தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)


superstitious beliefs of  tamils:
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.]
கர்ப்பிணி(புள்ளதாய்ச்சி)
"அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
மு நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் ,பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு
விசும்பி இவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே."
[குறுந்தொகை287] 

இந்த பாடல் வழியே நாம் அறிவது கருவுற்ற மகளிரை நீர் கொண்ட மேகத்துடன் ஒப்பிடுவதையும் கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்பதையும் மேலும் மகளிர் கருவுறும் காலம் 12 மாதம்? என இப்பாடல் சுட்டும் கருத்து புதுமையாகவும் உள்ளது.[மு நால் திங்கள்-three times four,months,பசும் புளி வேட்கைக் -desire green tamarind ] 

கருவுற்ற காலத்தில் முதல் ஒன்பது மாதமும் இந்த குழந்தை எப்படிபட்டது,அதாவது இது கம்பீரமாக இருக்குமா?,பெருந்தன்மையுள்ளதாக இருக்குமா?செல்வச்செழிப்பாக இருக்குமா?,அழகாக இருக்குமா?,பலசாலியாக இருக்குமா?பொறுமையாளியாக இருக்குமா? இப்படியெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பார்.இவைகள் சில முட நம்பிக்கைகளை நம்ப வழிவகுக்கிறது.

சூரிய,சந்திர கிரகணத்தின் பாதிப்புக் கருதி,கருவுற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படாதிருக்க வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.அந்நேரங்களில் காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல்,பிற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்றும்,கிரகணம் முடியும் வரை எவ்வித உணவும் உண்ணுதல் கூடாது என்றும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் நாய், பூனை போன்ற விலங்குகளைத் தாண்டிச் செல்லுதல், ஊசி,நூல் இவைகளைக் கொண்டு துணிகளைத் தைத்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் விரும்பிக்கேட்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் காணப்படுகிறது.மேலும் கர்ப்பிணியில்
தேரை(toad)பாய்ந்தால் கால் சொத்தியாய் தேய்ஞ்சு பிறக்கும் எனவும் நம்புகிறார்கள்.சில மூட நம்பிக்கைகள் அவர்களின் ஒரு பாதுகாப்பிற்காக அந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது

அப்படியானவைகளில் ஒன்று கர்ப்பிணி பெண்,இரவில் தனிய அலைந்து திரியக்கூடாது அல்லது வெறுமையான வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதாகும்.அது மட்டும் அல்ல சன நெரிச்சல் கூடிய இடங்கள் அல்லது ஆலயம் போன்றவற்றிற்கும்குறிப்பாக இருட்டில்,பிள்ளை பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் தருவாயில் போவது தடை செயப்படுகிறது.இதற்கு கூறும் காரணம் கெட்ட ஆவிகள் பரவித் தாக்கும் அல்லது அவளுக்கு துயரளிக்கும் என்பது.ஆனால் உண்மையில் அப்படி இல்லை.அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப,தனிமையில் அல்லது இருட்டில் போகும் போது,ஒரு அவசரத்திற்கு ஆள் உதவி தேவை என்பதால்.அது போலவே அவளின் கணவன் அந்த நேரத்தில் வீடு கட்டக்கூடாது என்பார்கள்.அப்படி கட்டிக்கொண்டு இருந்தால் அவனின் முழு கவனமும் கர்ப்பிணியான அவனது மனைவியின் மேல் இருக்காது என்பதே.அது மட்டும் அல்ல ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் போது,கணவனின் இருப்பு,ஒரு  தார்மீக கடமையும் கூட.இது அவளுக்கு ஒரு தெம்பு,ஊக்கம் கொடுக்கிறது.இதனால் தான் இந்த தடைகள்,ஆவிகள்,பேய்கள் எல்லாம்.இதனால் தான் கணவனின் தேவையற்ற நீண்ட பயணங்கள் அல்லது ஏதாவது செய்பணி ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது அல்லது பின்போடப்படுகிறது

மேலும் கர்ப்பிணி பெண்ணை படம் பிடிக்கக் கூடாது என்றும்,அவள் கேட்கும் உணவு பொருட்களை,பயன்படு பொருள்களை[edibles and  consumer articles] வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பார்கள்.அழகான பெண்ணொருவர் குழந்தை உண்டானால் கர்ப்ப காலம் முன்னோக்கி நகர,அவரது அழகு பின்னோக்கி நகரும்.வனப்பும், பொலிவும் குறையும்.இயற்கையான தன்மையிது.கர்ப்ப காலம் கடந்து குழந்தைப்பேறு முடியும் வரை அழகு குறித்து மனைவியிடம் வெறுப்பு காட்டக்கூடாது.அன்பு காட்டிப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளணும்.அதனால் தான் இப்படியான கட்டளைகள் போலும் இதை உறுதிபடுத்துவதுபோல விவேகச் சிந்தாமணி பாடல் 16 ‘‘கெற்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்..கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்..நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்... .." இப்படி அமைந்துள்ளதோ

கர்ப்பிணி பெண் வாழும் வீட்டிலோ அல்லது அதை சுற்றியோ உள்ள குளவி அல்லது குருவி[பறவை] களின் கூடுகளை அகற்றவோ அல்லது குழப்பவோ கூடாது என்றும் கூறுவார்கள்.     

