
சிறுபிள்ளைத்தனம் எதுவரை?
சிறு குழந்தைகளின் கண்களைப் பாருங்கள்.
கள்ளம் கபடமே காணப்படாது.
::கதை::
என் சக ஆசிரியை மேரி, “நேற்று என் மகள் தன் விளையாட்டுக் காரை என் தலையில்
எறிந்துவிட்டாள். தலைவலி பிளக்கிறது!” என்று முனகினாள்.
உடனே, “அவளை அடித்தாயா?” என்றொரு
கண்டிப்பான குரல் ஒலித்தது.
“அவளுக்கு ஒரு
வயதுதான்!” என்றாள் மேரி. `இந்த வயதில் அடித்துத் திருத்துவதா!’
என்பதுபோல் ஆயாசத்துடன் ஒலித்தது அவள் குரல்.
“அதனால் என்ன!”
என்றாள்...