நட்பு [-காலையடி,அகிலன்-]


நம்பிக்கை தருவது நட்பு
நட்பு உண்டெனின்
 வீழ்ந்து போவதில்லையே!
கடின சூழ்நிலை என்றாலும்
 தன் நலம் கருதாது
தன் நம்பிக்கை
 பலம் சேர்த்துடுவது நட்பே!
கவலைகள் நோகடிக்கும்போது 
கண்ணீரை துடைத்துவிட்டு 
உறுதி தருவது நட்பு !
உடலின் ஆரோக்கியத்துக்கு 
உடல் பயிற்சி -அது போலவே 
தன் நிலை மறந்து 
சிரித்து மகிழ நட்பு 
 நல்ல நட்பு அமைந்திடின்
 உணர்வுகளை சொல்ல
 வார்த்தை தேவையில்ல
நட்பில் இருக்கும் உறவு 
தாழ்வு மனப்பாங்கு இன்றி 
ஒளிவு மறைவின்றி 
பேசிவிடும் தவறுகளை கண்டு 
 கோவம் வந்தாலும் மறையும்
 மீண்டும் ஒன்று பட்டு 
உலகத்தை அசை போட்டு 
கருத்துக்களை வளர்த்து 
 இருக்கும் நட்பு.

-காலையடி,அகிலன்-

0 comments:

Post a Comment