- "நாகரிகக் கோமாளிகள்"-&-‘’முகநூல்" (-குறும் கவிதை)

 

- "நாகரிகக் கோமாளிகள்"-

 

"படைத்தவன் மகிழவென அவனுக்கே படைப்பவனை

பகுத்தறிவு படிப்பித்து கிரகணம் வழிபடுபவனை

பண்பாடு போதித்து களியாட்டம் ஆடுபவனை

பச்சிளம் குழந்தையும் சொல்லும் நாகரிக்கோமாளியென"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

-‘’முகநூல்"-

"முகநூல் படும்பாடு தலையை சுற்றுது

முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி

முகத்தை ரசிக்கினம் காதல் நாடி

முழுதாய் அலசினம் நட்பு வேண்டி"

 

"முத்து முத்தான அறிவும் அங்குண்டு

முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு

முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு

முடிந்தவரை ஏமாற்றி கறப்பவரும் உண்டு"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment