நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
கணவன்: இன்று என்ன ஸ்பெஷல் வைத்து இருக்கிறே?
மனைவி: நான் கோபப்படல… அதுதான் இன்று ஸ்பெஷல்!
-02-
காதலன்: "நான் உனக்காக நிலாவைக் கூட வாங்கி தருவேன்!"
காதலி: "அவ்வளவு தூரம் வேண்டாம்… இன்று பக்கத்து ஹோட்டலிலை பிரியாணி வாங்கி தந்தால் போதும்!"
-03-
நோயாளி: “டாக்டர், எனக்கு ஏன் எப்போதும் தலைச் சுற்று வருகுது”?
டாக்டர்: “சாப்பாட்டுக்கு முன், பின் என்ன சாப்பிடுறீங்க?”
நோயாளி: “பாட்டி தருவார் சாப்பிடுறேன் டாக்டர்…”
டாக்டர்: “பாட்டி உணவா?… அதான் சுழலுது!”
-04-
டாக்டர்: “உங்களுக்கு டென்ஷன் அதிகமா இருக்கு. யாராவது கவலைப்பட வச்சாங்களா?”
நோயாளி:: “ஆமாம் டாக்டர்… என் மனைவி!”
டாக்டர்: “ஓ…அப்ப இந்த ட்ரீட்மெண்ட் காலம் எல்லாம் செய்யவேணும்”
-05-
பேஷண்ட்: “டாக்டர், இரவு தூக்கம் வரலே…”
டாக்டர்: “டிவி பார்த்து படுக்குறீங்களா?”
பேஷண்ட்: “ஆமாம்!”
டாக்டர்: “அதுதான்… தமிழ் சீரியல் பாத்தா தூக்கமே வராது!”
-06-
போலீஸ்: “கார் ஸ்பீடு அதிகமா இருந்துச்சு!”
டிரைவர்: “சார், கார் தான் ஓடியுச்சு…காரிடம் கேளுங்க!”
-07-
போலீஸ்: “பைக்-ல லைட் ஏன் இல்ல?”
ஆண்: “சார்… ரொம்ப மழையால பவர் கட் சார்!”
-08-
ஆசிரியர்:“ஏன்டா காலேஜுக்கு ஒழுங்காய் வருவதில்லை?"
மாணவன்:“சார்… நீங்க தானே படிப்பித்தீர்கள் 'நித்தம் போனால் முற்றம் சலிக்கும்' என்னு.
-09-
ஆசிரியர்: வகுப்பிலே ஒருநாளாவது அமைதியாக இருக்கமாட்டியா?
மாணவன்:“சார்…அமைதி எனக்கு அலர்ஜி சார்!
-10-
ஆசிரியர்: “உன் handwriting ஏன் இப்படி மோசமாயிருக்கு?”
மாணவன்: “சார்…நான் எதிர்காலத்தில ஒரு டொக்டர் ஆக வருவேன் எண்டு என் கையெழுத்தே எடுத்துக் காட்டுது அல்லவா!
-11-
ஆசிரியர்: “Exam-க்கு என்ன பண்ணின?”
மாணவன்: “சார்…விடைபேப்பர்ல இருக்கிற தவறுகள் உங்க கண்ணில அவை படக் கூடாது என்று வேண்டி கோயில் உண்டியலில் காசு போட்டேன் சார்!”
-12-
நர்ஸ்: “டாக்டர், நோயாளி ஓடிட்டார்!”
டாக்டர்: “என்ன நடந்தது?”
நர்ஸ்: நீங்க கொடுத்த bill தான் சேர்.
-13-
நர்ஸ்: “டாக்டர்… இந்த நோயாளி எப்போதும் சிரிச்சுக் கொண்டே இருக்கிறார்.”
டாக்டர்: “அவருக்கு இன்னும் நம்ம bill கொடுக்கவில்லை அதுதான்!”
-14-
நர்ஸ்: “டாக்டர், ஆபரேஷனுக்கு முதல், அதுக்குத் தேவையான கருவிகள் எண்ணிக்கை சரியோ என்று பார்த்திர்களா?”
டாக்டர்: “கவலைப்படாதீங்க, ஒன்று, இரண்டு தவறினாலும் நான் சமாளித்து ஆபரேஷசனை முடித்துடுவேன்!”
-15-
நர்ஸ்: “டொக்டர், டொக்டர் ஆப்பரேஷன் செய்யிற கருவியில ஒன்றைக் காணவில்லை.''
டொக்டர்: ''பதற்றப்படாதீங்க! யாராச்சும் ஏற்கனவே ஆப்பரேஷன் என்கிட்ட செய்தவங்கள் வயித்தில இருந்தா வயித்து நோ என்று என்னட்ட தானே வருவாங்கள். அப்ப திரும்பவும் ஒரு ஆபரேஷன் வருமானமும் ஆகுது, போன பொருளும் திரும்ப கிடைக்குது."
-16-
பயணி: பஸ் ஏன் அதிக வேகமா ஓடுது!
நடத்துனர்: பஸ்ஸில் பெற்றோல் முடியமுதல் போய் சேரவாம்!
பயணி: கடைசியில எங்களைத்தான் மேல கொண்டுபோய்ச் சேர்க்கப்போறார்.!!
-17-
மருத்துவர்: உங்கள் memory குறைவா இருக்கு.
தாத்தா: அதான் நான் பாட்டி பேசுறதை அப்ப , அப்ப மறந்துடுறேன்! அதால நாம் இப்பதானே சந்தோசமா இருக்கிறோம்.
-18-
மருத்துவர்: தினமும் walking போங்க.
தாத்தா: பாட்டிக்கு முன்னாலே தினமும் ஓடுறது போதாதா டொக்டர்?
-19-
மருத்துவர்: பாட்டி, உங்கள் காது hearing குறைவு போல?
பாட்டி: ஆமா.. அதை மனுஷன்கிட்ட அழுத்திச் சொல்லுங்க! நானும் அவரை ignore பண்ண இதுதான் நல்ல வழி!
-20-
பேரப்பிள்ளை: பாட்டி, நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க!
பாட்டி: அடப்பாவி! உன்னுடைய அப்பா உன் அம்மாவிடம் பொய் சொல்லுறதைப் பார்த்து நீயும் பழகிவிட்டாயா?
ஆக்கம்::செ . மனுவேந்தன்
0 comments:
Post a Comment