கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரிய காரணம்?




நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.

ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.

ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதனை உணர்ந்து வாழ்வதே வாழ்க்கையென புரிந்துகொண்டவர்கள் கூறுவர்.
👰💔👦👰💔👦💔👰💔👦💔👰💔👦💔👰💔👦💔👰

சிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது


ஆசிரியர்:டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"
மாணவன்:நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால நீங்க அடிமுட்டாள் சார்.
………………………………………………………………………
 மாணவன் வடிவேலு : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல.வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் விவேக் : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் வடிவேலு கொடுத்துட்டு   வந்தேன்...
மாணவன் வடிவேலு : அடப்பாவி விவேக்கா, என்ன நீ  ஒரு விவேகமில்லாதவனா இருக்கே. ..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"
………………………………………………………………………………
மனைவி:ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ...உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது?
…………………………………………………………………………
மனைவி: "நான் சிம்கார்டுன்னா, நீங்க செல்போன் மாதிரிங்க"
கணவன்:"அப்படீன்னா உன்னோட தங்கச்சி ரீசார்ஜ் கார்டா?"
………………………………………………………………………
வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"
பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"
வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
……………………………………………………………………………
நீதிபதி மனைவியைப் பார்த்து:-  உன் கணவனை ஏன் கதிரையால் அடித்தாய்?
குற்றவாளிக் கூட்டில் நிற்கும் மனைவி:- ஐயா! மேசையைத்தூக்க என்னால் முடியவில்லை.
…………………………………………………………………………………………………………………………………………………….
போலிஸ்:ஒரே கடையிலை பலமுறை திருடியிருக்கிறியே!என்ன துணிச்சல் உனக்கு!
திருடன்:ஐயா!அந்தக் கடையில "நன்றி மீண்டும் வருக"என்று எழுதியிருந்தது ஐயா!
………………………………………………………………………………………………………………………..
மனைவி: ஏங்க!..இப்படியே நான் சமைச்சு போட்டா எனக்கு என்ன கிடைக்கும்?
கணவன்:.. என்னுடைய லைவ்  இன்சுரன்ஸ் பணம் வலு கெதியாய் கிடைக்கும்.
……………………………………………………………………………………………………………………….
நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?’’
“எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க
…………………………………………………………………………………………………………………..
ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப்போறிங்க?
ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார்.அதான்!
..............................................................................................................................
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பகுதி/13



சித்தர்கள் கூறிய பக்தி, ஞானம், முக்தி, தெளிவு

ஞானம்/C/தொடர்ச்சி
                  இந்த பூரண ஞானம் பெற்றவர்கள் உலகில் இயற்கையை ஆராய்ந்து, நமக்கு பல நல்லகருத்துகளை, ஞான மொழியாக கூறியுள்ளார்கள். இந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பே, உலகில் பிறக்கும் உயிர்கள், உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் இயற்கையினால் படைக்கப்பட்டு, அதன் பிறகு தான் மனிதரும், விலங்கினமும், தாவரமும் தோன்றியது. உலக உயிர்கள் சுவாசிக்க காற்று, பசிக்கு தானியம், தாகத்திற்கு தண்ணீர், வெளிச்சம், நோய் தீர்க்கும் மூலிகைகள், தங்கம் வெள்ளி, வைரம், பாறை, மலை, என இன்னும் எவ்வளவோ படைக்கப்பட்டுவிட்டன. இவைகளை அடைந்து அனுபவிக்க உயிர்களுக்கு கை, கால், மூளை, அறிவு என சாரீரம் அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன் சரியான அறிவு, முயற்சி கொண்டு, இவைகளை எவ்வளவு வேண்டும் என்றாலும் அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம் இதற்கு எந்த தடையும் கிடையாது. இவைகள் ஒருவருக்காக படைக்கப்படவில்லை என்பதை உணர்தல் அவசியம். இதை விடுத்து கடவுளை வணங்கினால் எல்லாம் கிடைத்து விடும் என்று வாழ்வது அறியாமை, ஞானமற்ற மனித நிலையாகும். பூமி தோன்றிய போது இயற்கையால் படைக்கப்பட்ட பொருட்களை தவிர புதிதாக ஒரு பொருளை எந்த ஒரு சக்தியாலும் பூமியில் உருவாக்கமுடியாது என்பதை அறிதலே மூல ஞானம். நிர்ணயிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாது என்பதை அறிதலே ஞானம்.
                    உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், வாழ்வும் எப்படி அமைந்துள்ளது. எதனை அடிப்படையாக கொண்டு பிறப்பு உண்டாகின்றது என்பதை என் குரு கூறுவதை கேளுங்கள்.

