போலிவேஷம்

உன்  பொய்யான  பாசம்புரியாத  வரை
நீ  எனக்கு  கிடைத்த
உண்மையான  உறவு  என  க்கொண்டு
உன்னுடைய  இன்பம்
என்னுடைய  கனவாக  எண்ணி
என்  உயிரிலே  உனை  இணைத்து வைத்தேன்
நீ  பொழியும்  அன்பு  வார்த்தை
என்  மனதின் மன அழுத்தத்தை நீக்கி
ஆயிரம்  இன்ப  கனவுகளை  உருவாக்கிச் செல்லும்.
இதனால்  சலனம் இன்றி என் வாழ்வும் நகர்ந்தது.

இருந்தாலும் காரணம் இன்றி
நீ என்னுடன் பேசாமல் சென்ற போது தான்
உன் போலியான அன்பை
என்னால் புரிய முடிந்தது
எம் இமையும் மூட மறந்து
உன் காதலுக்கு என்னை அடிமையாக்கி சென்றது
என் மனதை சமாதான படுத்த முயன்றும் பெண்ணே
அது மட்டும்  முடியாமல்
ஒரு வழி பாதையில் தத்தளிக்கிறேன் .
                    அகிலன்,தமிழன்                       

0 comments:

Post a Comment