சிரிக்க....சில நிமிடம்

01.

செக்கிங் மாஸ்டர்: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

செக்கிங் மாஸ்டர்: இது பழைய டிக்கெட்

பயணி: இந்த ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

செக்கிங் மாஸ்டர்: ……… ????

 

02.

ஒருவர் : நம்ம மேனேஜர் அரை மணி நேரத்துக்கு முன்பு எல்லோர்கிட்டயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தாரே, இப்ப ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழறார்?

மற்றவர் : 10 நிமிஷத்துக்கு முன்பு அவரோட மனைவி போன்ல பேசினார். அவ்ளோதான், ஆள் வெறி பிடிச்சவர் மாதிரி ஆயிட்டார்.

 

03.

டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

 

04.

ஒருவர்: ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னைபோன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சுகிட்டு இருக்கான்.

மற்றவர்: அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?

ஒருவர்: நீங்கவேற.....பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.

 

05.

காதலன்: நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலி: அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலன்: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...

 காதலி: !!!!

 

06.

மருமகள்: ஐயா! எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு?

போலிஸ்: யாரிடம் இருந்து?

மருமகள்:என் மாமியாரிடமிருந்து! உடனே கிளம்பி என் வீட்டுக்கு வ‌ராங்களாம்!

 

07.

மனைவி : ஏங்க மருந்து பாட்டிலைத் தடவிக்கிட்டு இருக்கீங்க..?

கணவன் : டாக்டர்தான் சொன்னார்.. கைவலிச்சா இதைத் தடவுங்கன்னு...!

 

08.

அப்பா : உன்னை பார்த்து எப்போதும் வழிவான்னு சொன்னியே.. ஒரு பையன்.. அவன் இனி வரமாட்டான்..

மகள் : அய்யோ.. அவனை என்னப்பா பண்ணினீங்க ?

அப்பா : பதறாதே.. 1000 ரூபாய் கடன் கேட்டான்.. கொடுத்தேன்..!

 

09.

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!

 

10.

நீதிபதி : (குற்றவாளியிடம்) இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி : என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

 

11.

அப்பா: என்னடா… மார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க் வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா… எதையுமே நிறைய வாங்க முடியல…

 

12.

நோயாளி : (டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர் : கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க.

 

13.

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை

நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

 

14.

டாக்ட‌ர் : அந்த‌ நோயாளி ர‌ஜினி ரசிக‌ர்னு நினைக்கிறேன்?

ந‌ர்ஸ் : எப்ப‌டி சொல்லுரீங்க‌ டாக்ட‌ர்.

டாக்ட‌ர் : ஊசி போட்டு முடிச்ச‌தும் "என் வ‌லி த‌னி வ‌லின்னு சொல்றாறே.

 

15.

குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா?

 

16.

குடிகார‌ர் 1 : குடி குடியை கெடுக்கும்கிற‌து ச‌ரியாப் போச்சு?

குடிகாரர் 2 : எதனால‌ப்பா?

குடிகார‌ர் 2 : க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னேயே எம் பொண்டாட்டி என்ன‌ குடிக்க‌ கூடாதுன்னு சொல்லிட்டா.

 

17.

ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!

 

18.

காதலன் : உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா என்ன செய்யறான்னு சொல்றியா.. ?

காதலியின் தம்பி : இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு.. எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!

 

19.

ந‌ண்ப‌ர் 1: நேற்று என்னோட‌‌ க‌ச்சேரிக்கு நீங்க‌ வ‌ருவீங்க‌ன்னு ரொம்ப‌ எதிர்பார்த்தேன் ?

ந‌ண்ப‌ர் 2: வ‌ர‌னும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள‌ வேற‌ஒரு கஸ்டம் வந்திருச்சு.

 

20.

நண்பர் 1 : போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?

நண்பர் 2 : அதுக்கென்ன .. .. ?

நண்பர் 1 : குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..


தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment