:பகுதி:16
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]
[This detailed Tamil article is based on the unfinished
historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran,
a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]
பகுதி: 16 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'முதல் முடிசூட்டு விழா முடிந்து ஆறு மாதங்களில், இரண்டாவது முடிசூட்டு விழா?'
தேவநம்பியதிஸ்ஸ மன்னராக முடிசூட்டு விழா செய்யப்பட்டபோது, பல அதிசயங்கள் நடந்தன. பல விலைமதிப்பற்ற, அரிய பொருட்கள் தானாகத் நிலத்திலும் கடற்கரையிலும் தோன்றின. இது பற்றிய விபரங்களை, தீபவம்சம் மற்றும் மகாவம்சம் அத்தியாயம் 11 ஐப் பார்க்கவும். அசோக மன்னன் தான், அந்த அரிய பொருட்களுக்கு தகுதியானவர் என்று தேவநம்பியதிஸ்ஸ கருதி, அவைகளை அசோகரிடம் அனுப்பினார். அதற்குப் பதிலாக, அசோகன் தானும் தேவனம்பியதிஸ்ஸனுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பியதுடன், இலங்கை அரசன் தேவநம்பியதிஸ்ஸனை இரண்டாவது முடிசூட்டு விழாவை நடத்தும்படி கேட்டுக் கொண்டார். எனவே தேவநம்பிய தீசன் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முடிசூட்டு விழாவை முதலாவது நடந்து ஆறு மாதத்தால் நிறைவேற்றினார் என்று இலங்கை நாளாகமம்கள் கூறுகின்றன. இங்கு தான் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது.
அந்தக் காலத்தில் கடல் மார்க்கமான தூர இடத்து, நாட்டுக்கு நாடு [அல்லது போக்குவரத்து] வியாபாரம், மிகக் குறைவு. மேலும் தாம்ரலிப்தா [port Tamralipti] துறை முகத்தில் இருந்து எதாவது ஒரு கப்பல் புறப்படுவதை காண்பதும் இன்னும் ஒரு பிரச்சனை. இது தற்காலத்தைய மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தம்லக் எனுமிடத்தில் இருந்ததாக நம்பப் படுகிறது. அது மட்டும் அல்ல, அன்றைய காலத்தில் காற்றின் துணையுடன் தான் கப்பல்கள் நகர்ந்தன. எனவே போவதற்கு தென்மேற்கு பருவக்காற்றும், திரும்பி வருதலுக்கு வடகிழக்கு பருவக்காற்றும் தேவை. அது மட்டும் அல்ல, அவர்கள் ஏறத்தாழ 300 மைல்கள், மகத இராச்சியத்தின் தலைநகரம் பாடலிபுத்திரம் [Pataliputra] போக நடக்கவும் வேண்டும். இது ஒரு பக்க தூரமே. எனவே, எல்லா காலநிலையும் சரியாக இருந்தால், ஒரு சுற்று பயணத்தை முடிக்க ஒரு ஆண்டு ஆவது கழியும்.
அது மட்டும் அல்ல, தேவநம்பிய தீசன் அனுப்பிய பரிசு பொருட்களுடன் வந்த தூதுவர்கள், அங்கே, பாடலிபுத்திரத்தில் ஐந்து மாதம் நின்றதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. எனவே முதலாவது முடிசூட்டு விழாவின் பின் இலங்கையை விட்டு வந்தவர்கள், ஐந்து மாதம் தங்கிய பின், அசோகனின் செய்தியுடன் எப்படி ஆறு மாதத்துக்குள் திரும்பி போனார்கள் என்பது நம்பமுடியாத கற்பனையே! தேவநம்பியதிஸ்ஸ தனது இரண்டாவது முடிசூட்டு விழாவை ஆறு மாதங்களுக்குப் பிறகு நடத்தினார் மற்றும் மிகப் பெரிய இந்தியப் பேரரசுடன் தேவநம்பியதிஸ்ஸ நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பதும், ஆசிரியரின் ஒரு பொய்யான புகழ்ச்சி சோடனையாகவே இருக்க வேண்டும். என்றாலும் மறைந்த கலாநிதி எஸ்.பரணவிதான அதற்கு சில நொண்டிக் காரணங்களை கட்டாயம் கூறியிருப்பார்.
கலிங்கப் போருக்குப் பிறகு, பேரரசர் அசோகன் (கிமு 268–232) பௌத்த மதத்திற்கு மாறிய பிறகு, இரண்டாம் முறை, ஒரு தார்மீக மாற்றத்தையும் பௌத்த கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பையும் குறிக்கும் முகமாக ஒரு குறியீட்டு தர்ம முடிசூட்டு விழாவிற்கு உட்பட்டதாகக் அசோகவதனம் போன்ற புத்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ப ஏன் தேவநம்பியதிஸ்ஸாவும் இரண்டாம் முறை முடிசூட்டு விழா நடத்தினான் என்பதற்கு ஒரு காரணம் காண்கிறோம். அதாவது மீண்டும் ஒரு ஒற்றுமை இருவருக்கும் இடையில் ஏற்படுத்தப் பட்டிருப்பதைக் காண்கிறோம்! என்றாலும் ஆறுமாதத்துக்குள் முடிசூட்டு விழா மீண்டும் நடப்பதற்கு எந்த சாத்தியமும், நாம் சுட்டிக்காட்டியவாறு கட்டாயம் இல்லை.
*அடுத்த
பகுதியை வாசிக்க அழுத்துக...
Theebam.com: "அறிவியல் நோக்கில்....பெளத்தம் ஒரு அலசல்":பகுதி-17:
*ஆரம்பத்திலிருந்து
வாசிக்க அழுத்துக...
Theebam.com: "அறிவியல் நோக்கில்...."பெளத்தம் ஒரு அலசல் . " / பகுதி-01:
Part: 16
/ The Kings who ruled after Vijaya and the related affairs / 'Six months after
the first coronation, the second coronation took place?'
When Devanampiyatissa was consecrated as king, and many
miraculous things happened, and rare items came to him. Refer the chapter 11 of
the Dipavamsa and the Mahavamsa. Quite a lot of invaluable items appeared in
land and along the coast. Devanampiyatissa considered only the King Asoka was
worthy of those, and sent those to Asoka. Asoka in turn sent something in
return to Devanampiyatissa, and requested him to have a second coronation.
Devanampiyatissa, dutifully, had a second coronation six months after his first
coronation.
This is quite impossible from the travel logistics involved
in those days. Merchant ships were few in those days, and finding a one
departing to the port Tamralipti is another problem. There were no mechanised
vessels in those days, and the vessel had to take the South-West Monsoon to go
and return by the following North-East Monsoon. They had to walk from
Tamralipti, near the confluence of the River Ganges with sea, to Pataliputra,
about another three hundred miles one way and back to Tamralipti. It would have
taken more than a year even everything was favourable to complete the round
trip.
They also stayed at Pataliputra for five months. Devanampiyatissa had his second coronation
six months after the first is therefore not logistically possible, and it was quite
unwarranted to have the second coronation in six months of the first
coronation. This must be to flatter that Devanampiyatissa had close connection
with the greatest Indian Empire. Late Dr. S. Paranavitana would give some lame
duck reasons for it.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 17 தொடரும் / Will Follow
0 comments:
Post a Comment