ஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்புநோக்கு.

உலகில் பிறந்த மனிதர்களில் சிலர்சாதாரண மனித சிந்தனையில் இருந்து விலகிதாம் தீவிரே ஆஸ்திகர்கள் என்றும் அன்றில் தீவிர நாஸ்திகர்கள் என்றும் காட்டிக்கொண்டு வேறுபட்டு நிற்பார்கள்.

இந்த ஆஸ்திகர்களில் சிலர்தாம் கடவுள்கடவுளின் அவதாரம்கடவுளின் மைந்தர்கடவுளைக் கண்டவர்,கடவுளை உணர்ந்தவர்கடவுளுடன் கதைப்பவர்,  கடவுளின் அருள் பெற்றவர் என்று தங்களைப் பிரபல்யப் படுத்திக் கொள்வதில் முன் நிற்பார்கள். இவர்கள் ஏதோவெல்லாம் வேண்டிக் கடவுளை எந்நேரமும் வழிபட்டுக்கொண்டே இருப்பார்கள். அத்தோடுகடவுளின் அனுக்கிரகத்தினால் அவர் பக்தர்களின் நோய்களைத் தீர்த்துகஷ்டங்களை நீக்கிப் பெருவாழ்வுநெடுங்காலம் வாழ உதவுவதாக ஆசீர்வதிப்பார்கள்.

ஆனால் நேர்மாறாகநாஸ்திகர் எனப்படுவோர் கடவுளை மறுத்துஅப்படி ஒருவர் இல்லைமனித வாழ்வுக்கு கடவுள் என்று ஒன்று தேவை இல்லைஇந்தக் கடவுள் கொள்கை எல்லாம் சுத்தமான ஏமாற்று விளையாட்டுகள் என்று பறை சாற்றிக் கொள்வார்கள். இவர்களில் சிலர் கடவுள் சின்னங்களை அவமதித்து,  உருவங்களை உடைத்தெறிந்து காட்டிய பின்னரும்தாம் என்றென்றும் மகிழ்ச்சியாகவே வாழ்வதாகக் காட்டித் தம் கூற்றை நிலை நிறுத்தி நிற்பார்கள்.

ஆதலால்எமக்குத் தெரிந்த சில ஆஸ்திக- நாஸ்திக வாதிகளின் தேக சுகம் மற்றும் ஆயுள் பலம் என்பனவற்றை ஒரு சின்னதாகப் பட்டியல் இட முயல்கின்றேன்.

ஆஸ்திகர்கள்:

இராமகிருஷ்ணர்: யோகி.
ஆன்மீக உணர்வை வளர்த்தவர்.
49 வயதில் குரல் அடைத்துதொண்டையில் புற்று நோய் கண்டு சிகிச்சை பலனளிக்காது 50 வயதில் இறந்தார்.

விவேகானந்தர்: துறவி.
 இந்து மத தத்துவங்களை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்.
ஆஸ்த்மாசர்க்கரை நோய்தூக்கமின்மை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்துமூளைக் கலங்கள் தெறித்து தியானம் செய்கையில் 39 வயசில் காலமானார்.

முகமது நபி: தேவ தூதன்.
இஸ்லாம் மத ஸ்தாபகர்.
மதம் பரப்புவதற்காக எந்நேரமும் போர் புரிவதுகொலை செய்வது என்று வாழ்ந்துநெடும் காலமாக ஜுரம்தலை இடிபலவீனம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டு 62 வயசில் இறந்தார்.

இயேசுநாதர்: தேவ மகன்.
கிறீஸ்தவ மத ஸ்தாபகர்.
இவரது 12 இலிருந்து 30 வயதுகால சரித்திரம் மறைக்க்ப்பட்டது போலவே ஏற்பட்ட சுகயீனங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறுதியில்தெய்வ நிந்தனை செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு33 வயசில்சித்திரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.

சத்திய சாய் பாபா: தேவ அவதாரம்.
ஆன்மீக ஒளி பரப்பியவர்.
 37 வயசில் ஒரு பக்கவாதம்4 மாரடைப்பும்77 வயசில் கதிரை இவர்மேல் விழுந்து இடுப்புஉடைந்துகடைசியாக மரணிக்கும் தருணத்திலும் [மாரடைப்பு]பேஸ் மேக்கர் பொருத்தியே இருந்தார். சக்கர நாற்காலியில் வாழ்ந்துசுவாச நோயினால்அவர் முற்கூறிய 96 வயசுக்குப் பதிலாக 84 வயசிலேயே இறந்தார்.

