திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../18/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

 திரிகடுகம் தொடர்கிறது.....

பாடல் - 86

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்

கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,

நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்

குற்றம் தரூஉம் பகை.

 

விளக்கம்:

உயிரிடத்தில் அன்பு காட்டாதிருத்தலும், பொருள் மீது கொண்ட விருப்பத்தினால் கல்வியை விட்டுவிடுதலும், ஒருவரிடம் கொண்ட நட்பால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் குற்றங்களை விளைவிக்கின்ற பகைகளாம்.

 

பாடல் - 87

கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு

அகன்ற இனம் புகுவானும், இருந்து

விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்

முழு மக்கள் ஆகற்பாலார்.

 

விளக்கம்:

ஓருயிரைக் கொல்வதற்கு அஞ்சாதவனும், கல்லாதவர் கூட்டத்தோடு சேர்வதும், ஒரு முயற்சியும் செய்யாமல் இருக்கின்ற செல்வத்தை அழிப்பவனும், மூடர்கள் ஆவார்.

 

பாடல் - 88

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,

தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,

பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்

புணை இல் நிலை கலக்குமாறு.

 

விளக்கம்:

நோய் வந்து துன்பப்படுவதும், எமன் உயிரைக் கொண்டு போக வருத்தும் வகையும், செல்வம் இழந்த நிலையும், மன உறுதியைக் குலைப்பவையாகும்.

 

பாடல் - 89

அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,

பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,

இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்

பிறந்தும் பிறந்திலாதார்.

 

விளக்கம்:

அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார்.

 

பாடல் - 90

ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி

சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்

அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்

இருள் உலகம் சேராத ஆறு

 

விளக்கம்:

செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

...............................................................

"இரட்டை முகங்கள்!!" &'நேரம் இல்லை'

 



"இரட்டை முகங்கள்!!"

 

 

"இரட்டை முகங்கள் கொண்டு வாழும்

இங்கிதம் தெரியா வம்பு மக்களை

இடித்து உரைத்து ஒதுக்கி வைத்தால்

இன்பம் மலரும் ஒற்றுமை பெருகும்!"

 

 

"முன்னுக்கு ஒன்று மகிழ்வாகக் சொல்லி

பின்னுக்கு வேறு இழிவாகக் கூறி

பொன்னான நேரத்தை விரயம் செய்யும்

அன்பு அற்ற அரக்கர்கள் இவர்களோ?"

 

👹 

 

'நேரம் இல்லை'

 

"'நேரம் இல்லை' இலகுவாக சொல்லுகிறாள்

ஓரத்தில் நின்று வானத்தை பார்க்கிறேன்

அரசமர நிழலில் புத்தன் சிரிக்கிறான்

வீரம் எல்லாம் கண்ணீரில் கரையுது!"

 

"ஈர நெஞ்ம் கல்லாய் இருக்குது

இரகசியமாய் விலகி எங்கோ போகுது

அரவணைக்க துடித்த கைகள் இரண்டும்

மரத்து போய் சோர்ந்து விழுகுது!"

 

"'நேரம் இல்லை' தட்டி கழிக்குது

காரணம் எதோ அடுக்கி வைக்குது

பேரம் பேச அன்பு சரக்கல்ல

மரணம் வரை ஒட்டி இருப்பதே!"

 

"தூர போக துள்ளி குதிக்குது

நரக வேதனை அள்ளி கொட்டுது

கரணம் அடித்து ஒதுக்கி தள்ளுது

'நேரம் இல்லை' நானும் சாகிறேன்!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/அத்தியடி/யாழ்ப்பாணம்]

இவ்வாரம் வெளிவந்த திரைப்படங்கள்

சுருக்கமான பார்வை 



வாத்தி'' விமர்சனம் [Tamil movie ''Vaathi'' Review]

 வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்த மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், தனிகெல்லா பரணி எனப்  பலர் நடித்திருக்கும்  இப்படத்தினை நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்கஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

குருகுலம் கல்விக்கு பிறகு, கல்வியை வியாபாரம் செய்வதற்கு சமுத்திரக்கனி மற்றும் அவரது குழு முயற்சித்து வருகிறது. அதற்கு அரசு பள்ளியில் தரம் இல்லாத ஆசிரியர்கள் வேண்டும் என தனுஷை தேர்ந்தேடுத்து அரசு பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கின்றனர். ஆசிரியராக சென்ற இடத்தில் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தனுஷ் செய்யும் புரட்சிதான் இந்த படத்தின் கதை.

 பார்த்து ரசிக்கலாம்.[3/5]

 💃💃💃

''கொடை'' விமர்சனம் [Tamil movie ''கொடை'' Review]

 ராஜ செல்வம் இயக்கத்தில் கார்த்திக் சின்காஅனயா எனப்  பலர் நடித்திருக்கும்  இப்படத்திற்கு சுபாஷ் இசையமைத்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம்.

 ‘கொடை’ அத்தனை சிலிர்ப்பாக இல்லை.[1.5/5]

💃💃💃

''வசந்த முல்லை'' விமர்சனம் [Tamil movie ''Vasantha Mullai'' Review]

ரமணன் புருஷோத்தமா  இயக்கத்தில் பாபி சிம்ஹாகாஷ்மீராசரத்பாபு, ரமா பிரபா, கொச்சு பிரேமன் எனப்  பலர் நடித்திருக்கும்  இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன்   இசையமைத்துள்ளார்.

மென்பொருள் துறையில் பணியாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா), பணிச்சுமை தரும் பெரும் மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனை மலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று ஒரு பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.

படத்தின் வெற்றியும், தன்மையும் இடம் மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.[2.75/5]

 💃💃💃

''வர்ணாஸ்ரமம்'' விமர்சனம் [Tamil movie ''varnasramam'' Review]

சுகுமார் அழகர் சாமி இயக்கத்தில் சிந்தியா லவ்ர்டே முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கதீபன் சக்கரவர்த்தி இசையில் வெளியான படம்.

வெளிநாட்டு பெண் ஒருவர்  தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக்கொலைகளை பற்றி ஆவணப்படம் எடுக்கும்பொழுது நான்கு காதலர்களை பற்றியும் அவர்களுக்கு நடந்த கொடூரத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்.அந்த நான்கு ஜோடி காதலர்கள் , பெற்றோராலோ , அல்லது குறிப்பிட்ட ஜாதியினாலோ பிரிக்கப்படுகிறார்கள், பிறகு கொலை செய்ய படுகிறார்கள் , அப்படி இந்த நான்கு ஜோடிகளின் காதலைப்பற்றியும் , அந்த காதலால் அவர்கள் அனுபவிக்கும் வேதனைப்பற்றிய திரைப்படமே இந்த வர்ணாஸ்ரமம்.

சுற்றி வளைக்கும் திரைக்கதை[2.5/5]

 💃💃💃

''டாடா'' விமர்சனம் [Tamil movie ''Dada '' Review]

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணாதாஸ்பாக்யராஜ்  எனப்பலர் நடிப்பில், ஜென் மார்ட்டின் இசையமைப்பில் வெளியான படம்.

மணி (கவின்), சிந்து (அபர்ணா தாஸ்) இருவரும் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே தாய்மை அடையும் சிந்து, கருவைக் கலைக்க மறுக்கிறார். இதனால் இருவரும் பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்கின்றனர். வறுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் இருவருக்கும் மனஸ்தாபம் முற்றுகிறது. குழந்தையைப் பெற்றதும் சிந்து பெற்றோருடன் செல்ல, குழந்தையைத் வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறான் மணி. பிறகு என்ன ஆகிறது? மணியும் சிந்துவும் இணைந்தார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.

பார்க்கக் கூடிய படம் [3/5]

தொகுப்பு:செ.மனுவேந்தன் /manuventhan



சிரிக்க....சில நிமிடம்

                                    சர்தார்ஜி ஜோக்ஸ்

 


😁விண்ணப்ப படிவம்

 ஒருமுறை பானர் சிங் வேலை ஒன்றுக்கு விண்ணப்ப படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

 எல்லாம் நிரப்பி முடிந்தவுடன், திடீரென்று படிவத்தினைக் கிழித்து எறிந்தார்.

 பக்கத்தில் நின்ற தேசிசிங்;  ''என்ன நடந்தது''

 பானர் சிங்:''நான் டெல்லி சென்று நிரப்பிக் கொள்கின்றேன்''

 தேசிசிங்: ''ஏன் அங்கு போய்''

 பானர் சிங்: ''Fill in the capital என்று போட்டிருந்ததை கவனியாம இவ்வளவு நேரத்தையும் வீணாக்கிவிட்டேனே!'' என்று தன்னைக் கடிந்துகொண்டார்.

 

😁வகுப்பில் மாணவன்  சர்தார்

ஆசிரியர்:(மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து வினாடிக்கும், ஒரு பெண்  ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்:(அவசரமாக எழுந்து நின்று) டீச்சர்! உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து,அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

😁இது கூடத் தெரியவில்லையா?

சர்தாஜி ஜக்கு சிங் முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை யாருடையது என்று அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற நண்பர் தேசி சிங்க் கிடம், அக் கண்ணாடியைக் கொடுத்து இது யாராய் இருக்கும் என்று கேட்டாராம்.

தேசி சிங்க் கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்துக்கொண்டு  ''அடச்சீ!.. இது நான் தானே. இதுகூடத் தெரியவில்லையா.. மொக்கு'' என்றாராம்.

 

😁போய்கிட்டு இருக்கியா?வந்துகிட்டு இருக்கியா?

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ் டைலாக திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார்.

இவருக்குத்தான் காணும் எல்லாவற்றையும் தானும் செய்யவேண்டும் என்ற ஆவல் வந்திடுமே.

எனவே தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக் கொண்டார்.

வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார், ஒய்! ஆபீஸுக்கு நீ போய்கிட்டு இருக்கியா? இல்லை ஆபிஸில் இருந்து வந்துகிட்டு இருக்கியா ..?

 

😁நேர்முகத்தேர்வில்...

சர்தாஜி ஒருவர் சாப்ட் வேர் கம்பெனி தேர்வில்

தேர்வாளர்:''உங்களுக்கு MS Office தெரியுமா?

சர்தாஜி:''நீங்க அட்ரெஸ் கொடுத்தீங்க எண்டா கண்டிப்பாகக் கண்டுபிடிச்சு விடுவேனுங்க''.

தேர்வாளர்:???

👨தொகுப்பு:செ.மனுவேந்தன்👨