-01-
காதலன்: "நீ எனக்கு உயிரை விட முக்கியம்!"
காதலி: "அப்போ உயிரை விட்டுட்டு என்னை எடுத்துக்கோ!"
-02-
கணவன் : "நீ என்னை விட உன் செல்போனை அதிகம் காதலிக்கிறாய்!"
கணவன்: "அது உண்மைதான்... செல்போன் என்கூட ரொம்ப நேரம் பேசுது... நீங்க அப்பிடி பேச மாட்டீங்க!"
-03-
மனைவி: “நான் இவ்வளவு நேரமாய் பேசினது உங்களுக்கு புரியுதா?”
கணவன்: (தனக்குள்)“புரியுதா இல்லையா தெரியல… பேசியதிலிருந்து ஏதாவது கேள்வி கேட்டுவிடுவியோ எண்டுதான் பயமா இருக்கு!”
-04-
மனைவி: “ என்னங்க நீங்க இன்றைக்கு அமைதியா இருக்கீங்களே?”
கணவன்: “ எல்லாமே ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான்!”
-05-
மனைவி: “நான் பேசுறது அதிகமா?”
கணவன்: “இல்ல… நம்ம வாழ்க்கைக் கதையில் background music மாதிரி இருக்கு!”
-06-
போலீஸ்: லைசன்ஸ் காட்டுங்க.
டிரைவர்: சார், நேற்றுத் தான் எக்ஸ்பயர்.
போலீஸ்: அப்ப போயிற்று நேற்றைக்கு வா!
-07-
போலீஸ்: குடிச்சிருக்கியா?
டிரைவர்: இல்ல சார்.
போலீஸ்: அப்ப நீ பேசுறது ஏன் கீறு விழுந்த ஆடியோ ரெக்கார்ட் மாதிரி கேட்குது ?
-08-
போலீஸ்: ஏன் வண்டியில சைடு மிரர் இல்ல?டிரைவர்: சார், முன்னாடிதான் பாக்குறேன், ஓடுறேன்.
போலீஸ்: அப்போ, பின்னாடி வர்ற பிரச்சனை யார் பாக்குறர்து?
டிரைவர் : அந்த பிரச்சனையைப் பின்னால வருபவன் பார்த்துக்கொள்வான் சார் !
-09-
போலீஸ்: ஏன் இவ்வளவு வேகமாய் வண்டியை ஓட்டுறாய்?
டிரைவர்: சார், சீக்கிரம் போக.
போலீஸ்: சீக்கிரம் போறது சொர்க்கத்துக்கா, நரகத்துக்கா!
-10-
மனைவி: இந்த காக்கா கத்துறதா பாத்தா உங்க அம்மா வரப்போறது மாறி தெரியுது..
கணவர்: எப்புடி சொல்ற நீ..?
மனைவி: எவ்வளவு துரத்துனாலும் போகாமல் கத்திக்கிட்டே இருக்குல அதா வச்சு தான்.
-11-
மனைவி: ஏன் கிட்ட உங்களுக்கு ரொம்ப புடிச்சது என்ன.. அழகான முகமா..! பணிவான குணமா..! இல்ல பாசமான மனமா..!
கணவர்: உன்னோட இந்த காமெடி தான்..!
-12-
மனைவி: உங்கள எப்போதும் பார்த்துகிட்டே இருக்கனும்னு போல இருக்குங்க.
கணவர்: ம்,,,ம் ...அப்பவே ஜோசியர் சொன்னாரு , கலியாணத்துக்கு அப்புறம் சனியோட பார்வை நம்ம மேல தான் இருக்கும்னு.
-13-
மனைவி: தூக்கத்துல திடீர்னு ஏன் சிரிச்சீங்க.?
கணவர்: அதுவா கனவுல தமன்னாங்க வந்த அதனால தான்
மனைவி: அப்றம் ஏன் திடீர்னு கத்துனீங்க..?
கணவர்: டக்குனு நடுவுல நீ வந்துட்ட.
-14-
ஆசிரியர்: இரண்டு கழுதை சேர்ந்து கணக்குப் போட்டா எப்படி இருக்கும்?
மாணவன்: எங்கேயாவது உதைக்கும்.
-15-
மாணவன் :சார், பேப்பர்ல முட்டை போடாதீங்க.
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்; நான் சைவம் சார்.
-16-
ராமு : எங்க டீச்சர் ஒருவகையில் எனக்கு அம்மா மாதிரி.
வேலு: அவ்ளோ அன்பா இருப்பாங்களா?
ராமு:இல்ல, நல்லா தூங்க வைப்பாங்க.
-17-
மாணவன்: சார், என் தலையில் எறும்பு ஏறுது பாருங்கள்.
ஆசிரியர்: அதை ஏண்டா என்ன பார்க்க சொல்ற? மாணவன்: நீங்க தான் சார் என் தலையில எதுவுமே ஏறாதுன்னு சொன்னீங்க அதான்.
-18-
மாணவனின் தந்தை: என் பையன் ஒழுங்கா படிக்கறதில்லன்னு இருந்த டிவிய வித்துட்டன்.
வீட்டுக்கு வந்த ஆசிரியர்: வெரிகுட், பையன எங்க காணோம்?
மாணவனின் தந்தை:பக்கத்து வீட்டுக்கு டிவி பாக்க போய் இருக்கான்.
-19-
மன்னன்: தளபதி, போரில் நாம் தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன வழி சொல்லுங்க?
தளபதி: போரையே சந்திக்காமல் இருப்பது தான் ஒரே வழி மன்னா.
-20-
அமைச்சர்: செல்போன் அடிச்சாலே மன்னர் மயக்கமாகி விழுந்து விடுகிறாரே ஏன்?
தளபதி : யாரோ போர்முரசு ஒளியை ரிங் டோனாக வைத்துக் கொடுத்து உள்ளார்களாம்.
😁😁😁😁😁😁😁😁தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment