அன்று நம் ஊர்.....இன்று.(கனடாவிலிருந்து...)


       
ஒரு கடிதம் 
                             15-02-2012  
அன்புள்ள அப்புவுக்கு                       
நான் நலம்.அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.
உங்கள் கடிதம் கிடைத்தது.யாவையும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
அப்பு,ஊரில் வீட்டில் ஆட்கள் இல்லாவிடில் வீட்டின் கூரை வரையில் களவு போகிறது என எழுதியிருந்தீர்கள்.எனக்கு ஞாபகம் இருக்கிறது.நான் சிறியவனாக இருக்கும்போது எமது வீட்டின்
திறந்தவெளிவிராந்தையில் சுவர்க்கடிகாரம்,வானொலிப் பெட்டி மட்டுமல்ல மாட்டுக்கொட்டிலில் மண்வெட்டி முதலான ஆயுதங்களும்,நீர் இறைக்கும் இயந்திரம் முதலான உதிரிப் பாகங்களும் யாரும் எடுக்கக் கூடிய வகையில் இருந்தும் அவை களவு போனதில்லை என்பதனை எண்ணிப் பார்க்கிறேன்.எத்தனை நாட்கள் வெளியூர் என்றும் திருவிழா என்றும் வீட்டைவிட்டு சென்று சந்தோசமாக வீடு திரும்பியிருப்போம்.மேலும்,நான் கல்வி கற்றுக்கொண்டிருந்த என் இளமைக் காலத்தினை எண்ணிப் பார்க்கிறேன்.இரவு 9 மணிவரையிலானதும் காலை 5 மணியிலாரம்பிக்கும் மேலதிக வகுப்புக்களுக்கும்
எந்த வித பயமுமின்றி இளம் பெண்களும் ஆண்களும்சென்று படித்து வந்தோம்.அன்று இருந்த பயமற்ற வாழ்வினை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால்,தற்போதோ பிள்ளைகளை பகலில் பாடசாலை அனுப்பிய பெற்றோர்கள்,அவர்கள் வீடு திரும்பும்வரை வயிற்றினில் நெருப்பினை கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் என  குறிப்பிட்டிருந்தீர்கள். எப்படி இருந்த ஊர்,போர்ச் சூழலால் எப்படி மண்ணாய் போய் விட்டதினை எண்ணி வருந்துகிறேன்.
       அப்பு,இந்தவேளையில் நான் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.இதே போர்ச்சூழலால் வெளிநாடுகளில் வந்து குடியேறி வாழும் எம்மூரவர்களின் பிள்ளைகளில் பெரும்பான்மையோர்  கல்வித்துறையில்  சாதனைகள் படைத்து பட்டப்படிப்புகளையும் முடித்துக்கொண்டு இருக்கின்றனர்.இந்த வகையில் நான் எம் ஊர் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப் படுகின்றேன்.
        அப்பு,உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.உங்கள் சுகத்தினையும்,தேவைகளையும் தொடர்ந்து எழுதுங்கள்.
இப்படிக்கு
உங்கள் மகன்
ம.வேந்தன்.

0 comments:

Post a Comment