகமிக குறைவாகவே இருந்தது  என்பதனையே நினைவூட்டிட எத்தனித்தேன்.

ஆனால் எம்மத்தியில் இன்று எல்லாம் நிலைமை தலை கீழாகிவிட்டது. எடுத்ததிற் கெல்லாம் பிரிவே முடிவு என்ற நிலைக்கு இளையோர் வந்துவிடுகிறார்கள்.
.காதலித்து மணமேடை வரை வந்தவர்கள் கூட அற்ப விடயங்களில் குறைக்கண்டு அவ்விடத்திலேயே மன முறிவடைந்து திருமணத்தினை நிறுத்திவிடும் சம்பவங்களும் நம் மத்தியில் நடந்தேறுகின்றன.
கனடாவில் 2006 இல் 08 வீதமாக காணப்படட திருமண முறிவுகள் தற்போது 04 வீதமாக குறைந்துள்ளன என்று கனடிய தகவல்கள் மகிழ்வுடன் கூறினாலும் தமிழர் மத்தியில் அது பலமடங்கு அதிகரித்துள்ளதாகவே நமது ஊடகங்கள் கவலை தெரிவிக்கின்றன.

காதல் கல்யாணமானாலும் சரி பேச்சு கல்யாணமானாலும் சரி திருமணத்தின் பின்னரே தம்பதிகள் ஒருவரை ஒருவர்தெரிந்து கொள்ளும்  நிலை ஏற்படுகிறது.காதலிப்பவர்கள் கூட எத்தனை வருடம் காதலித்தாலும்   ஒருவரை ஒருவர் கவர்ந்து கொள்வதற்காக தங்கள் உண்மை த்தோற்றத்தினை மறைத்து கொள்வதில் ஒருவரைவிட மற்றவர் புத்திசாலியாகவே காட்டிக்கொள்வர்.. அதனால் திருமணத்தின் முன் அவர்கள் ஒருவரை சரியாகத் தெரிந்து கொள்வதில்லை. புரிந்துகொள்வதில்லை.
எனவே தான் காதலித்து கல்யாணம் செய்ப்பவர்கள் இங்கு திருமணத்தின் முன் இருந்தது போன்ற அணுகுமுறைகள் திருமணத்தின்பின் இருவருக் குமிடையில் இருக்கவேண்டும் என்று எல்லாத் தருணங்களிலும் எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் கணவன்/மனைவியாகிவிட் ட இருவருக்கும்  இதுவரையில் இல்லாத குடும்ப சுமைகளினை பங்கிடவேண்டிய வர்களாகிவிடுகின்றனர் என்பதனை இருவருமே உணர்ந்துகொள்ள வேண்டும்.

முதலில் நாங்கள் ஒன்றினை தெரிந்து கொள்ள வேண்டும்.மனிதன் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்.அவர்களது விருப்பு,வெறுப்பு, எல்லாம் ஒன்றாக இராது. அவர்களது செயல்,நடை ஒன்றாக இராது.ஒருவன் மாதிரி நூறு வீதம் சமமான இன்னொருவனை நாம் காண முடியாது. நான் நினைக்கிற என்னை மாதிரி இன்னொருவன் 100 வீதம் இருக்க முடியாது.
இதே போன்றே குடும்ப வாழ்விலும் இணையும் கணவன்/மனைவி
கிடையில் வித்தியாசமான விருப்பு,வெறுப்புக்கள் இருக்கலாம். அவற்றினை புரிந்து விட்டுக்கொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு குடும்பத்தின்  பங்குதாரர் கணவன் -மனைவி என உணர்ந்து உங்கள் பொறுப்புக்கள் என்ன என உணர்ந்து நடக்க வேண்டும்.
இருவரும்,ஒவ்வொருவரினதும் அபிப்பிராயம், வேலைப்பழு, இரசனை, போன்றவற்றை தெரிந்தும்,புரிந்தும் நடக்கவேண்டும்.
ஒருவர் கருத்துக்களை ஒருவர் செவிமடுப்பதும்,அதுபற்றி கலந்துரையாடுதலும்  கணவன் மனைவிக்கிடையில் மேலும் அன்பினை வளர்த்துக் கொள்ளும்.
அவற்றினை  விடுத்து எடுத்ததுக்கெல்லாம் பிரிவு தான் முடிவு
எனில் விவாகரத்து என்பது நீங்கள் உணரும் பிரச்சனைகளை ஒருநாளும் தீர்த்து வைக்காது.பதிலாக கவலைகளை அதிகரிக்கவே செய்யும்.இருவர் இணைந்து வாழ்வதே வாழ்க்கை.பிரிந்தவர்கள் உலகில் யாருமே சந்தோசமாக வாழ்ந்ததற்காக நாம் அறியவில்லை..
அத்துடன் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்களின் பிரிவு பிள்ளைகளுக்கும் மனதளவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்.இள வயதில் பிள்ளைகளுக்கு விரக்தியும், வேதனையும் ஏற்பட்டு அதன் விளைவாக விளைவாக எதற்கும் கோபப்படும் நிலையும், தனிமையான, பாதுகாப்பற்ற உணர்வும் நிறைந்தே காணப்படும்.  பிள்ளைகளின் கல்வியில் உயரிய நோக்கத்தினை  அடைய பெற்றோர்களின் பிரிவு பிள்ளைகளுக்கு தடைக்கல்லாகவே  நிமிர்ந்து  நிற்கிறது.
அதேவேளை,பிரிந்தவர்கள் ஆணோ/பெண்ணோ வேறு யாருடனும் சென்று [தம்மைத் தானே கேவலப்படுத்தி] மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விடவும் முடியாது.
விவாகரத்து என்பது ஆத்திரத்தில் அறிவிழந்து தற்கொலை முயற்சியில் இறங்குவது போலாகும்.வாழ்க்கை என்பது வாழ்வதற்கே! வழக்காடு மன்றம் செல்வதற்காக அல்ல என்பதனை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டு சகல தரப்பினரும் இனிதே வாழ்ந்து காட்டலாம்.

-ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்.




எதுதான் தலைவிதியோ?


விதி என்பது ஒருவரது நிலைமைகள் மற்றும் காரணிகள் மூலமாக ஏற்படும் சிக்கல் வாய்ந்த சேர்க்கையால் உண்டாகும் ஒரு விளைவு என்று கூறலாம். ஒருவரது விதி அவர் பிறக்கும்பொழுதே  அவரவர் முற்பிறப்பில் (?) செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிடுகின்றது என்று சமய சாஸ்திரங்கள் பகர்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் எல்லாமே நாம் முற்பிறப்பில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் விளைவுகளின் அடிப்படையில் மாத்திரமே நடை பெறும் என்றும், அதாவது எதுவும்   நமது கர்ம விதிப்பயன்படி மாத்திரமே, நமது ஆன்மாக்கள் தமது போக்குகளை வைத்துக்கொள்ளும்  என்பது காலம் காலமாக எடுத்துரைக்கப்பட்ட அறிவூட்டலாகும்.

ஆனால், அறிவோடு சித்திக்கும் எவரும் இப்படியான நிறுவப்படாத, அர்த்தமற்ற கூற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பர். அப்படி நிறுவமுடியாத ஒன்றுக்கு, வெறுமனே அது விதிதான் அன்று கூறுவது, ஆராய விரும்பாதவர்களின் ஒரு சோம்பேறித்தனமான ஒரு வீழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். தெரியாது என்பதைத் 'தெரியாது' என்று சொல்லாது அதற்கு எதோ ஒரு சொல்லை வைத்து அழைப்பது சுத்த அறிவீனமாக இல்லை?

ஒருவருக்கு வரும் இன்பமோ, துன்பமோ பின்வரும் சில காரணிகளால் மட்டுமே ஏற்படும்:
அவரின்,
* ஆசைகள்/அபிலாசைகள்.
* குடும்ப சூழ்நிலை
* சமுதாய எதிர்பார்ப்பு
* சுய முயற்சி
*உற்பத்தித் திறன்/தரம்
* மேலாண்மை
* உளப்பாங்கு ஒழுங்கு
* உகந்த தீர்மானம்
* திருப்பு முனை சாமர்த்தியம்
* செல்வாக்கு
* ஏற்புடைமை / சகிப்புடமை.

அதாவது, தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு, பிழையான நேரத்தில், பொருத்தம் அற்ற இடத்தில், வேலைத்திறன் அற்ற செயல்பாட்டுடன், நுகர்வோரின் எதிர்பார்ப்பினை அறிந்து பூர்த்தி செய்ய முடியாதவர்கள் கடடாயம் தோல்வியைத் தழுவி துன்ப நிலைக்குத் தள்ளப்படுவர். இவர் வேறு விதமாகச் செயல்பட்டிருந்தால் பலன் நல்ல விதமாக கிடைத்திருக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலைகளினால் கொல்லன் தெருவில் ஊசியோ, அந்தணர் தெருவில் மாமிசமோ விற்றால் எப்படி உயர்வடையலாம்?

விதிப்படிதான் எதுவும் நடக்கும் என்று நினைத்திருப்பது ஒரு அர்த்தமற்ற நம்பிக்கை என்றே கூறலாம்.  விதி உண்மை என்றால்  எல்லோரும் பேசாமல் வீட்டிக்குள்ளேயே இருந்து இரவும் பகலும் படுத்துக்கொண்டே இருந்துவிடலாமே! நமக்கு வேண்டிய வீடு, வசதி, வருமானம் எல்லாம் விதியே பார்த்துக்கொள்ளுமே!

ஒருவர் விதம் விதமாகச் சிந்திக்க வைப்பதும், விதியை நோக்கிய விதியின் பாதையில்தான் என்று விதியை நம்புவோர் சாதிப்பர். ஒருவரின் விதியை முன்கூட்டியே யாராவது சொல்லிவைத்திருந்தார்களேயென்றால், நடந்தபின்னர் அதைச் சரிபார்த்து 'ஆமாம், அது விதிப்படிதான் நடந்தது' என்று நிரூபணம் ஆக்கி விடலாம். ஆனால், நடந்த பின்னர் அதை விதிதான் என்று கூறுவது பொருத்தம் அற்றது. வேண்டும் என்றால், விதி என்பது 'நடந்து முடிந்த ஒரு விடயத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பதம்' என்று எடுத்துக்கொள்ளலாமே ஒழிய பழைய கர்ம வினைகளின் தொடர் விழைவுத் தாக்கம் என்று எடுத்துக்கொள்ளுதல் அறியாமை என்றே கூறவேண்டும்.

உதாரணமாக, விமானம் ஒன்று 400 பயணிகளுடன் சமுத்திரத்தினுள் விழுந்து அனைவருமே மரணிக்கும்போது இந்த விதி எங்கே போனது? ஒரு யுத்த காலத்தில் 5000 மக்கள் ஒரே அடியாகக் கொல்லப்படுவது எந்த வகையில்? அந்த 400 / 5000 அப்பாவிகளுக்கு இந்த நாள், இன்ன நேரம், இந்த இடத்தில் இப்படியான முடிவு நடக்க வேண்டும் என்று ஏற்கனவே செய்யப்படட பாவங்களின் நிமித்தம் எழுதப்பட்டு, அதன் பிரகாரம் எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து வைத்ததா அந்த விதி? விதிப்படி அந்த விமானம்தான் இன்றோடு வாழ்க்கை முடிய வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஏன் வீணாக அந்தப் பயணிகள் பலியாக வேண்டும்?

விதிக் கொள்கை என்பதே உயர் குலம் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்களால், ஏனையோரை அடக்கி வைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒன்றுதான். 'நீ முன் பிறப்பில் செய்த பாவங்களின் நிமித்தம் இப்பிறப்பில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றாய்; மறு பிறப்பிலாவது உயர் நிலையை அடைய வேண்டும் என்றால், ஒன்றும் சிந்திக்காது அடிமையாய் இருந்து நமக்கு ஊழியம் செய்து கொண்டே இரு; இது எல்லாம் கடவுள் கணக்கு'  என்று மூளைச் சலவை செய்து நம்ப வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். இவர்களும் அப்படியே நம்பி அடிமைகளாய் வாழ்கின்றார்கள்.

விதியை நம்புவோர்களே, தங்கள் விதியை மாற்றலாம் என்று பூஜைகள், வழிபாடுகள் எல்லாம் செய்வார்கள்;  இறந்துபோன மற்றும் இனி இறக்கப்போகும் மனிதச் சுவாமிகளின் படங்களை அடிக்கடி மற்றையோர்களுக்கு அனுப்பி தொடர் எரிச்சல் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். மாற்றமுடியாத விதிக்கு ஏன்தான் இந்த ஆர்ப்பாட்ட்ங்களோ தெரியாது!

நான் எப்பொழுதும் சொல்வதுபோல, முன் பிறப்பிலோ, வரும் பிறப்பிலோ நான் யார், என்ன, எது, எங்கு என்று ஒன்றுமே தெரியாத போது, அந்த என்னவோக்கள் அல்லது இல்லாததுகள் செய்த/செய்யாத நல்லது, கெட்டதுகள் எல்லாம் ஏன்தான் என்னைப் பாதிக்கவேண்டும்? யாரோ, என்னவோ, எங்கோ, எப்பவோ செய்யும் பாவங்களுக்கு என்னை இப்போது, இங்கு தண்டிப்பது சுத்த அநீதியாகத் தெரியவில்லையா என்று ஒரு கணம் யோசித்தீர்களேயானால் உந்த கர்ம விதிகள் எல்லாம் ஓர் அர்த்தமற்ற பிதற்றுதல் என்றுதான் புரியவரும்.

