பாம்பு கடித்தால்…


பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன?

 


பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.

 

இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. இறப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் புராண/சினிமா கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை எனப் பலவாம்.

 

பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளை கடவுளாக வழிபடுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகிறார்கள்.

 

பாம்புகள் பழிவாங்குமா?

முக்கியமாக ஒருத்தர் ஒரு நாகப்பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அந்த பாம்பின் துணை அடித்து கொன்னவர தேடி வந்து பழிவாங்கும்னு பழங்குடி சமூகங்கள் நம்புவதாகவும், ஆனால் இது மோசமான கட்டுக்கதையென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிஞ்சுதல்

இந்தியாவின் சில இடங்கள்ள பாம்பு கடித்தால் மருத்துவர்களை பார்க்காமல் மந்திரவாதிகளை பார்ப்பதுண்டு.

அது மட்டும் அல்லாமல் முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது மற்றும் நிறுவப்படாத மூலிகைகளை பயன்படுத்தும் பழக்கமும் பரவலாக உண்டு.

 

பாம்புக் கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்குறமாதிரி பல திரைப்படக் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மாதிரி நிச்சயம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பாம்புக் கடித்த உடனே அருகில் இருக்கும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும்.

 

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது.

 

கடிபட்டவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்கு போக கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்தில் பாதுகாப்பாக போக வேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும்

காயங்களை கழுவுதல், கீறி விடுதல், துணியை வத்து இறுக்கமாக கட்டுதல், ஏதேனும் மூலிகைகள பயன்படுத்துதல், என்று செய்வதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.

 

குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியா தெரிவிக்கின்றனர்.

நன்றி:பி பி சி தமிழ்

0 comments:

Post a Comment