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்

 அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
 எவரெவர்க் குதவினார் எவரெவர்க் குதவிலர்
 தகையவர் நினைவது தமையுணர் வதுவே.           என்று கூறுகின்றார்.         


                    இந்த பூமியில் ஒவ்வொரு மனிதனும், முன்னோர்களால் வம்சத்தில் உண்டான பாவ, சாப, புண்ணியங்களை அனுபவித்து தீர்க்க, ஊழ்வினையை கழிக்க, இந்த பூமியில் பிறக்கின்றனர். அந்த ஊழ்வினைகளின் கணக்கின்படிதான், இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, பிரச்சனை, தடை, கஷ்டம், நோய் என, பலவிதமான அனுபவ நிகழ்வுகள் கொண்ட வாழ்க்கை அமைகின்றது. தன் ஊழ்வினையின்படியே பலன்களை வாழ்கையில் அனுபவித்து வருகின்றார்கள்.
                   எனவே இந்த பூமியில் பிறந்த ஒரு மனிதனோ, அல்லது தெய்வமோ, பூசை, ஹோமம், யாகம், மந்திரம், மணி வழிபாடு, விரதம், தானம், தர்மம், என எந்த ஒரு கிரியை செயல்களை செய்தாலும், இந்த ஊழ்வினை படி நாம் அனுபவிக்க வேண்டிய "பிராப்த விதியை" தடுத்து விடமுடியாது. பரிகாரம் என்ற பெயரில் செய்யும் சடங்கு, சம்பிரதாய, சாஸ்திர செயல்களால் ஊழ்வினை விதியை மாற்ற முடியாது. மற்ற எவரும் உதவி செய்து நம் ஊழ்வினையை மாற்ற முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஞானத்தினால் தன்னையறிந்து, ஞான நிலையுடன் வாழ்ந்தால் ஊழ்வினையை அறிந்து தடுத்துக் கொள்ள முடியும் "தன்னையறிதலே ஞானம்". இதுவே விதியை தடுக்கும் சக்தி.
                  ஒவ்வொரு மனிதனும் பிறப்பதற்கு முன்பே இந்த பிறவியில் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஊழ்வினையின் படி, விதி பயன் நிர்ணயித்த பின் தான் பிறக்கின்றான். இதனை "பிராப்த விதி" என்பார்கள். இந்த நிர்ணயித்த விதியை, தன்னை யறிந்தவன் தடுத்து நல் வாழ்வை அடைய முடியும். தன் விதியை தடுத்து கொள்ளும் வழியை அறிதலே ஞானம் என்கிறார்.

  தத்துவ குப்பையை தள்ளுங்கடி வேத

  சாத்திர பொத்தலை மூடுங்கடி
  முக்தி தருஞான வத்துவை வாவென்று
  மூட்டி கும்மியடி யுங்கடி.


🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖🦖

இப்படியும் சில பெண்கள்

படம் : .
இசை : G.ராமநாதன்
குரல் : T.M.சௌந்தர்ராஜன்
வரிகள் : உடுமலை நாராயணகவி

தொகையறா:
கண்டால் கொல்லும் விஷமாம்
கட்டழகு மங்கையரை
நாம் கொண்டாடி திரியாமல்
குருடாவதெக்காலம்
பாடல் :
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே

வீண் பெருமை காட்டி சிறுமை காட்டும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே

மங்களம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
கேட்டு வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே ................
தொகையறா :
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மாயமினுக்கும் பெண்டுகளை பார்த்திடானாம்
பாடல்:
கண்டவரோடு கண்ணால் பேசி
காமுறும் மாது
இந்த பூமியின் மீது
கொண்ட கணவன் தன்னை கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு ...
( பெண்களை நம்பாதே ........)
அனுப்பியவர்: Kandiah Thillaivinayagalingam

குடித்தாலும் ...short film



நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? / பகுதி: 2A

[சீரழியும் தமிழ் சமுதாயம்]
இன்று சமுதாயத்தை பற்றி பேசும் எவரும், வீழ்ச்சி, சரிவு, சீரழிவு என்ற சொற்களை பெரும்பாலும் பாவிப்பதை காண்கிறோம். வீழ்ச்சியடைதல் என்றால் தாம் இன்று உள்ள நிலையில் இருந்து சரிதல் அல்லது கீழ்நோக்கி போவதாகும். சீரழித்தல் என்றால் இன்று இருக்கும் ஒழுங்கில் இருந்து குலைதல் அல்லது நிலைகெடுதல் ஆகும். உதாரணமாக. நிலைகெடுதல் என்ற அதே கருத்தில், திருவள்ளுவர் தனது குறள் 934 இல் "சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில்" என்று சொல்லுவதை காண்க. அதாவது  பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையில் ஆழ்த்தி ஒருவரை கெடுக்கும் தீமையான சீரழிக்கும் செயல் சூதாட்டம் என்று சொல்லுகிறார்.

எனவே சமுதாய சீரழிவு என்றால் எதை குறிக்கிறது என்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது. அதாவது நாம் பரம்பரை பரம்பரையாக கட்டி வளர்த்த அந்த சமுதாயம் என்ற உன்னத அமைப்பு ஆட்டம் காண்பதை சுட்டிக் காட்டுகிறது எனலாம். உதாரணமாக விண்ணைத் தொடும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் குற்றங்கள், விவாகரத்துக்கள், பதின்ம பருவ பாலியல்கள், அதனால் ஏற்படும் பிறப்புக்கள், ஒற்றை பெற்றோர் [single parent], போதைப்பொருள் துஷ்பிரயோகங்கள், போர், தனிப்பட்ட நன்னடத்தையில் ஏற்படும் சரிவு மற்றும் அதி தீவீர மத பக்தி [skyrocketing rates of crime, divorce, teenage sex, teenage births, single parent and drug abuse; war; and a general decline in personal morality and religiosity.] போன்றவையை கூறலாம். அத்துடன் இனவாதம் மற்றும் இன சமத்துவமின்மை [Racism and racial inequality], இனப் படுகொலைகள் மற்றும் ஏனைய சகல வன்முறைகளும் [genocides and other mayhem], நாம் அடைந்த எல்லா முன்னேற்றத்தையும் கவிழ்த்து விடும். எனவே சமூக சரிவு ஒரு சிக்கலான மனித சமூகத்தின் வீழ்ச்சி என நாம் கருதலாம்.

சுமேரியா [மெசொப்பொத்தேமியா], இந்திய, எகிப்திய, ரோம, மாயா போன்ற அதியுயர் கலாச்சார வடிவங்களும், அங்கு காணப்பட்ட வழி முறைகளும், சரிந்து சின்னா பின்னமாகத் தடைகள் அற்றுப் போனது போல், தற்போதைய நவீன உலக நாகரீகமும், சகல வழிமுறைகளும் சீரழிவதற்கான சூழல் காணப்படுவதாக இன்று பலர் உணர்கிறார்கள். இதனால் இன்று மக்கள் சில நேரம் 'உடைந்த சமுதாயத்தை' ['broken society'] பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சமூக மாற்றம் மற்றும் கலாச்சார மாற்றத்தின் [social change and cultural change] ஒரு விளைவாக இதை நாம் காணலாம். எங்களுக்கு சமூக மாற்றம் இன்று பல நடைமுறைகளில், செயல்களில் இருந்து நன்றாக தெரிகிறது, சமுதாயம் என்பது ஒரு வார்த்தை மட்டும் தான். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் ஏற்படுத்திய இணைப்பின் மூலமே அந்த கட்டமைப்பு உருவாகிறது. எனவே தனி மனித மாற்றம் இல்லாமல் சமுதாயம் / சமூகம் மாற முடியாது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு முக்கியமான தொழில் நுட்ப முன்னேற்றமும் இறுதியாக சமூக உறவுகளில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடுகிறது. தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தளவில் இறுக்கமான குடும்ப பிணைப்பினை கொண்டமைந்த உறவு பிணைப்பு நிலையில் அமைந்த ஒன்றாகவே, சமுதாய அமைப்பின் மிக முக்கிய சிறு கூறாக குடும்ப அமைப்பு பேணப்பட்டு வந்ததுடன் இதுவே பொதுவாக அடிப்படை சமூக அலகாக [fundamental social unit] எல்லா சமூதாதயங்களிலும் இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக எந்தவித மாற்றிடும் செய்யாமல் அது இன்று சிதைக்கப் படுகிறது. நாம் இன்று நமது நாகரிகத்திற்கு அடிப்படையாகக் கொண்ட மதிப்புகள் / விழுமியங்கள் பலவற்றை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. நாம் எதை நம்புகிறோம் என்றே எமக்கு இப்ப தெரியாது, நாம் குழம்பி இருக்கிறோம், அந்த குழப்பத்துடனேயே எம் பிள்ளைகளையும் இன்று வளர்க்கிறோம். சமூக நடத்தை விதிகளிலிருந்து விலகல், வன்முறை மற்றும் சமூக விரோத நடத்தை முதலியவற்றை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்கள் ஒளிபரப்பி மகிழ்வாக கொண்டாடும் ஒரு விசித்திரமான கலாச்சாரத்தை இன்று நாம் உருவாக்கியுள்ளோம். நாகரிகம் நிச்சயமாக அழிந்து போகும் என்ற இன்றைய யோசனை ஒன்றும் புதியதல்ல. காலத்தின் தொடக்கத்திலிருந்தே, முடிவும் நெருங்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு நாகரிகமும் எதோ ஒரு கட்டத்தில் வீழ்ச்சி அடையும். அதாவது நாகரிகம் மற்றும் சமூகங்கள் வந்து போகும், அவை என்றும் நிரந்தரம் அல்ல. எனவே எமது இன்றைய கேள்வி எப்பொழுது, ஏன் என்பதே ஆகும். நான் முன்பு ஒருமுறை எழுதிய, கீழே தரப்பட்ட  எனது பாடல் ஒன்று இப்ப என் நினைவுக் வருகிறது.

"பொத்தானை அழுத்தி,மறு கரையில் காதலிப்போம்
ஜன்னளை திறந்து,புதியவானம் காண்போம் கண்ணே?
உலகம் சுருங்குதோ,எண்ணம் அப்படி தோன்றுதோ
தொழில் நுட்பம்,அப்படி மாற்றுதோ கண்ணே?"

"நாளாந்த வாழ்வில்,பல பல மாற்றங்கள்
ஒன்றாய் அனுபவிப்போம்,ஆனால் எந்த இழப்பில் கண்ணே?
ஆண்டாண்டு மாசுபடுத்தி,சூழலை கெடுத்து விட்டோம்
நெருக்கடி வந்தபின்பே,மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?"

"மதிநுட்ப சிந்தனையாளனா,நாம் மரத்துப்போனவனா
இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே?
கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா அல்லது
தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதோ கண்ணே?"

"இன்று என்ன செய்கிறோமோ என்ன பேசுகிறமோ
நாளை விட்டுசெல்ல வேண்டியவற்றை பாதிக்கும் கண்ணே?
அடுத்த தலைமுறைக்கு எங்கள் காதல் வாரிசுக்கு

விட்டுப் போவது பெரும் இன்பமா துன்பமா கண்ணே?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