ஆகவே, விதி என்பது உங்கள் மதியை மயக்கும் ஒரு சதியே ஒழிய வேறு  ஒன்றுமே இல்லை; உங்கள் 'விதி' உங்கள் கையில்தான் உள்ளது; வேறு ஒரு புறக்காரணிகளில்  இல்லை
                             ஆக்கம்:செல்வத்துரை, சந்திரகாசன்                         

Superstitious Beliefs Of Tamils/Part 05 A [Suthipodal/‘drishti’ or evil eye]

[Based on Tamil article "தமிழரின் நம்பிக்கைகள் :பகுதி 05 A ["கண்ணேறு/திருஷ்டி] " published in theebam.com]
Do you know what this ‘suthipodu’ - சுத்திபோடு[Suttipodal- to ward off ‘drishti’ or evil eye]is ? it is a home-remedy to ward off the evil eye, cast on you, or your belongings, action, success etc. Even a good sari or ear ring[mookkuthi] , long hair, proud walk, good singing , scoring good marks in the exam- anything can be the cause of an evil eye or drishti.”Avalodu kannu karinkannakkum [அவளோடு கண்ணு கருங்கண் ஆக்கும்]; karinkallai polikkum [கருங்கல்லை  பொளிக்கும்]- her eyes are so bad that they can break a granite stone”, old women [patties] in the villages used to say.

There is a remedy[ ‘pariharam’] in our system, for every problem, So, your mother or grand mother or any elderly woman in the family, picks up a handful of salt pebbles adds one or two dry chillies and rotate that stuff in her hand around your hair or face and sometime around your whole body, thrice, making circles in the air and throws that salt-dry chilly["uppu-mulakai"] collection into the burning fire in the fire-wood stove in the kitchen. It will make a "put=put" sound and with that is gone the condemned ‘kandrishti’. The intensity of the sound is an indicator for the density of the ‘drishty’ cast on you and absorbed by the salt-dry chilly pack. In the olden days, fire-wood stove or ‘aduppu’‘அடுப்பு’ was the main heat provider for cooking and later, when that vanished from the kitchen, only salt was used as a dristhi repellent and thrown into the well water, and in the absence of a well, inside a bucket- full of water.

A Tamil poem of Sangam period:
"மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்"
The king climb on a horse carrying a spear on his shoulder
[At the time ,]The king show a tiger,with spear- stab the tiger
[After that,Again ]The king went , while return towards Palace
When women show the king,they perform[show] "Aalathi"

மரமது - அரச மரம்/peepal tree = (அரசு/KING)
மரத்திலேறி - மா மரம்/mango tree = மா என்பது குதிரை/HORSE
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் = வேப்ப மரம்/ margosa or neem tree = (வேல்/SPEAR)
{Eg:ஆலும் வேலும் பல்லுக்குறுதி }
மரத்தைக் கண்டு - வேங்கை மரம்/indian kimo tree,வேங்கை= புலி/ tiger
மரமுடன் - ஆல் மரம்/banyan tree
மரமெடுத்தார் - அத்தி மரம்/fig tree
Hence ஆல் + அத்தி = ஆலத்தி, ie Aal + Athi = Aalathi

"Arathi" with turmeric water, with which we welcome home the newly married couple/VIP and after every auspicious function at home is also some sort of suttippodal.When a child falls ill or in case of some misery in the family and if it is suspected that some person's jealous and evil eye is the cause then at his/her next visit some one in the family follows him/her, collects a handful of earth on which that person has set foot is collected and this sand is circled three times over the head of the affected person who will spit on it three times and this earth is thrown in the fire in the kitchen with three dry chillies to ward off the evil spirits, evil eyes and evil tongue.As a precautionary measure, a big black pottu (a round mark on the forehead) will be applied on the forehead of the baby to ward off the evil eye of the visitors


[
 Kandiah Thillaivinayagalingam]


Part 05 B::Frenzied veriyattam dance & talisman will follow 

ஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017

  தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.
 ...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம்   அவன்இறந்துவிட்டால்   அவன் பெருமைகளை  எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக?
தாம் நன்மைகள் செய்யாவிடினும் செய்தவனை புகழ்ந்தாவது புகழ் பெறலாம் என்ற  சுடலை ஞானமா?
அல்லது போய்விட்டான்தானே என்ற அலட் சியமா ?
அவன் வாழும்போது அவனை புகழ்ந்திருந்தால் அவன் மனம் சந்தோஷமடைந்து சமுதாயத்திற்கு மேலும் நன்மைகள் புரிந்திருப்பானே! அவனால் பயன் பெறும் சமுதாயத்தினுள் நீயும் ஒரு அங்கம் அல்லவோ! ஒரு மனிதனை இனிய சொற்களால் இன்பமடைய செய்வதுவும் புண்ணியம் அன்றோ! 
எனவே  சமுதாயத்தினை வளர்ப்போரை வாழும்போது வாழ்த்துவோம். நாமும் வாழ்வோம்.வளர்வோம்! ..[தீபம்]