உணவூட்டி வளர்க்கப்படும் கொட்டும் தேள்கள்

 உங்களுக்கு தெரியுமா? (அறிவியல்) தேளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சு, நோயெதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வலி நிவாரணிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது.

அங்கு தற்போது 20,000க்கும் அதிகமான தேள்கள் உள்ளன.அவற்றுக்குத் தேவையான உணவு அளிக்கப்பட்டு  முறையாக பராமரித்து, இனப்பெருக்கம் செய்யவைக்கப்படுகிறது.

  அதன் மூலம் அவற்றிலிருந்து  கிடைக்கும் நஞ்சை உறைய வைத்து, அதைத் தூளாக மாற்றி ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு தேளில் 2 மில்லிகிராம் நஞ்சு உள்ளது. 300, 400 தேள்களில் இருந்து  ஒரு கிராம் நஞ்சு பெறமுடியும்.ஒரு லிட்டர் தேள் நஞ்சின் விலை 10 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையாகிறது.

 

மத்திய, தென் அமெரிக்க பகுதியைச் சேர்ந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து எடுக்கப்படும் மார்கடாக்சின் என்ற பொருள் மூலம், ரத்த நாளங்களில் புதிய ரத்த செல்கள் உருவாவதுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின்போதும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

குறிப்பாக, விஷமுறிவு மருந்துகள் தயாரிப்பிலும் விஷமுறிவு சிகிச்சை முறையின் புதிய முன்னெடுப்புகளிலும் தேள் விஷம் பெருமளவு பயன்படும் என்றும் 2020 ஆண்டு தேசிய மருந்துகள் நூலகத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நன்றி:பி பி சி தமிழ்

0 comments:

Post a Comment