என்னதான் நாம் மேலே கூறியிருந்தாலும்,இன்னும் பெண்ணை சிலர் கேவலமாக அல்லது ஒரு குறைபாடாகத்தான் கருதுகிறார்கள்.ஏன் பேயை,பேய் மகன் என்று கூட கூறமாட்டார்கள்.அதை பேய் மகள் என்றே பாடல்களில் அழைக்கிறார்கள்.அது மட்டும் அல்ல பெண்களை குறிக்கும் சொற்களை பாருங்கள்.அதாவது பேதை,மடந்தை,மடவார் ...ஆகியவை  முட்டாள்தனமான ஒரு ஆளை குறிக்கிறது என்பது தெரிய வரும்.அதே நேரத்தில்  ஆண் என்ற சொல்லை பாருங்கள்.இது ஆண்மை என்ற சொல்லுடன் தொடர்புடையது.மேலும் கணவன் என்பது "கண் + அவன்" என பிரித்து உணரலாம்? இது மட்டுமா?"ஆசைக்கு ஒரு பெண் ..ஆஸ்திக்கு ஒரு பிள்ளை .","கோணல் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை"  என்று வேறு சொல்லி விட்டு போயுள்ளார்கள்."பெண் புத்தி பின்  புத்தி","தையல் சொல் கேளேல்/ஆத்திசூடி63"...இப்படி அடிக்கிக்கொண்டு போகலாம்.ஆகவே அதை விட்டுவிட்டு இறுதியாக விவேக சிந்தாமணிபாடல் 30 யை கிழே தருகிறேன்.பெண்ணின் நிலை சிலர் மத்தியில் என்ன பாடு படுகிறது என்பது புரியும்.

"படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
………………
நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை 
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே"  

உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம்,பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம்…………….. என்று சொல்லிக்கொண்டே போய்  “நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமேஎன்று முடிகிறது கவிதை.  

பகுதி/Part 12 "மற்றவைகளும் முடிவுரையும் "/"ALL OTHERS & conclusion:"அடுத்த வாரம் தொடரும்.   

4 comments:

 1. ''பெண்ணை சிலர் கேவலமாக அல்லது ஒரு குறைபாடாகத்தான் கருதுகிறார்கள்.''
  -----இப்படியான கருத்துக்களை பரப்பி வருபவர்களும் பெண்களே

  ReplyDelete
 2. பெண்களை போற்றி எழுதுபவர்கள் ஆண்கள் மட்டுமே.ஆனால் ஆண்களை அவர்கள் அப்படி எழுதியது கிடையாது

  ReplyDelete
 3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Thursday, January 09, 2014

  ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூளையில் அடிப்படையில் வேறுபாடு உண்டு என்பதை இப்ப விஞ்ஞானம் நிறுவி உள்ளது பிள்ளை கவனிப்பு வீட்டு வேளையில் பெண்கள் சிறந்தவராக இருப்பதற்கு அதுவே காரணமாம்.அதுபோல ஆண்கள் மேதைகளாக வருவதற்கும் வல்லுனர்களாக வருவதற்கும் சந்தர்ப்பம் கூட எனவும் மேலும் கூறுகிறது.இப்ப அந்த கண்டுபிடிப்பை அப்படியே ஆங்கிலத்தில் கிழே சுருக்கமாக தருகிறேன்.இதனால் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கூறினார்களோ என இப்ப எனக்கு எண்ணத் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படியோ?

  The truth about men and women’s brains .
  ................................................................
  Men! Useless at discerning a woman’s true feelings, deaf as a post when a baby is crying and utterly incapable of performing more than one task at a time.

  Women! Forever getting overemotional, completely hopeless at map-reading and liable to go into meltdown at the prospect of parallel parking.

  Men and women moan continually about the supposed shortcomings of the opposite sex — but now brain scientists have found a real reason for the stereotypical differences in male and female behaviour.

  Women’s and men’s brains are wired in fundamentally different ways .

  The differences between the genders were so profound that men and women might almost be separate species.

  In essence, what this means is that men are more logical and better at coordination and spatial awareness. Women are more intuitive, have greater “emotional intelligence” and better memories for words and faces.

  The research was published in the journal Proceedings of the National Academy of Sciences. Ragini Verma, of the University of Pennsylvania, who led the study, concludes that male brains are geared “to link perception with doing” — so men would be better at, for example, learning a new sport.

  Female brains, meanwhile, are configured to handle matters of heart and mind and to study others’ behaviour, then interpret it using intuition and analysis.

  The male brain might be good at deciphering a car-repair manual but it’s not much good at decoding social context or emotions — as any new mum will know as she rushes to comfort her crying baby and almost trips over her partner still glued to the football on TV.

  More Examples are easy to find.

  Hospitals are almost "run" by nurses. Specialist male doctors ask the generalist nurses what is happening with their patients.
  Secretaries are exceedingly important at keeping most organizations operating smoothly, thereby making the CEO and specialists successful.
  Most men do not seem very adept at being house-husbands, which involves keeping track of many things happening at the same time.

  "Feminine Intuition" is Real

  (a) Men tend to be very narrow focused so they miss other details around them. What they pay attention to is usually what they are good at.
  A man who likes cars will walk down the street thinking about the cars parked along the road -- their make, model, history, horsepower, body rust, paint job, dollar value, etc.
  (b) Women with their multiple-focus brains will notice and think about many things.
  *The old man on the steps looks lonely and hungry, and may have lost his job, and his shoes are untied..
  *The traffic lights all are painted a dull shade of yellow that does not match the yellow of the light
  *The person in front is carrying books so may be going to the library that is a block away
  *The woman in the car is sitting away from the driver and frowning so they may have had an argument.

  ReplyDelete
  Replies
  1. இதைத் தமிழில் ஏற்கனவே தீபத்தில் வெளியிட்டுள்ளோம்.

   Delete