சிவகார்த்திகேயனுக்கு அம்மாவா சிம்ரன்?
ஒரு காலத்தில் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்த சிம்ரன், திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு அக்கா, அண்ணி மாதிரியான கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் கூட கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் – பொன்ராம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தில், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம் சிம்ரன்.


“சிவகார்த்திகேயன் – சமந்தா என்ற இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடிப்பதில் மகிழ்ச்சி. பொன்ராமின் முந்தைய படங்களைப் போலவே காமெடியுடன் இந்தப் படம் உருவாகிறது. தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. படம் முழுவதும் வரக்கூடிய ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன். இந்தப் படத்தில், நெப்போலியன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காமெடிக்கு, சூரியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு நடிக்கின்றனர்.

0 comments:

Post a Comment