விட்டமின் பி12 குறைந்தால் உடலில் என்ன நிகழும்?

 சைவ உணவாளர்கள் இதை எப்படி பெறுவது?

கோபாலமின் (Cobalamin) என்று அழைக்கப்படும் விட்டமின் பி12 என்பது விட்டமின் பி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான விட்டமின். இது அதிகமாக விலங்கு சார் உணவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

 

உடல் ஆரோக்கியத்துக்கு விட்டமின் பி12-ன் பங்கு என்ன?

1. இரத்த சுழற்சிசிகப்பு இரத்த அணுக்களின் (Red Blood Cells) உருவாக்கம்:

விட்டமின் B12 சிகப்பு இரத்த அணுக்களை (RBCs) உருவாக்க உதவுகிறது. இது இல்லையென்றால், அநீமியா (anemia) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


✅ 2. நரம்பியல் சுகாதாரம் (Nervous System Health):

  • நரம்புகளின் சுற்றுப் பகுதியான மையலின் (Myelin) செம்பட்டை உருவாக்க B12 தேவையாகும்.
  • இது நரம்புகள் சரியாக தகவல்களை பரிமாற உதவுகிறது.
  • B12 குறைவால் கை, கால் மரவுத்தன்மை, மங்கிய உணர்வு, வலிகள் போன்றவை ஏற்படலாம்.

✅ 3. மூளைச் செயல்பாடு (Brain Function):

  • நினைவு, ஒருமைப்படுத்தல் (concentration), மற்றும் மனநிலை ஆகியவற்றைடமின் B12 பாதிக்கக்கூடும்.
  • குறைவால் மன அழுத்தம், மனநிலை சீர்கேடுகள், மற்றும் மதிப்பிழப்பு ஏற்படலாம்.

✅ 4. DNA உற்பத்தி:

  • நமது உடலில் புதிய செல்கள் உருவாக DNA தேவைப்படுகிறது.
  • விட்டமின் B12 இல்லாமல் DNA உருமாற்றங்கள் ஏற்படலாம், இது செல்கள் தவறாக உருவாக வழிவகுக்கும்.

✅ 5. ஆற்றல் மற்றும் சக்தி:

  • B12, உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளை மாற்றி, உடலுக்கு ஆற்றல் அளிக்க உதவுகிறது.
  • B12 குறைவால் நம்ப முடியாத அளவுக்கு சோர்வு, தூக்கமின்மை ஏற்படலாம்.

 

எந்த வயதினருக்கு எவ்வளவு விட்டமின் பி12 தேவை?

2020-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிறந்த குழந்தை முதல் 3 வயதான குழந்தைகள் வரை, நாள் ஒன்றுக்கு 1.2 மைக்ரோ கிராம் விட்டமின் பி12 ஊட்டச்சத்தை உணவில் கொண்டிருக்க வேண்டும்.

 

ஆறு முதல் 18 வயதினருக்கு இந்த ஊட்டச்சத்து நாள் ஒன்றுக்கு 2.2 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விட்டமின் பி12-ன் தேவை அதிகமாக இருக்கலாம்.

 

யார் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்?

பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் உண்ணாமல் 'வீகன்' உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விட்டமின் பி12 பற்றாக்குறையால் பாதிப்பைச் சந்திப்பார்கள்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைப்பாட்டால் பாதிக்கப்படும் நபர்களும் விட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்பட நேரிடும்.

விட்டமின் பி12 என்பது நீரில் கரையக்கூடிய (Water Soluble) விட்டமின் ஆகும். இது எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால் சில இணை நோய்களுக்காக மருந்துகளை உட்கொள்ளும் போது விட்டமின் பி12- உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்படும். இதன் காரணமாகவும் பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

இதுமட்டுமின்றி வயிற்றில் புற்றுநோய் இருக்கும் போதோ, ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது அல்சர் போன்ற நோய்களுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ பி12- உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு, பி12 பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

அதுமட்டுமின்றி, வகை இரண்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களும் இத்தகைய விட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும்.

பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

"நரம்பு மண்டலம் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக விட்டமின் பி12 இருப்பதால், இதன் பற்றாக்குறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,"

 

"பி12 பற்றாக்குறையால் இரத்த சோகையில் பெர்னிசியஸ் அனீமியா (pernicious anemia) என்ற பிரச்னை ஏற்படும்.”

 

‘நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், சமநிலையற்ற தன்மை, தலைசுற்றல், பலவீனம் அடைதல், மூச்சுப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.’

 

மேலும், ‘இதன் பற்றாக்குறை மிகவும் தீவிரமாக இருக்கும் போது, இரத்தத்தில் ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) அளவு அதிகமாகும். அளவுக்கு அதிகமாக ஹோமோசிஸ்டெய்ன், ‘ஹைப்பர்ஹோமோசிஸ்டெய்னீமியா (hyperhomocysteinemia) என்ற குறைபாடு ஏற்படும். இதனால் கார்டியோ வாஸ்குலர் என்ற இருதய நோய் ஏற்படக் கூடும்’.

 

உணவு இல்லாமல் மருந்து மாத்திரைகள் மூலமாக பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ளும் மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படி செய்யக் கூடாது. தொடர்ச்சியாக பி12 சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்வது இது போன்ற அபாயங்களில் இருந்து மக்களை காப்பாற்றும்.

 

விட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள்

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் விட்டமின் பி12 கிடையாது. விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களில் விட்டமின் பி12 அதிகமாக காணப்படுகிறது.

 

எந்தெந்த உணவுகளில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது என்பதைப் பற்றி விளக்கிய மருத்துவர் மீனாட்சி, அதனை பின்வருமாறு பட்டியலிட்டார்.

 

சிலர் சைவமாக இருந்தாலும் அவர்கள் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கும் போது எத்தகைய பிரச்னையும் இல்லை.

அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு முட்டையை கட்டாயமாக எடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படாது.

ஆனால், மாமிச உணவுகளான, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன்களில், குறிப்பாக கானாங்கெளுத்தி, சாலமன், சூரை மீன்களில் விட்டமின் பி12 செறிவுடன் காணப்படுகிறது.

மாட்டிறைச்சியில் குறிப்பாக அதன் ஈரலில் விட்டமின் பி12 அதிகமாக உள்ளது. எனவே, விட்டமின் பி12 பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரும்புபவர்கள் இந்த உணவை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், செரல்கள் போன்ற செறிவூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளலாம். மாட்டுப்பால் இல்லாத இதர பால் வகைகளை (non-dairy milks) உட்கொள்ளலாம். மேலும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செயலிழக்கப்பட்ட ஈஸ்ட்டைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளேக்ஸை உணவாக உட்கொள்ளலாம்.

 

நன்றி-ஆதாரம்: பி.பி.சி.தமிழ்

0 comments:

Post a Comment