சுவையான உடன் தோசை-சமையல்

ஆட்டா மா தோசை

food image
வழங்கியவர் : Mrs. B. Narmatha
தேதி : செவ்வாய், 14/08/2007 - 07:48
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 2/3 நபர்களுக்கு


 • ஆட்டா மா - 2 கப்


 • ஓட் மீல்/வீட் பிரான் (Wheat Bran) - 1/2 கப்


 • பொடியாக வெட்டிய வெங்காயம் - 1/2கப்


 • செத்தல் மிளகாய் - 5


 • பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி


 • கடுகு - 1 தேக்கரண்டி


 • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 • உப்பு


 • தண்ணீர்

 • செத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.


 • பின்னர் எண்ணெயை சூடாக்கி அதனுள் பொடியாக வெட்டிய வெங்காயம், வெட்டிய செத்தல் மிளகாய், பெரிய சீரகம், கடுகு என்பவற்றைப் போட்டு தாளிக்கவும்.


 • ஆட்டா மா, ஓட் மீல்/வீட் பிரான், உப்பு என்பவற்றை போதுமான அளவு தண்ணீர் விட்டு தோசை மா பதத்திற்கு குழைக்கவும்.


 • பின்னர் அதனுள் தாளித்தவற்றைக் கொட்டிக் கலக்கவும்.


 • பின்னர் தோசைக் கல்லில் தோசைகளாக சுட்டு எடுக்கவும்


 • இது மிகவும் சுவையானது. இதனை சாம்பார், குழம்பு, பருப்பு என்பவற்றுடன் சாப்பிடலாம்.
இந்த தோசை dietஇல் உள்ளவர்களுக்கும், டயபற்றிஸ் உள்ளவர்களுக்கும் நல்லது. இந்த தோசையை கரைத்தவுடன் சுட வேண்டும். அப்போதுதான் வார்ப்பதற்கு இலகுவாக இருக்கும். ஓட் மீல்/வீட் பிரான் (Wheat Bran) சேர்த்திருப்பதால் நேரம் செல்லச் செல்ல மா களியாகிவிடும். வார்ப்பது கஷ்டம். ஆனாலும் சிறிது தடிமனான அடை போல சுட்டு எடுக்கலாம். அதுவும் சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment