- 01:பிறந்தும்,இறந்தும்
- குறள்வகை :குறட்டாழிசை
- பிறந்தும் பயனிலார் புவிக்கே பாரமாய்
- இறந்தும் இன்னலே இடுவார்
- விளக்கம்: யாருக்குமே பயனில்லாதவர்கள் , புவியில் இன்னல்கள் புரிந்து புவிக்குப் பாரமாக வாழ்ந்தவர்கள் செய்த அநீதியின் விளைவுகள் , அவர்கள் இறந்த பின்னரும் அவர்களின் சுற்றத்திற்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருக்கும்.
- 02:மனிதனா? விலங்கா?
- குறள்வகை: வெண்செந்துறை
- மனசுடையவனே மனிதன், மற்றோரெல்லாம்
- வனவிலங்குகள் வகைப்படும்.
- விளக்கம்: "மனசுடையவன்" என்றால் ஒருவர் அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் கொண்ட மனிதனாக மதிக்கப்படுகிறான். அம் மனம் அற்றவர்கள் விலங்குகள் வையினை சேர்ந்தவர்கள் என்பதேயாகும்.
- 03:இன்னொருவனைத் தேடல்
- குறள்வகை :வெண்செந்துறை
- இல்லறத்தானை நீங்கி இன்னொருவனைநாடல்
- இல்லாத இழிவினை இடும்
- விளக்கம்:ஒரு இல்லறமாக வாழ்பவரை விடுத்து இன்னொருவரை நாடுதல் அது ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன அவர்களுக்கு அதனால் எழும் அபகீர்த்தியும் ,மன உளைச்சலும் பெரும் இழிவினைக் கொடுக்கும்.
அரக்கரிலும்.....
கொடியவன்
உள்ளத்தில் நல்ல உள்ளம்..
பசுத்தோல் போர்த்த..
கண்ணும்,காதும் !
குறையிலா வாழ்க்கை
பண்பிலா அழகு...
வீழ்ந்தவனை மாடேறி .....
இறந்தாலும் வாழ்...
ஆழ்துயர் அறி...
துயர் கால...
தாய்மொழி மற ...
குடியினால்...
கடன்பட்டார்....
அன்பிலார்.....
- வரிகள்: செல்லத்துரை, மனுவேந்தன் தொழிலாளர் தினமாகிய -மே1
:திருக்குறள் thirukkural ,வெண்செந்துறை , குறட் டாழிசை ,விகற்பா ,கலித்தாழிசை ,t thaththuvam
மிகவும் நன்று
ReplyDelete