குறும் கவிதைகள்

"காலம் மாறினால் காதல் மாறுமா!!"

 

"காலம் மாறினால் காதல் மாறுமா?

கோலம் கலைந்தால் அன்பு போகுமா?

ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா?

நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?"

 

"கானல் நீராய் காதல் இருக்காது

காமுறல் உடன் வாழ்வும் இருக்கும் 

காமம் மட்டும் மனதில் ஏற்றிய 

காதலர் மட்டும் பொய் ஆகலாம்?"

 ⇹⇹⇹⇹⇹

''சேறும் சோறும்" 

 


"சேறு நிரம்பிய வயல் வெளியில்

ஏறு ஓட்டி உழுத தொழிலாளியே!

 

வீறுநடை போட்டு களை எடுத்து   

அறுத்த கதிர்களை கையில் ஏந்தியவனே!

 

அறுவடை செய்து நெல் சேகரித்து

உறுதியாக குற்றி அரிசி ஆக்கியவனே!

 

வெறும் வெளியையும் செழிப்பு ஆக்கி

சோறு போடும் சேற்றுத் தாமரையே!

 

சேறும் சோறும் கலந்து வாழ்ந்து

வறுமை நீக்கும் தெய்வமே வாழ்க!!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. சிறப்பு வரிகள் வாழ்த்துகள்

    ReplyDelete