பஹஉல்லா: தேவ தூதன்.
பஹாய் மத ஸ்தாபகர்.
இறை நிந்தனை செய்தவர் என்று கடைசி 24 வருடங்களையும் சிறையினுள் அல்லது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 75 வயசில் ஜுரத்தினால் மரணித்தார்.

ஒசாமா பின் லாடன்: மதம் பரப்பி
தீவிர இஸ்லாம் மதம் பரப்பியவர்.
இவர் சௌதி அரேபியாவில் பிறந்தாலும்இவரது பயங்கர வாதத்தினால் பெரும்பாலும் நாடற்றவராக உலகத்திற்கு ஒழிந்து தலைமறைவாக வாழ்ந்தார். சிறுநீரகசர்க்கரை வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதியில் 54 வயசில் இவர் ஒழிந்திருந்த வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

போப் பெனடிக்ட் -16 : கத்தோலிக்கரின்  தலைவர்:
எட்டு வருட மதத் தலைவர்.
கடவுளுக்கு அடுத்தவராகக் கருதப் படுபவர். பக்கவாதம்இதயச் சீரின்மை வியாதியுடன் 88 வயசில் வாழ்கின்றார்.

நாஸ்திகர்கள்:

ஈ.வே. ரா: சமூக ஆர்வலர்.
கடவுள் சிலைகளையே உடைத்தவர்.
சொல்லக்கூடிய பெரு நோய்கள் ஒன்றும் இல்லாமல்94 வயதில் வந்த குடலிறக்க நோயினால் இறந்தார்.

அண்ணாதுரை: அரசியல்வாதி.
பேச்சுத் திறமையால் மக்களை இழுத்தவர்.
இரைக்குழாயில் வந்த புற்று நோயினால் 60 வயசில் இறந்தார்.

M G R : நடிகர்.
நடிப்பிலும்அரசியலிலும் ஏழைகளின் தோழன்.
67 வயசில் சிறுநீரகக் கோளாறும் சர்க்கரை நோயும் வந்து 70 வயசில் இறந்தார்.

M .R . ராதா: நடிகர்.
சினிமாநாடக நடிப்பில் உச்சம் அடைந்தவர்.
மஞ்சள் காமாலை நோய் வந்து 72 வயசில் இறந்தார்.

கமலஹாசன்: நடிகர்.
கசவுள் மறுப்பாளர். கடவுள் என்று ஒருவர் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்பவர். சிறு சர்க்கரை நோய் தவிர61 வயசிலும் நல்ல சுக ஜீவியாய் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்.

ஆபிரஹாம் கோவூர்: பேராசிரியர்.
தெய்வ சக்தி தங்களுக்கு இருக்கின்றது என்று கூறும் மனிதர்களுக்குச் சவால் விட்டவர். கடவுள்பேய்பிசாசு,மந்திரம்சூனியம்சாத்திரம் என்று கூறுவோருக்கு லட்சக்கான ரூபாவை (இப்போது கோடிக்கணக்கு!) பணயமாக வைத்து நிறுவிக் காட்டச் சொன்னவர். நல்ல சுகமாகவே வாழ்ந்து 80 வயசில் காலமானார்.

மொத்தத்தில்நமக்குத் தெரிந்த ஒரு சில ஆஸ்திகர்களினதும்நாஸ்திகர்களினதும் வாழ்க்கைகளைப் பார்த்தால்,கடவுளோடு ஒட்டியவர்களுக்கு  ஆரோக்கியமான நீடிய ஆயுள் கிடைக்கும் என்றோஅல்லது கடவுளை ஒதுக்கியவர்களுக்கு நோய் நொடியுடன் கூடிய குறுகிய ஆயுளே கிடக்கும் என்றோ நியதி இல்லை என்பது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.

கடவுள்பால் அல்லும் பகலும் ஓயாத தொழுகைகளோ அல்லது நிந்தனைகளோ உங்கள் சுகத்தையோ ஆயுளையோ மாற்றப் போவது இல்லை.

ஒவ்வொரு சாராரும் தாங்கள் கடைப்பிடிப்பதே சரி என்று முழு மனத்துடன் நம்பிக்கை வைத்துச் செயற்படுவதினால் ஏற்படும் மனோதத்துவ ரீதியான திருப்திதான் அவரவரை  அவர்களின்  வாழ்க்கையை சுமுகமாக இட்டுச்செல்ல வழி வகுக்கின்றது.

இதை விளக்க ஒரு கடவுள் வருமா?


வரும்........ஆனால் வராது!
  ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்

0 comments:

Post a Comment