நகைச்சுவை=ஜோக்ஸ்
01.
மனைவி: இந்த வீட்டுல யாருக்குத்தான் புத்தி இருக்கோ தெரியல!
கணவன்: உனக்குத்தான் தான்! இல்லன்னா என்னை கல்யாணம் பண்ணுவையா?
02.
போலீஸ்: உன் plan என்ன?
குற்றவாளி: Google Map-ல save பண்ணிருக்கேன் சார்!
03.
போலீஸ்: ஏன் திருடினே?
குற்றவாளி: GST கூடிப் போச்சு சார்!
04.
மனைவி: என்ன சாப்பாடு பண்ணனும்?
கணவன்: நீ சமைக்குறதை தவிர ஏதாவது!
05.
நோயாளி: எனக்கு நினைவறிவு குறைவாக இருக்கு டாக்டர்!
டாக்டர்: எப்ப தொடங்குச்சு?
நோயாளி: என்ன தொடங்குச்சு எண்டு
கேக்கிறியள் டொக்டர்?
06.
நோயாளி: சார், எனக்கு ஏன் எப்போதும் தலையில வலிக்குதே?
டாக்டர்: உங்க Wi-Fi எப்பொழுதும் ON இலை தான் இருக்குமா?
07.
நோயாளி: என் மனைவி பேசாம இருக்குறாங்க!
டாக்டர்: Congrats! நீங்க உலகத்தில் ஒரே சந்தோஷ நோயாளி!
08.
நோயாளி: டொக்டர் என்னால கால் நீட்டி நடக்க முடியல!
டாக்டர்: கீழ பாருங்க… உங்க காலில் செல்போன் charger வயர் பின்னியிருக்கு!
09.
நண்பர் 1: நீ உண்மையிலே ராமன்டா?
நண்பர் 2: எப்பிடி சொல்லுறே?
நண்பர் 1: உன்ர மனுஷியை, வருஷத்தில 14 வாரம் தாய் வீட்டுக்கு அனுப்பிடுவாயே!
10.
நண்பி 1: நீ ஒரே அழகா இருக்கே!
நண்பி 2: நன்றி!
நண்பி 1: கோமாளி உடுப்பு போட்ட மாதிரி!
11.
நண்பி 1: நான் அவனிடம் propose பண்ணலாமா?
நண்பி 2: முதல்ல கண்ணாடியில உன்னை பாரு!
12.
நண்பி 1: உன் Hair style நன்றாக இருக்கு!
நண்பி 2:நன்றி!
நண்பி 1: நான் என்னோட Dog-க்கு இதே style போட்டேன்!
13.
மாமியார்: இன்னைக்கு காலையில் எழுந்ததும் டீ குடிக்கணும் போல இருக்கு.
மருமகள்: ஆமாம் அத்தை, அதனாலதான் காஃபி போட்டேன்!
14.
மாமியார்: இந்த கால பிள்ளைகள் எல்லாம் டிவி க்குள்ள தான் இருக்கினம்.
மருமகள்: இந்தக் கால அத்தைமாரு மட்டும் என்ன குறைச்சலா? அந்த டிவி நாடகத்துக்குள்ள தானே கிடக்கினம்.
15.
மாமியார்: நம்ம கொம்பனியில சம்பளம் தரலையென்று வேலைநிறுத்தம் செய்யப்போறாங்களாம்.
மருமகள்: அத்தை, உங்க பையன்கூட நான் செய்யிற வீட்டு வேலைக்கு மாதம் சம்பளம் தர்றதில்லை! அப்பிடித்தான் நானும் யோசிக்கிறன்.
16.
மாமியார்: கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய வேலை
செய்தியா?
மருமகள்: அத்தே, சரியான டிரெய்னிங்
தான்... உங்களை சமாளிக்க!
17.
மாமியார்: காலையில நீ ரொம்ப தாமதமாய் நித்திரைவிட்டு எழும்பினாயே, ஏன் ?
மருமகள்: அத்தை, நீங்க இரவு முழுக்க நல்ல குறட்டை அடிச்சீங்க! அதை ரசித்துக்கொண்டிருந்தேன்.
18.
முதலாளி: நீ வேலைக்கு லேட்டா வந்ததுக்கு என்ன காரணம்?
தொழிலாளி: டிராபிக் ஸார்.
முதலாளி: நீ ஓன்லைன்ல தானே வேலை பாக்கிறாய்?
தொழிலாளி: வீட்டில் WiFi-க்கு டிராபிக் சிக்கிச்சி ஸார்!
19.
பாட்டி: எனக்கு Instagram போட்டோ வைரலாயிருச்சு!
பேத்தி: என்ன பாட்டி! நீயும் reels போடுறீங்களா?
பாட்டி: ஆமா! உன் நாய்க்கு நீ போட்ட உடுப்பை நான் போட்டுட்டு தான் reels போட்டேன்!
20.
ஆசிரியர்: ஏன் Late-ஆ வந்தாய்?
மாணவன்: Sir, Google Map பிழையான பாதை காட்டிச்சு.
தயாரிப்பு:செ. மனுவேந்தன்
0 comments:
Post a Comment